Q ➤ 3251. கர்த்தரின் கிருபை என்றுமுள்ளது என்று எவர்கள் சொல்வார்களாக?
Q ➤ 3252. சங்கீதக்காரன் நெருக்கத்திலிருந்து யாரை நோக்கிக் கூப்பிட்டார்?
Q ➤ 3253. கர்த்தர் சங்கீதக்காரனைக் கேட்டருளி எங்கே வைத்தார்?
Q ➤ 3254........என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன்?
Q ➤ 3255. மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று கூறியவன் யார்?
Q ➤ 3256. அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் சங்கீதக்காரனின் பட்சத்தில் இருக்கிறவர் யார்?
Q ➤ 3257. யாருடைய சரிக்கட்டுதலைக் காண்பேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3258. யார் பேரில் பற்றுதலாயிருப்பது நலமானது?
Q ➤ 3259. எவர்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பது நலமானது?
Q ➤ 3260. சங்கீதம் 118-ல் சங்கீதக்காரனை வளைந்துகொண்டவர்கள் யார்?
Q ➤ 3261. கர்த்தருடைய நாமத்தினால் எவர்களைச் சங்கரிப்பேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3262. எல்லா ஜாதியாரும் எவைகளைப் போல சங்கீதக்காரனை வளைந்து கொண்டார்கள்?
Q ➤ 3263. எல்லா ஜாதியாரும் எதைப்போல அணைந்து போவார்கள்?
Q ➤ 3264. சங்கீதக்காரனுக்கு பெலனும், கீதமுமும், இரட்சிப்புமானவர் யார்?
Q ➤ 3265. நீதிமான்களுடைய கூடாரங்களில் உள்ளது என்ன?
Q ➤ 3266. கர்த்தரின் வலதுகரம் செய்வது என்ன?
Q ➤ 3267.கர்த்தரின் ........உயர்ந்திருக்கிறது?
Q ➤ 3268. சாவாமல் பிழைத்திருந்து எதை விவரிப்பதாக சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3269. சங்கீதக்காரனை வெகுவாய்த் தண்டித்தவர் யார்?
Q ➤ 3270. கர்த்தர் சங்கீதக்காரனை எதற்கு ஒப்புக்கொடுக்கவில்லை?
Q ➤ 3271. எதைத் திறவுங்கள் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3272. நீதியின் வாசல்களுக்குள் பிரவேசித்து சங்கீதக்காரன் யாரைத் துதிப்பேன் என்று கூறினார்?
Q ➤ 3273. கர்த்தரின் வாசல் என்று சங்கீதக்காரன் எதை கூறினார்?
Q ➤ 3274. நீதியின் வாசல்களுக்குள் பிரவேசிப்பவர்கள் யார்?
Q ➤ 3275. சங்கீதக்காரனுக்குச் செவிகொடுத்து. இரட்சிப்பாயிருந்தவர் யார்?
Q ➤ 3276. கர்த்தர் தனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால் அவரைத் துதிப்பேன் என்று கூறியவன் யார்?
Q ➤ 3277. மூலைக்குத் தலைக்கல் ஆனது எந்த கல்?
Q ➤ 3278. ஆகாதென்று தள்ளப்பட்ட கல் யாராலே மூலைக்குத் தலைக்கல் ஆனது?
Q ➤ 3279. அது ....... அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது?
Q ➤ 3280. இது.........:இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்?
Q ➤ 3281. கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே ........வாய்க்கப்பண்ணும்?
Q ➤ 3282. யாருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்?
Q ➤ 3283. எங்கேயிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3284. நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறவர் யார்?
Q ➤ 3285. எதைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள் என்று சங்கீதம் 118 கூறுகிறது?
Q ➤ 3286. நீர் என் தேவன், நான் உம்மை ..........; நீர் என் தேவன், நான் உம்மை.......?