Tamil Bible Quiz Numbers Chapter 14

Q ➤ 393. எதைக் கேட்டு சபையார் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்?


Q ➤ 394. கானானைச் சுற்றிப் பார்க்கப் போனவர்களின் செய்தியைக் கேட்டு இரவு முழுவதும் ஜனங்கள் என்ன செய்தார்கள்?


Q ➤ 395. இஸ்ரவேல் புத்திரர் யாருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்?


Q ➤ 396. இஸ்ரவேல் புத்திரர் தாங்கள் எங்கே செத்துப் போனோமானால் நலமாயிருக்கும் என்றார்கள்?


Q ➤ 397. இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம் என்று கூறியது யார்?


Q ➤ 398. எங்கே திரும்பிப் போகிறது தங்களுக்கு உத்தமமென்று இஸ்ரவேல் புத்திரர்கள் கூறினார்கள்?


Q ➤ 399. ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு எகிப்திற்குத் திரும்பிப் போவோம் என்று சொல்லிக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 400. இஸ்ரவேல் புத்திரரின் சபையாருக்கு முன்பாக முகங்குப்புற விழுந்தவர்கள் யார்?


Q ➤ 401. தேசத்தைச் சுற்றி பார்த்தவர்களில் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 402. காலேபின் தகப்பன் பெயரென்ன?


Q ➤ 403. தாங்கள் சுற்றிப் பார்த்து சோதித்த தேசம் எப்படிப்பட்டதென்று யோசுவாவும் காலேபும் கூறினார்கள்?


Q ➤ 404. பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுப்பவர் யார்?


Q ➤ 405. யாருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள் என்று யோசுவாவும் காலேபும் கூறினார்கள்?


Q ➤ 406. "அவர்கள் நமக்கு இரையாவார்கள்"- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 407. கானான் தேசத்தாரை காத்த எது அவர்களை விட்டு விலகிப் போயிற்று?


Q ➤ 408. இஸ்ரவேலர் யார் மீது கல்லெறிய வேண்டுமென்று கூறினார்கள்?


Q ➤ 409. யாரை கொள்ளை நோயினால் வாதிப்பதாகக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 410. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எதற்கு புறம்பாக்கிப் போடுவதாகக் கூறினார்?


Q ➤ 411. கர்த்தர் மோசேயை எப்படிப்பட்ட ஜாதியாக்குவேன் என்றார்?


Q ➤ 412. கர்த்தர் எகிப்தியர் நடுவிலிருந்து இஸ்ரவேலரை எதினாலே கொண்டு வந்தார்?


Q ➤ 413.ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்று கர்த்தரிடத்தில் கேட்டது யார்?


Q ➤ 414.கர்த்தர் எதன்படி ஜனங்களை மன்னித்தார்?


Q ➤ 415. பூமியெல்லாம் எதினால் நிறைந்திருக்கும்?


Q ➤ 416. ஜனங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல் எத்தனை முறை பரீட்சித்தார்கள்?


Q ➤ 417. ஜனங்கள் எவைகளைக் கண்டிருந்தும் கர்த்தரைப் பரீட்சை பார்த்தார்கள்?


Q ➤ 418. யாரில் ஒருவரும் கானான் தேசத்தைக் காணமாட்டார்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 419. 'இவன் வேறு ஆவி உடையவனாயிருக்கிறான்'- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 420. காலேப் கர்த்தரை எப்படி பின்பற்றி வந்தான்?


Q ➤ 421. கர்த்தர் காலேபை எங்கே சேரப்பண்ணுவதாகக் கூறினார்?


Q ➤ 422. யாருடைய சந்ததியார் கானான் தேசத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள்?


Q ➤ 423. கர்த்தர் எதன் பிரகாரம் இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்வேன் என்று கூறினார்?


Q ➤ 424. இஸ்ரவேல் புத்திரரின் பிரேதங்கள் எங்கே விழும்?


Q ➤ 425. எத்தனை வயது முதல் அதற்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட வேண்டும்?


Q ➤ 426. யார் யாருடைய பிரேதங்கள் வனாந்தரத்தில் விழும்?


Q ➤ 427. கர்த்தர் யாரை ஆணையிடப்பட்ட தேசத்தில் பிரவேசிக்கச் செய்வார்?


Q ➤ 428. யார், யாரைத் தவிர மற்றவர்கள் ஆணையிடப்பட்ட தேசத்தில் பிரவேசிப்பதில்லை?


Q ➤ 429. இஸ்ரவேலரின் குழந்தைகள் கண்டறியும் தேசம் எது?


Q ➤ 430. எது மட்டும் இஸ்ரவேல் புத்திரரின் பிள்ளைகள் வனாந்தரத்தில் சுற்றித் திரிவார்கள்?


Q ➤ 431. இஸ்ரவேல் புத்திரரின் குழந்தைகள் எதைச் சுமப்பார்கள்?


Q ➤ 432. இஸ்ரவேல் புத்திரரின் குழந்தைகள் எத்தனை வருடம் வனாந்தரத்தில் திரிவார்கள்?


Q ➤ 433. இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் எவைகளைச் சுமப்பார்கள்?


Q ➤ 434. இஸ்ரவேல் புத்திரர் எதற்கு வந்த மாறுதலை உணருவார்கள்?


Q ➤ 435. வாதையினால் செத்தார்கள் யார்? என்ன ஆனார்கள்?


Q ➤ 436. தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி சொன்ன மனிதர்கள் செத்தது எங்கே?


Q ➤ 437. தேசத்தைச் சுற்றிப்பார்க்கபோனவர்களில் உயிரோடிருந்தவர்கள் யார்?


Q ➤ 438. ஜனங்கள் ஏன் மிகவும் துக்கித்தார்கள்?


Q ➤ 439. ஜனங்கள் எங்கே போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்?


Q ➤ 440. யாருக்கு முன்பாக முறியடிக்கப்படாதபடிக்கு ஏறிப் போகாதிருங்கள் என்று மோசே கூறினார்?


Q ➤ 441. கர்த்தர் ஏன் ஜனங்களோடே இருக்கமாட்டாரென்று மோசே கூறினார்?


Q ➤ 442.. .............பாளயத்தை விட்டுப் போகவில்லை?


Q ➤ 443.மலையிலிருந்து இறங்கி வந்து இஸ்ரவேலரை முறியடித்தது யார்?


Q ➤ 444. இஸ்ரவேலரை ஓர்மான் மட்டும் துரத்தியவர்கள் யார்?