Tamil Bible Quiz Judges Chapter 8

Q ➤ 297. தங்களை யுத்தத்திற்கு அழைக்கவில்லையென்று கிதியோனிடம் வாக்குவாதம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 298. அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எது அதிகம் என்று கிதியோன் கூறினான்?


Q ➤ 299. தேவன் யாருடைய கையில் ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 300. "நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 301. விடாய்த்திருந்தும் சத்துருவைப் பின்தொடர்ந்தவர்கள் யார்?


Q ➤ 302. கிதியோன் தன்னுடன் இருக்கிற ஜனத்துக்கு அப்பங்கள் கொடுக்கும்படி யாரிடம் கேட்டான்?


Q ➤ 303. கிதியோன் யாரைப் பின்தொடருவதாக சுக்கோத்தின் மனுஷரிடம் கூறினான்?


Q ➤ 304. சேபா மற்றும் சல்முனா என்பவர்கள் யார்?


Q ➤ 305. யாருடைய கை உன் கைவசமாயிற்றோ என்று சுக்கோத்தின் பிரபுக்கள் கிதியோனிடம் கேட்டார்கள்?


Q ➤ 306. கிதியோன் எதைக் கிழித்துவிடுவதாகக் கூறினான்?


Q ➤ 307. சுக்கோத்தின் மனுஷரின் மாம்சத்தை எவைகளால் கிழிப்பேன் என்று கிதியோன் கூறினான்?


Q ➤ 308. பெனூவேலின் மனுஷர் யார் சொன்னதுபோல பிரதியுத்தரம் சொன்னார்கள்?


Q ➤ 309. கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்று கிதியோன் யாரிடம் கூறினார்?


Q ➤ 310. கிதியோன் எப்பொழுது கோபுரத்தை இடிப்பதாக பெனூவேலின் மனுஷரிடம் கூறினான்?


Q ➤ 311. சேபா மற்றும் சல்முனாவின் சேனைகளில் எத்தனைபேர் இருந்தார்கள்?


Q ➤ 312. சேபா, சல்முனா மற்றும் சேனைகள் எங்கே இருந்தார்கள்?


Q ➤ 313. கிழக்கத்தியரின் சேனைகளில் பட்டயம் உருவத்தக்க எத்தனை பேர் விழுந்தார்கள்?


Q ➤ 314. சேபாவையும் சல்முனாவையும் தொடர்ந்து பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தவன் யார்?


Q ➤ 315. கிதியோனிடம் சுத்கோத்தின் வாலிபன் எத்தனை மூப்பர்கள் மற்றும் பிரபுக்களின் பெயர்களை எழுதிக் கொடுத்தான்?


Q ➤ 316. கிதியோன் வனாந்தரத்தின் முள் மற்றும் நெருஞ்சிலால் யாருக்கு புத்தி வரப்பண்ணினான்?


Q ➤ 317. பெனூவேலின் கோபுரத்தை இடித்துப் போட்டவன் யார்?


Q ➤ 318. சேபா மற்றும் சல்முனாவினால் தாபோரில் கொன்றுபோடப்பட்ட ஒவ்வொருவனும் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 319.யார், தன் சகோதரரும் தன் தாயின் பிள்ளைகளுமாயிருந்தார்கள் என்று கிதியோன் கூறினான்?


Q ➤ 320. கிதியோனின் மூத்த குமாரன் பெயர் என்ன?


Q ➤ 321. "நீரே எழுந்து எங்கள்மேல் விழும்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 322. மனுஷன் எப்படியோ அப்படியே இருக்கும் என்று சேபாவும் சல்முனாவும் கூறினார்கள்?


Q ➤ 323. சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டவன் யார்?


Q ➤ 324. ஒட்டகங்களின் கழுத்திலிருந்து கிதியோன் எதை எடுத்துக் கொண்டான்?


Q ➤ 325. யார், தங்களை ஆளவேண்டும் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்? கிதியோனும், அவன் குமாரனும்,


Q ➤ 326. இஸ்ரவேல் மனுஷரை ஆளுபவர் யாரென்று கிதியோன் கூறினான்?


Q ➤ 327. கிதியோன் இஸ்ரவேலர்களிடம் அவர்கள் கொள்ளையிட்ட எவைகளைக் கொண்டுவரச் சொன்னான்?


Q ➤ 328. இஸ்ரவேலரால் கொள்ளையிடப்பட்ட ஜனங்கள் யார்?


Q ➤ 329. இஸ்மவேலராயிருந்தபடியால் அவர்களிடத்தில் இருந்தது என்ன?


Q ➤ 330. இஸ்ரவேலர் கடுக்கன்களை எப்படி கொடுப்போம் என்று கூறினார்கள்?


Q ➤ 331. இஸ்ரவேலர் கொள்ளையிட்ட கடுக்கன்களை எதிலே போட்டார்கள்?


Q ➤ 332. கிதியோன் இஸ்ரவேலரிடமிருந்து கேட்டு வாங்கின கடுக்கன்களின் நிறை எவ்வளவு பொன்சேக்கலின் நிறையாயிருந்தது?


Q ➤ 333. பொன்கடுக்கன்களினால் கிதியோன் எதை உண்டாக்கினான்?


Q ➤ 334. கிதியோன் ஏபோத்தை எங்கே வைத்தான்?


Q ➤ 335. ஏபோத்தைப் பின்பற்றி சோரம்போனவர்கள் யார்?


Q ➤ 336. கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிருந்தது எது?


Q ➤ 337. கிதியோனின் நாட்களில் தேசம் எத்தனை வருஷம் அமைதியாயிருந்தது?


Q ➤ 338. கிதியோனின் குமாரர் எத்தனை பேர்?


Q ➤ 339. கிதியோனுக்கு சீகேமிலிருந்த மறுமனையாட்டியின் குமாரனின் பெயர் என்ன?


Q ➤ 340. கிதியோனை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 341. கிதியோனை யாருடைய கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 342. கிதியோன் மரித்தபின் இஸ்ரவேலர்கள் எதை தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்?


Q ➤ 343. கிதியோன் தங்களுக்குச் செய்த நன்மைக்குத்தக்கதாக தயவைப் பாராட்டாதவர்கள் யார்?