Tamil Bible Quiz Jeremiah Chapter 38

Q ➤ 2261. எதில் தரித்திருக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் சாவான்?


Q ➤ 2262. எருசலேமிலிருந்து யாரிடத்திற்குப் புறப்பட்டுப் போகிறவன் உயிரோடிருப்பான்?


Q ➤ 2263. கல்தேயரிடத்திற்கு புறப்பட்டுப் போகிறவனுக்குக் கொள்ளையுடைமையைப்போலிருப்பது எது?


Q ➤ 2264. கல்தேயரிடத்திற்கு புறப்பட்டுப் போகிறவன் பிழைப்பான் என்று உரைத்தவர் யார்?


Q ➤ 2265. எருசலேம் யாருடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக் கொடுக்கப்படும்?


Q ➤ 2266. எருசலேமைப் பிடிப்பவன் யார் என்று கர்த்தர் உரைத்தார்?


Q ➤ 2267. எரேமியா எல்லா ஜனத்தோடும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளைக் கேட்டவர்கள் யார்?


Q ➤ 2268. செப்பத்தியா யாருடைய குமாரன்?


Q ➤ 2269. கெதலியா யாருடைய குமாரன்?


Q ➤ 2270. யூகால் யாருடைய குமாரன்?


Q ➤ 2271. பஸ்கூர் யாருடைய குமாரன்?


Q ➤ 2272, “இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாக வேண்டும்"யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 2273. எரேமியா கொல்லப்பட உத்தரவாகவேண்டும் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 2274. எரேமியா கூறிய வார்த்தைகளால் எவைகளைத் தளர்ந்துபோகப் பண்ணுகிறான் என்று பிரபுக்கள் கூறினார்?


Q ➤ 2275. எரேமியா நகரத்தில் மீதியாயிருக்கிறவர்களின் எதைத் தேடவில்லை யென்று பிரபுக்கள் கூறினார்கள்?


Q ➤ 2276. எரேமியா நகரத்தில் மீதியாயிருக்கிறவர்களின் எதைத் தேடுகிறான் என்று பிரபுக்கள் கூறினார்கள்?


Q ➤ 2277. “இதோ அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்"- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 2278. "இதோ அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 2279. உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்று பிரபுக்களிடம் கூறியவன் யார்?


Q ➤ 2280. பிரபுக்கள் எரேமியாவை எங்கே போட்டார்கள்?


Q ➤ 2281. மல்கியாவினுடைய துரவு எங்கே இருந்தது?


Q ➤ 2282. மல்கியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 2283. எரேமியாவை மல்கியாவினுடைய துரவில் எப்படி இறக்கினார்கள்?


Q ➤ 2284. எரேமியா இறக்கப்பட்ட துரவு...........இல்லாமல் உளையாயிருந்தது?


Q ➤ 2285. துரவிலிருந்த உளையில் அமிழ்ந்தினவர் யார்?


Q ➤ 2286. எரேமியாவைத் துரவிலே போட்டதை கேள்விப்பட்டவன் யார்?


Q ➤ 2287. எபெத்மெலேத் எரேமியாவைத் துரவிலே போட்டதை கேள்விப்பட்டபோது எங்கே இருந்தான்?


Q ➤ 2288. எபெத்மெலேத் யாராய் இருந்தான்?


Q ➤ 2289. எபெத்மெலேக்கின் ஊர் எது?


Q ➤ 2290. எரேமியாவைத் துரவில் போடும்போது பென்யமீன் வாசலில் உட்கார்ந்திருந்தவன் யார்?


Q ➤ 2291. யாரைத் துரவிலே போடச் செய்தது தகாத செய்கை என்று எபெத்மெலேக் கூறினான்?


Q ➤ 2292. எரேமியா இருக்கிற இடத்தில் எதினால் சாவான் என்று எபெத்மெலேக் கூறினான்?


Q ➤ 2293. இனி நகரத்தில்..... ...இல்லையென்று எபெத்மெலேக் கூறினான்?


Q ➤ 2294. எத்தனை மனுஷரை தன்னுடனே கூட்டிக்கொண்டுபோக எபெத்மெலேக் கட்டளை பெற்றான்?


Q ➤ 2295, முப்பது மனுஷரும் யாரை துரவிலிருந்து தூக்கிவிட ராஜா கூறினான்?


Q ➤ 2296. சாகாததற்குமுன்னே துரவிலிருந்து யாரை தூக்கிவிடும்படி சிதேக்கியா கூறினான்?


Q ➤ 2297. கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத்துணிகளையும் எடுத்துக் கொண்டுபோனவன் யார்?


Q ➤ 2298. எபெத்மெலேக் எங்கே புகுந்து பழம்புடவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்தான்?


Q ➤ 2299. எபெத்மெலேக் துரவண்டைக்கு எரேமியாவிடம் எத்தனை மனுஷரை கூட்டிக்கொண்டு போனான்?


Q ➤ 2300. எபெத்மெலேக் எவைகளை கயிறுகளினால் எரேமியாவிடம் துரவில் இறக்கிவிட்டான்?


Q ➤ 2301. எவைகளை அக்குள்களில் கயிறுகளுக்குள் அடங்கவைத்துக்கொள்ள எபெத்மெலேக் எரேமியாவிடம் கூறினான்?


Q ➤ 2302. துரவிலிருந்து எடுத்துவிடப்பட்டவன் யார்?


Q ➤ 2303. எரேமியாவை துரவிலிருந்து எவைகளினால் தூக்கினார்கள்?


Q ➤ 2304. துரவிலிருந்து எடுத்துவிடப்பட்டபின்பு எரேமியா எங்கே இருந்தான்?


Q ➤ 2305. சிதேக்கியா ராஜா யாரை தன்னிடத்திற்கு வரவழைத்தான்?


