Tamil Bible Quiz Jeremiah Chapter 25

Q ➤ 1427. யோயாக்கீமின் நாலாம் வருஷத்தில் யாருக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது?


Q ➤ 1428. எரேமியாவுக்கு எவர்களைக் குறித்து வார்த்தை உண்டானது?


Q ➤ 1429. நேபுகாத்நேச்சார் அரசாண்ட எத்தனையாவது வருஷத்தில் எரேமியாவுக்கு யூதாவைக்குறித்து வார்த்தை உண்டானது?


Q ➤ 1430. எத்தனை வருஷமாக எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானது?


Q ➤ 1431. யோசியாவின் எத்தனையாவது வருஷம் துவக்கி எரேமியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது?


Q ➤ 1432. எரேமியா கர்த்தருடைய வார்த்தையைச் சொல்லிக்கொண்டுவந்தும் கேளாதவர்கள் யார்?


Q ➤ 1433. யூதாவின் ஜனம் மற்றும் எருசலேமின் குடிகளிடம் கர்த்தர் எவர்களை ஏற்கெனவே அனுப்பிக்கொண்டு வந்தார்?


Q ➤ 1434. கர்த்தருடைய தீர்க்கதரிசிகளுக்கு தங்களுடைய செவிகளைச் சாயாமல் போனவர்கள் யார்?


Q ➤ 1435. யூதாவின் ஜனமும் எருசலேமின் குடிகளும் எவைகளைவிட்டுத் திரும்பும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் கூறினார்கள்?


Q ➤ 1436. எவர்களைப் பின்பற்றாமலிருக்கக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 1437. எவைகளுக்கு ஆராதனை செய்யாமலும் அவைகளைப் பணியாமலுமிருக்கக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 1438. யூதாவின் ஜனமும் எருசலேமின் குடிகளும் எவைகளால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கக் கூடாது?


Q ➤ 1439. கர்த்தர் தங்களுக்கு தீமைசெய்யாமலிருக்கும்படி, எவர்கள் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கக் கூடாது?


Q ➤ 1440. யூதா ஜனமும் எருசலேமின் குடிகளும் தங்களுக்குத் தீமையாக எவைகளாலே கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்?


Q ➤ 1441. கர்த்தர் யூதாவுக்கு விரோதமாக வடக்கேயிருந்து எவர்களை அழைத்தனுப்புவார்?


Q ➤ 1442. கர்த்தர் எதினால் சகல வம்சங்களையும் நேபுகாத்நேச்சாரையும் யூதாவுக்கு விரோதமாக வரப்பண்ணுவார்?


Q ➤ 1443. கர்த்தர் நேபுகாத்நேச்சாரை யார் என்று கூறினார்?


Q ➤ 1444. கர்த்தர் யூதாவையும் அதின் குடிகளையும் சுற்றிலுமிருக்கிற ஜாதிகளையும் எதற்கு ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 1445. இகழ்ச்சிக்குறி என்பது என்ன?


Q ➤ 1446. கர்த்தர் யூதாவையும் அதின் குடிகளையும் சுற்றிலுமிருக்கிற ஜாதிகளையும் எவைகளாகச் செய்வார்?


Q ➤ 1447. மகிழ்ச்சியின் சத்தத்தையும் சந்தோஷத்தின் சத்தத்தையும் கர்த்தர் எவர்களிலிருந்து நீக்கிப்போடுவார்?


Q ➤ 1448. மணவாளனின் சத்தத்தையும் மணவாட்டியின் சத்தத்தையும் கர்த்தர் எவர்களிலிருந்து நீக்கிப்போடுவார்?


Q ➤ 1449. எந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் கர்த்தர் எவர்களிலிருந்து நீக்கிப்போடுவார்?


Q ➤ 1450. எந்த தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்?


Q ➤ 1451. யூதா ஜனங்களும் எருசலேமின் குடிகளும் எவ்வளவு நாள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்?


Q ➤ 1452. 70 வருஷம் நிறைவேறினபின்பு கர்த்தர் எவர்களுடைய அக்கிரமத்தை விசாரிப்பார்?


Q ➤ 1453. 70 வருஷம் நிறைவேறினபின்பு கர்த்தர் எதை நித்திய பாழிடமாக்குவார்?


Q ➤ 1454. 70 வருஷம் நிறைவேறினபின்பு கர்த்தர் எதற்கு விரோதமாய்ச் சொன்னவற்றை அதின்மேல் வரப்பண்ணுவார்?


Q ➤ 1455. எரேமியா எவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதை கர்த்தர் பாபிலோன்மேல் வரப்பண்ணுவார்?


Q ➤ 1456. பாபிலோனை எவர்கள் அடிமைகொள்வார்கள்?


Q ➤ 1457. கர்த்தர் எவர்களுக்கு அவர்கள் கிரியைகளுக்கும் கைகளின் செய்கைகளுக்குத்தக்கதாயும் பதில் அளிப்பார்?


