Q ➤ 238. தாவீதைச் சுற்றிலும் இருந்த எல்லா சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி இளைப்பாறப்பண்ணியவர் யார்?
Q ➤ 239. நாத்தான் என்பவன் யார்?
Q ➤ 240. தாவீது எந்த மரத்தினால் செய்யப்பட்ட வீட்டில் குடியிருந்தான்?
Q ➤ 241. திரைகளின் நடுவே வாசமாயிருந்தது எது?
Q ➤ 242.உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும் என்று நாத்தான் யாரிடம் கூறினான்?
Q ➤ 243. நான் கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 244.கர்த்தர் எதுமுதற்கொண்டு கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினார்?
Q ➤ 245. கர்த்தர் தாவீதை இஸ்ரவேல் ஜனங்களுக்கு யாராய் இருக்கச் செய்தார்?
Q ➤ 246. எவைகளின் பின்னே நடந்த தாவீதை, கர்த்தர் அதை விட்டெடுத்தார்?
Q ➤ 247. தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் யாரை அவனுக்கு முன் நிர்மூலமாக்கினார்?
Q ➤ 248. பூமியிலிருக்கிற யாருடைய நாமத்திற்கு ஒத்த நாமத்தை கர்த்தர் தாவீதுக்கு உண்டாக்கினார்?
Q ➤ 249. இஸ்ரவேலர் நியாயக்கேட்டின் மக்களால் சிறுமைப்படாதபடி அவர்களை நாட்டினவர் யார்?
Q ➤ 250. கர்த்தர் யாருக்கு வீட்டை உண்டுபண்ணுவார்?
Q ➤ 251. தாவீதுக்குப்பின் கர்த்தர் யாருடைய ராஜ்யத்தை நிலைப்படுத்துவார்?
Q ➤ 252. யார், கர்த்தருடைய நாமத்திற்கென்று ஆலயம் கட்டுவான்?
Q ➤ 253. தாவீதின் கர்ப்பப்பிறப்பானவனின்........ என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 254. கர்த்தர் தாவீதின் கர்ப்பப்பிறப்புக்கு தாம் யாராய் இருப்பேன் என்று கூறினார்?
Q ➤ 255. தாவீதின் கர்ப்பப்பிறப்பானவன் கர்த்தருக்கு யாராய் இருப்பான் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 256. தாவீதின் கர்ப்பப்பிறப்பானவன் அக்கிரமம் செய்தால் அவனை கர்த்தர் மனுஷனுடைய........தண்டிப்பார்?
Q ➤ 257. யார், அக்கிரமம் செய்தால் அவனை கர்த்தர் மனுபுத்திரனுடைய அடிகளால் தண்டிப்பார்?
Q ➤ 258. கர்த்தர் சவுலிடமிருந்து எதை விலக்கினார்?
Q ➤ 259. தாவீதுக்கு முன்பாக எவைகள் என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 260. கர்த்தருடைய வார்த்தைகளை தாவீதுக்கு அறிவித்தவன் யார்?
Q ➤ 261. கர்த்தர் எதைக்குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியைச் சொன்னார்?
Q ➤ 262. கர்த்தர் தாவீதின் வீட்டைக் குறித்த செய்தியை யார் முறைமையாய்ச் சொன்னார்?
Q ➤ 263. யாருக்கு நிகரானவர் இல்லையென்று தாவீது கூறினான்?
Q ➤ 264. யாருக்கு நிகரான ஜனம் உண்டோ? என்று தாவீது கூறினான்?
Q ➤ 265. தேசத்தின் ஜனங்களுக்கும் அவர்கள் தேவர்களுக்கும் கர்த்தர் எதை விளங்கச்செய்தார்?
Q ➤ 266. நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் ..........?
Q ➤ 267. உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் .........?