Q ➤ 2306. சிதேக்கியா எங்கே இருக்கும் மூன்றாம் வாசலில் எரேமியாவை தன்னிடத்திற்கு வரவழைத்தான்?


Q ➤ 2307. "நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 2308. தான் கேட்கிறவைகளில் ஒன்றும் மறைக்கவேண்டாம் என்று எரேமியாவிடம் கூறியவன் யார்?


Q ➤ 2309. "நான் அதை உமக்கு அறிவித்தால் என்னை நிச்சயமாய்க் கொலைசெய்வீரல்லவா"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 2310. தான் எதைச் சொன்னாலும் சிதேக்கியா கேட்கமாட்டான் என்று எரேமியா கூறினார்?


Q ➤ 2311. எரேமியாவைக் கொல்லாமலும் இருப்பேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 2312. சிதேக்கியா ராஜா எரேமியாவை யார் கையில் ஒப்புக்கொடுக்கமாட்டேன் என்று கூறினான்?


Q ➤ 2313. நமக்கு ஆத்துமாவை உண்டுபண்ணினவர் யார்?


Q ➤ 2314. எரேமியாவை அவன் பிராணனை வாங்கத் தேடுகிற மனுஷர் கையில் ஒப்புக்கொடேன் என்று இரகசியமாய் ஆணையிட்டவன் யார்?


Q ➤ 2315. எரேமியாவை அவன் பிராணனை வாங்கத் தேடுகிற மனுஷர் கையில் ஒப்புக்கொடேன் என்று எதைக்கொண்டு சிதேக்கியா ஆணையிட்டான்?


Q ➤ 2316. சிதேக்கியா யாரண்டைக்குப் புறப்பட்டுப்போனால் அவன் ஆத்துமா உயிரோடிருக்கும்?


Q ➤ 2317. சிதேக்கியா பாபிலோனின் பிரபுக்களண்டைக்கு புறப்பட்டுப்போனால் எது சுட்டெரிக்கப்படாது?


Q ➤ 2318. சிதேக்கியா பாபிலோனின் பிரபுக்களண்டைக்கு புறப்பட்டுப்போனால் உயிரோடிருப்பவர்கள் யார்?


Q ➤ 2319. சிதேக்கியா பாபிலோனின் பிரபுக்களண்டைக்கு புறப்பட்டுப் போகாவிட்டால் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவது எது?


Q ➤ 2320. சிதேக்கியா பாபிலோனின் பிரபுக்களண்டைக்கு புறப்பட்டுப் போகாவிட்டால் எதைச் சுட்டெரிப்பார்கள்?


Q ➤ 2321. சிதேக்கியா பாபிலோனின் பிரபுக்களண்டைக்கு புறப்பட்டுப் போகாவிட்டால் கல்தேயருக்குத் தப்பிப்போகாதவன் யார்?


Q ➤ 2322. கல்தேயர் தன்னை யார் கையில் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று சிதேக்கியா ராஜா பயப்பட்டான்?


Q ➤ 2323. கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதர்கையில் சிதேக்கியாவை ஒப்புக்கொடார்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 2324. எரேமியா சிதேக்கியாவிடம் எதற்குச் செவிகொடும் என்று கூறினார்?


Q ➤ 2325. கர்த்தருடைய வார்த்தைக்கு சிதேக்கியா செவிகொடுக்கும்போது அவனுக்கு எப்படியிருக்கும்?


Q ➤ 2326. கர்த்தருடைய வார்த்தைக்கு சிதேக்கியா செவிகொடுக்கும்போது பிழைப்பது எது?


Q ➤ 2327. சிதேக்கியா பாபிலோன் பிரபுக்களிடம் போகாவிட்டால், பாபிலோனின் பிரபுக்களண்டையில் கொண்டுபோகப்படுபவர்கள் யார்?


Q ➤ 2328. பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டையில் கொண்டுபோகப்படுகிற ஸ்திரீகள், சிதேக்கியாவின் இஷ்டர்கள் என்று யாரை கூறுவார்கள்?


Q ➤ 2329. பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டையில் கொண்டுபோகப்படுகிற ஸ்திரீகள், சிதேக்கியாவுக்கு யார் போதனை செய்ததாக கூறுவார்கள்?


Q ➤ 2330. பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடம் கொண்டுபோகப்படுகிற ஸ்திரீகள், சிதேக்கியாவை யார் மேற்கொண்டார்கள் என்று கூறுவார்கள்?


Q ➤ 2331. சிதேக்கியா பிரபுக்கள் பின்வாங்கிப்போனதாகக் கூறுகிறவர்கள் யார்?


Q ➤ 2332. சிதேக்கியா ராஜாவின் எல்லா ஸ்திரீகளும் யாரிடத்தில் கொண்டு போகப்படுவார்கள்?


Q ➤ 2333. சிதேக்கியா ராஜாவின் பிள்ளைகள் யாரிடத்தில் கொண்டு போகப்படுவார்கள்?


Q ➤ 2334. சிதேக்கியா ராஜா யாருடைய கைக்குத் தப்பிப்போகமாட்டான்?


Q ➤ 2335. பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்படுபவன் யார்?


Q ➤ 2336. சிதேக்கியா ராஜா எது சுட்டெரிக்கப்படுவதற்குக் காரணமாவான்?


Q ➤ 2337. எரேமியா கூறிய வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்க வேண்டாம் என்று கூறியவன் யார்?


Q ➤ 2338. ராஜா தனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளின்படியேயும் பிரபுக்களுக்கு அறிவித்தவர் யார்?


Q ➤ 2339. எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாக காவற்சாலையின் முற்றத்தில் இருந்தவர் யார்?


Q ➤ 2340. எரேமியா எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் எங்கே இருந்தார்?