Q ➤ 714. பிலேயாம் கண்ட கர்த்தருக்குப் பிரியமான செயல் எது?
Q ➤ 715. கர்த்தருடைய பிரியத்தைக் கண்டபின் பிலேயாம் எங்கே போகவில்லை?
Q ➤ 716. பிலேயாம் ஏறெடுத்துப் பார்த்தபோது இஸ்ரவேலர் எதன்படி பாளயமிறங்கியிருக்கிறதைக் கண்டான்?
Q ➤ 717. பிலேயாம் தன்னை எப்படிக் கூறினான்?
Q ➤ 718. தான் எதைக்கண்டு தாழ விழும்போது கண்திறக்கப்பட்டவன் என்று பிலேயாம் கூறினான்?
Q ➤ 719. எவைகள் அழகானவைகள் என்று பிலேயாம் கூறினான்?
Q ➤ 720. யாக்கோபின் கூடாரங்களும் இஸ்ரவேலின் வாசஸ்தலங்களும் எப்படிப்பட்ட ஆறுகளைப் போல இருக்கிறது?
Q ➤ 721. நதியோரத்திலுள்ள தோட்டங்களைப் போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப் போலவும் இருப்பவை எவை?
Q ➤ 722. யாக்கோபின் கூடாரங்களும், இஸ்ரவேலின் வாசஸ்தலங்களும் எவைகளைப் போலிருக்கிறது?
Q ➤ 723. திரளான தண்ணீர்களில் பரவுவது எது?
Q ➤ 724. இஸ்ரவேலின் ராஜா யாரைப் பார்க்கிலும் உயருவான்?
Q ➤ 725. யாரை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டும் சபிக்கிறவன் சபிக்கப்பட்டும் இருப்பான்?
Q ➤ 726. பிலேயாமின் மேல் கோபமூண்டு கையோடே கைதட்டியவன் யார்?
Q ➤ 727. பிலேயாம் எத்தனைமுறை பாலாக்கின் சத்துருக்களை ஆசீர்வதித்தான்?
Q ➤ 728. பிலேயாம் கனமடையாதபடிக்கு யார் தடுத்ததாக பாலாக் கூறினான்?
Q ➤ 729. "உன் இடத்துக்கு ஓடிப்போ"யார், யாரிடம் கூறியது?
Q ➤ 730. யாக்கோபிலிருந்து உதிப்பது எது?
Q ➤ 731. இஸ்ரவேலிலிருந்து எழும்புவது எது?
Q ➤ 732. இஸ்ரவேலிலிருந்து எழும்பும் செங்கோல் எதை நொறுக்கும்?
Q ➤ 733. இஸ்ரவேலிலிருந்து எழும்பும் செங்கோல் எவர்களை நிர்மூலமாக்கும்?
Q ➤ 734. எங்கிருந்து தோன்றுகிற ஒருவர் ஆளுகை செய்வார்?
Q ➤ 735. யாக்கோபிலிருந்து தோன்றுகிறவர் யாரை அழிப்பார்?
Q ➤ 736. "இவன் முந்தி எழும்பினவன்; ஆனால் முடிவில் முற்றிலும் நாசமாவான்". இவன் யார்?
Q ➤ 737. தன் வாசஸ்தலத்தை கன்மலையில் கட்டியது யார்?
Q ➤ 738. கேனியன் அழிந்துபோவான் என்று கூறியவன் யார்?
Q ➤ 739. எங்கிருந்து கப்பல்கள் வந்து ஆசூரை சிறுமைப்படுத்தும்?