Tamil Bible Quiz Lamentations Chapter 4

Q ➤ 285. எது மங்கியது என்று எரேமியா கூறினார்?


Q ➤ 286. எது மாறியது என்று எரேமியா கூறினார்?


Q ➤ 287. சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோனவை எவை?


Q ➤ 288. தங்கத்துக்கொப்பான விலையேறப் பெற்றவர்கள் யார்?


Q ➤ 289. மண்பாண்டங்கள் யாருடைய கைவேலையாய் இருக்கின்றன?


Q ➤ 290. குயவனின் மண்பாண்டங்களாய் எண்ணப்பட்டவர்கள் யார்?


Q ➤ 291. ....... முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால்கொடுக்கும்?


Q ➤ 292. வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருந்தவள் யார்?


Q ➤ 293. யாருடைய நாவு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது?


Q ➤ 294. அப்பம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 295. எவர்களுக்கு அப்பம் கொடுக்கிறவர்கள் இல்லாமலிருந்தார்கள்?


Q ➤ 296. எவைகளைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க் கிடந்தார்கள்?


Q ➤ 297. இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் எவைகளை அணைத்துக் கொண்டார்கள்?


Q ➤ 298. ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்டது எது?


Q ➤ 299.சோதோம்............இல்லாமல் ஒரு நிமிஷத்தில் கவிழ்க்கப்பட்டது?


Q ➤ 300. கர்த்தருடைய குமாரத்தியின். பெரிதாயிருந்தது? ..க்கு வந்த தண்டனை


Q ➤ 301. எதைப் பார்க்கிலும் கர்த்தருடைய ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருந்தது?


Q ➤ 302. யாருடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமாயிருந்தார்கள்?


Q ➤ 303. பாலைப்பார்க்கிலும் வெண்மையாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 304. பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பாய் இருந்தவர்கள் யார்?


Q ➤ 305. இந்திரநீலத்தைப்பார்க்கிலும் மேனியாய் இருந்தவர்கள் யார்?


Q ➤ 306. யாருடைய முகம் இப்பொழுது கரியைவிடக் கறுத்துப்போனது?


Q ➤ 307. வீதிகளில் அறியப்படாதவர்கள் யார்?


Q ➤ 308. யாருடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டது?


Q ➤ 309. யாருடைய தோல் காய்ந்த மரத்திற்கு ஒப்பானது?


Q ➤ 310. யாரைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்கள்?


Q ➤ 311. வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டவர்கள் யார்?


Q ➤ 312. வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்து போனவர்கள் யார்?


Q ➤ 313. இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் யாரை சமைத்தன?


Q ➤ 314. இரக்கமுள்ள ஸ்திரீகளுக்கு ஆகாரமானவை எவை?


Q ➤ 315. இரக்கமுள்ள ஸ்திரீகளுக்கு தங்கள் பிள்ளைகள் எப்பொழுது ஆகாரமாயின?


Q ➤ 316. தமது கோபத்தை நிறைவேற்றினவர் யார்?


Q ➤ 317. தமது உக்கிரகோபத்தை ஊற்றினவர் யார்?


Q ➤ 318. கர்த்தர் எங்கே அக்கினியைக் கொளுத்தினார்?


Q ➤ 319. சீயோனில் கர்த்தர் கொளுத்தின அக்கினி எதைப் பட்சித்துப் போட்டது?


Q ➤ 320. எருசலேமின் வாசல்களுக்குள் யார் பிரவேசிப்பான் என்பதை பூமியின் ராஜாக்கள் நம்பமாட்டாதிருந்தார்கள்?


Q ➤ 321. சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்பதை எதின் குடிகள் நம்பமாட்டாதிருந்தார்கள்?


Q ➤ 322. எருசலேமின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தினவர்கள் யார்?


Q ➤ 323. யாருடைய பாவங்களினால் சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசித்தார்கள்?


Q ➤ 324. யாருடைய அக்கிரமங்களினால் சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசித்தார்கள்?