Q ➤ 1458. உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை எரேமியா யாருடைய கையிலிருந்து வாங்கவேண்டும்?


Q ➤ 1459. உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தில் யாருக்குக் குடிக்கக்கொடுக்க கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 1460. கர்த்தர் எரேமியாவை அனுப்பும் ஜாதிகள் குடித்து, எதினால் தள்ளாடி, புத்திகெட்டுப் போவார்கள்?


Q ➤ 1461. கர்த்தர் தன்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் எரேமியா எதைக் குடிக்கக் கொடுத்தார்?


Q ➤ 1462. எருசலேமும் யூதாவின் பட்டணங்களும் எப்படியிருக்கும்படி எரேமியா மதுபானத்தின் பாத்திரத்தை குடிக்கக்கொடுத்தார்?


Q ➤ 1463. சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும் எரேமியா எதை குடிக்கக் கொடுத்தார்?


Q ➤ 1464. பூமியின்மீதிலுள்ள சகல தேசத்து ராஜ்யங்களுக்கும் எரேமியா எதை குடிக்கக் கொடுத்தார்?


Q ➤ 1465. பூமியின்மீதிலுள்ள சகல தேசத்து ராஜ்யங்களுக்கும் பிற்பாடு உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தில் குடிப்பவன் யார்?


Q ➤ 1466. குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, கர்த்தர் அனுப்பும் பட்டயத்தால்


Q ➤ உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தில்


Q ➤ 1467. உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தில் குடித்துத்தீர வேண்டும் என்று சொல்லுகிறவர் யார்?


Q ➤ 1468. தீங்கைக் கட்டளையிட கர்த்தர் எங்கே துவக்குவார்?


Q ➤ 1469. பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் கர்த்தர் எதை வரவழைப்பார்?


Q ➤ 1470. உயரத்திலிருந்து கெர்ச்சித்தவர் யார்?


Q ➤ 1471. கர்த்தர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எதைக் காட்டுவார்?


Q ➤ 1472. கர்த்தர் எதற்கு விரோதமாய்க் கெர்ச்சிப்பார்?


Q ➤ 1473. ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல ஆர்ப்பரிப்பவர் யார்?


Q ➤ 1474. கர்த்தர் எவர்களுக்கு விரோதமாக ஆர்ப்பரிப்பார்?


Q ➤ 1475. பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டுவது எது?


Q ➤ 1476. ஜாதிகளோடே கர்த்தருக்கு இருப்பது எது?


Q ➤ 1477. மாம்சமான யாவரோடும் கர்த்தர் எதற்குள் பிரவேசிப்பார்?


Q ➤ 1478. கர்த்தர் துன்மார்க்கரை எதற்கு ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 1479. ஜாதிஜாதிக்குப் பரம்புவது எது?


Q ➤ 480. பூமியின் எல்லைகளிலிருந்து எழும்புவது எது?


Q ➤ 1481. பூமியின் ஒருமுனை துவக்கிப் பூமியின் மறுமுனைமட்டும் கிடப்பவர்கள் யார்?


Q ➤ 1482. புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் கிடப்பவர்கள் யார்?


Q ➤ 1483. அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகிறவர்கள் யார்?


Q ➤ 1484. அலறுங்கள் என்று யாரிடம் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1485. சாம்பலில் புரண்டு கதறவேண்டியவர்கள் யார்?


Q ➤ 1486. வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் எவர்களுடைய நாட்கள் நிறைவேறியது?


Q ➤ 1487. மேய்ப்பர்களும் மந்தையில் பிரஸ்தாபமானவர்களும் எதைப்போல விழுந்து நொறுங்குவார்கள்?


Q ➤ 1488. யார் ஓடிப்போகிறதற்கு இடமிராது?


Q ➤ 1489. எவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கு இடமிராது?


Q ➤ 1490. கர்த்தர் எதைப் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிற சத்தமுண்டாகும்?


Q ➤ 1491. தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் எவர்கள் அலறுகிற சத்தமுண்டாகும்?


Q ➤ 1492. மேய்ப்பர்களும் மந்தையில் பிரஸ்தாபமானவர்களும் சுகித்திருந்த தாபரங்கள் எதினாலே சங்காரமாயின?


Q ➤ 1493. பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப் போலிருப்பவர் யார்?


Q ➤ 1494. யாருடைய உக்கிரத்தினால் மேய்ப்பர்கள் மற்றும் மந்தையில் பிரஸ்தாபமானவர்களின் தேசம் பாழானது?


Q ➤ 1495. யாருடைய உக்கிர கோபத்தினால் மேய்ப்பர்கள் மற்றும் மந்தையில் பிரஸ்தாபமானவர்களின் தேசம் பாழானது?