Tamil Bible Quiz 2nd Samuel: 6

Q ➤ 197. தாவீது எத்தனை பேரைக் கூட்டிக் கொண்டு பாலையூதாவுக்குப் போனான்?


Q ➤ 198. தாவீது தேவனுடைய பெட்டியைக் கொண்டுவர எங்கே போனான்?


Q ➤ 199. தேவனுடைய பெட்டி எங்கே வாசமாயிருந்தது?


Q ➤ 200. சேனைகளின் கர்த்தருடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தாயிருந்தது எது?


Q ➤ 201. தேவனுடைய பெட்டியை எதின்மேல் ஏற்றினார்கள்?


Q ➤ 202. தேவனுடைய பெட்டியை யாருடைய வீட்டிலிருந்து கொண்டு வந்தார்கள்?


Q ➤ 203. அபினதாபின் வீடு எங்கே இருந்தது?


Q ➤ 204. தேவனுடைய பெட்டி இருந்த இரதத்தை நடத்திக்கொண்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 205. ஊசாவும் அகியோவும் யாருடைய குமாரர்?


Q ➤ 206. தேவனுடைய பெட்டிக்கு முன்னாலே நடந்தவன் யார்?


Q ➤ 207. கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனவர்கள் யார்?


Q ➤ 208. தாவீதும் இஸ்ரவேலரும் வைத்திருந்த கீதவாத்தியங்கள், தம்புரு, சுரமண்டலங்கள் எந்த மரத்தால் செய்யப்பட்டவை?


Q ➤ 209. எவ்விடத்தில் வந்தபோது மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தன?


Q ➤ 210. தேவனுடைய பெட்டி அசைந்தபோது தன் கையை நீட்டி அதைப் பிடித்தவன் யார்?


Q ➤ 211. கர்த்தருக்கு யார்மேல் கோபம் மூண்டது?


Q ➤ 212. ஊசாவை அடித்தவர் யார்?


Q ➤ 213. தேவன் எதினிமித்தம் ஊசாவை அடித்தார்?


Q ➤ 215. கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் விசனப்பட்டவன் யார்?


Q ➤ 216. கர்த்தர் ஊசாவை அடித்த இடத்துக்கு தாவீது என்ன பெயரிட்டான்?


Q ➤ 217. தாவீது எதினால் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டில் வைத்தான்?


Q ➤ 218. தாவீது கர்த்தருடைய பெட்டியை யாருடைய வீட்டில் வைத்தான்?


Q ➤ 219.ஓபேத்ஏதோமின் வீட்டில் கர்த்தருடைய பெட்டி எவ்வளவு நாள் இருந்தது?


Q ➤ 220. கர்த்தருடைய பெட்டியினிமித்தம் ஓபேத்ஏதோமின் வீட்டில் அனைவரும் பெற்றுக்கொண்டது என்ன?


Q ➤ 221. ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீது கர்த்தருடைய பெட்டியை எங்கே கொண்டு வந்தான்?


Q ➤ 222. தாவீது கர்த்தருடைய பெட்டியை எப்படி தன் நகரத்திற்குள் கொண்டு வந்தான்?


Q ➤ 223. பெட்டியைச் சுமந்தவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, தாவீது எவைகளைப் பலியிட்டான்?


Q ➤ 224. தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணியவன் யார்?


Q ➤ 225. தாவீது எதைத் தரித்துக்கொண்டு கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்?


Q ➤ 226. தாவீதும் இஸ்ரவேல் சந்ததியாரும் எதை கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டு வந்தார்கள்?


Q ➤ 227. தாவீது குதித்து, நடனம் பண்ணுகிறதைக் கண்டு தன் இருதயத்தில் அவமதித்தவள் யார்?


Q ➤ 228. கர்த்தருடைய பெட்டிக்காக தாவீது போட்டிருந்தது என்ன?


Q ➤ 229. கர்த்தருடைய பெட்டியை எங்கே வைத்தார்கள்?


Q ➤ 230. பெட்டியை ஸ்தானத்தில் வைத்தபோது சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டவன் யார்?


Q ➤ 231. பலிகளைச் செலுத்தியபின்பு கர்த்தருடைய நாமத்தினால் ஜனங்களை ஆசீர்வதித்தவன் யார்?


Q ➤ 232. தாவீது திரள்கூட்டமான ஜனத்துக்கு ஒவ்வொருவருக்கும் எவைகளைக் கொடுத்தான்?


Q ➤ 233. யார், தன் வஸ்திரங்களைக் கழற்றிப் போடுகிறதுபோல தாவீது தன் வஸ்திரங்களை உரிந்துபோட்டதாக மீகாள் கூறினாள்?


Q ➤ 234. தான் எதற்கு முன்பாக ஆடிப்பாடியதாக தாவீது கூறினான்?


Q ➤ 235. இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 236. தாவீதின் மனைவிகளில் யாருக்கு மரணமடையுமட்டும் பிள்ளை இல்லாதிருந்தது?


Q ➤ 237. தன் புருஷனை அவமதித்ததினால் பிள்ளையில்லாதிருந்தவள் யார்?