Q ➤ 325. குருடர்போல வீதிகளில் அலைந்தவர்கள் யார்?


Q ➤ 326. ஒருவரும் தங்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 327. ஜனங்கள் யாரைப்பார்த்து தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள் என்று கூப்பிட்டார்கள்?


Q ➤ 328. மெய்யாய்ப் பறந்தோடி அலைந்துபோனவர்கள் யார்?


Q ➤ 329. இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று யாரைக்குறித்து கூறப்பட்டது?


Q ➤ 330. தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று யாருக்குள்ளே சொல்லப்பட்டது?


Q ➤ 331. தீர்க்கதரிசிகளையும், ஆசாரியர்களையும் சிதறடித்தது எது?


Q ➤ 332. இனி தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் நோக்காதவர் யார்?


Q ➤ 333. ஜனங்கள் யாருடைய முகத்தைப் பாராமல் போனார்கள்?


Q ➤ 334. ஜனங்கள் யாரை மதியாமல் போனார்கள்?


Q ➤ 335. இன்னும் தங்களுக்கு எது வருமென்று சீயோன் ஜனங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்தார்கள்?


Q ➤ 336. சகாயம் வருமென்று எதிர்பார்த்திருந்ததினால் ஜனங்களின்........பூத்துப் போயின?


Q ➤ 337. ஜனங்கள் எப்படிப்பட்ட ஜாதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்?


Q ➤ 338. இரட்சிக்கமாட்டாத ஜாதி சீயோன் ஜனங்களின் எவைகளை வேட்டையாடினார்கள்?


Q ➤ 339. சீயோன் ஜனங்கள் எங்கே நடவாதபடிக்கு இரட்சிக்கமாட்டாத ஜாதி அவர்களுடைய அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்?


Q ➤ 340. எது சமீபித்தது என்றும் வந்துவிட்டது என்றும் சீயோன் ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 341. சீயோன் ஜனங்கள் எது நிறைவேறிப்போயின என்று கூறினார்கள்?


Q ➤ 342. ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும் வேகமாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 343. சீயோன் ஜனங்களைப் பின்தொடர்ந்தவர்கள் எவைகள்மேல் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்?


Q ➤ 344. சீயோன் ஜனங்களைப் பின்தொடர்ந்தவர்கள் எங்கே அவர்களுக்குப் பதிவிருந்தார்கள்?


Q ➤ 345. சீயோன் ஜனங்களைப் பின்தொடர்ந்தவர்களின் படுகுழியில் அகப்பட்டவன் யார்?


Q ➤ 346. சீயோன் ஜனங்களைப் பின்தொடர்ந்தவர்களின் படுகுழியில் அவர்களுக்கு எப்படியிருந்தவன் அகப்பட்டான்?


Q ➤ 347. யாருடைய நிழலில் ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று சீயோன் ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 348. ஏதோம் குமாரத்தி எந்த தேசவாசியாயிருந்தாள்?


Q ➤ 349. சந்தோஷித்துக் களிகூரு என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 350. ஏதோம் குமாரத்தியினிடத்திற்குத் தாண்டி வருவது எது?


Q ➤ 351. பாத்திரம் தன்னிடத்திற்குத் தாண்டிவரும்போது வெறிக்கிறவள் யார்?


Q ➤ 352. ஏதோம் குமாரத்தி பாத்திரம் தன்னிடத்திற்குத் தாண்டிவரும்போது வெறித்து எப்படிக் கிடப்பாள்?


Q ➤ 353. யாருடைய அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது?


Q ➤ 354. சீயோன் குமாரத்தியை இனி சிறைப்பட்டுப் போகவிடாதவர் யார்?


Q ➤ 355. கர்த்தர் யாருடைய அக்கிரமத்தை விசாரிப்பார்?


Q ➤ 356. கர்த்தர் ஏதோம் குமாரத்தியின் எவைகளை வெளிப்படுத்துவார்?