Tamil Bible Quiz Numbers Chapter 16

Q ➤ 473. மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடியது யார்?


Q ➤ 474. கோராகு யாருடைய குமாரன்?


Q ➤ 475. கோராகு, ரூபன் வம்சத்திலுள்ள எவர்களோடு மோசே ஆரோனுக்கு விரோதமாய் கூட்டங்கூடினான்?


Q ➤ 476. இஸ்ரவேல் புத்திரரில் எப்படிப்பட்டவர்களை கோராகு தன்னுடன் சேர்த்து கொண்டான்?


Q ➤ 477. கோராகு சபைத் தலைவர்களில் எத்தனை பேரை தன்னுடன் சேர்த்து கொண்டான்?


Q ➤ 478. கோராகின் கூட்டத்தில் இருந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்?


Q ➤ 479. நீங்கள் மிஞ்சிப் போகிறீர்கள் என்று மோசே மற்றும் ஆரோனிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 480. யார், பரிசுத்தமானவர்கள் என்று கோராகின் கூட்டத்தார் கூறினார்கள்?


Q ➤ 481. மோசேயும் ஆரோனும் எதற்கு மேலாக தங்களை உயர்த்துவதாக கோராகின் கூட்டத்தார் கூறினார்கள்?


Q ➤ 482. கர்த்தர் யாரைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்?


Q ➤ 483. கர்த்தரால் தெரிந்துகொள்ளப்படுகிறவன் எப்படியிருப்பான்?


Q ➤ 484. கர்த்தருடைய சந்நிதியில் தூபகலசங்களில் தூபவர்க்கம் போட யார், யாரிடம் கூறியது?


Q ➤ 485. தம்மண்டை சேரும்படி இஸ்ரவேல் சபையிலிருந்து தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 486. "இப்பொழுது ஆசாரியப் பட்டத்தையும் தேடுகிறீர்களோ"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 487. கோராகின் கூட்டத்தார் யாருக்கு விரோதமாக கூட்டங்கூடியதாக மோசே கூறினார்?


Q ➤ 488. மோசே அழைத்தனுப்பியும் வராதவர்கள் யார்?


Q ➤ 489. எதை அங்கிகரியாதிருப்பீராக என்று மோசே வேண்டினான்?


Q ➤ 490. மோசே மற்றும் ஆரோனுக்கு விரோதமாக சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடார வாசலுக்குக் கூடிவரச் செய்தது யார்?


Q ➤ 491. இந்த சபையை விட்டுப் பிரிந்து போங்கள் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 492. கர்த்தர் கோராகின் கூட்டத்தாரை ஒரு நிமிஷத்தில் என்ன செய்வதாகக் கூறினார்?


Q ➤ 493. யார், யாருடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப் போக சபையாருக்கு கட்டளையிடப்பட்டது?


Q ➤ 494. மோசே யாருக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொட வேண்டாம் என்று சபையிடம் கூறினார்?


Q ➤ 495. கோராகுக்குரிய எல்லா மனிதரையும் அவர்களுக்குண்டான சகல பொருட்களையும் விழுங்கிப் போட்டது எது?


Q ➤ 496. தங்களுக்குண்டான எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினவர்கள் யார்?


Q ➤ 497. தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது எது?


Q ➤ 498, 250 பேரையும் பட்சித்த அக்கினி எங்கிருந்து புறப்பட்டது?


Q ➤ 499. கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்ததால் பரிசுத்தமானவை எவை?


Q ➤ 500. அக்கினிக்குள் அகப்பட்ட தூபக்கலசங்களை எவைகளாய் அடிக்க கர்த்தர் கூறினார்?


Q ➤ 501. யார் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வரக்கூடாது?


Q ➤ 502. கர்த்தரின் கட்டளைப்படி அக்கினிக்குள் அகப்பட்ட தூபக்கலசங்களை பலிபீடத்தை மூடும் தகடுகளாய் அடிப்பித்தது யார்?


Q ➤ 503. இஸ்ரவேலருக்கு எப்படியிருக்கும்பொருட்டு எலெயாசார் தூபக் கலசங்களை பலிபீடத்தை மூடும் தகடுகளாய் அடிப்பித்தான்?


Q ➤ 504. இஸ்ரவேல் சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் முறுமுறுத்து அவர்கள் யாரை கொன்றுபோட்டதாகக் கூறினார்கள்?


Q ➤ 505. ஒரு நிமிஷத்தில் சபையாரை கர்த்தர் என்ன செய்வதாக மோசே மற்றும் ஆரோனிடம் கூறினார்?


Q ➤ 506. சபைக்காக என்ன செய்யும்படி கர்த்தர் மோசே ஆரோனிடம் கூறினார்?


Q ➤ 507. எங்கிருந்து கடுங்கோபம் புறப்பட்டு வாதை தொடங்கினது?


Q ➤ 508. ஆரோன் தூபகலசத்தில் தூபவர்க்கம் எடுத்துக்கொண்டு எங்கே ஓடினான்?


Q ➤ 509. செத்தவர்களுக்கும், உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்று ஜனங்களுக்காக பாவநிவர்த்தி செய்தது யார்?


Q ➤ 510. ஆரோன் செத்தவர்களுக்கும், உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றபோது நிறுத்தப்பட்டது எது?


Q ➤ 511. வாதையினால் செத்துப் போனவர்கள் எத்தனை பேர்?