Tamil Bible Quiz Jeremiah Chapter 36

Q ➤ 2106. யோயாக்கீமின் எத்தனையாவது வருஷத்தில் கர்த்தரால் எரேமியாவுக்கு வார்த்தை உண்டானது?


Q ➤ 2107. ஒரு புஸ்தகச்சுருளை எடுக்கும்படி கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 2108. கர்த்தர் சொன்ன எல்லாவற்றையும் எதில் எழுத கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 2109. யாருடைய நாட்களில் கர்த்தர் சொன்னவைகளை எரேமியா புஸ்தகச் சுருளில் எழுதவேண்டும்?


Q ➤ 2110. யோயாக்கீமின் நாட்களில் கர்த்தர் எவர்களைக் குறித்து சொன்னவற்றை எரேமியா புஸ்தகச்சுருளில் எழுதவேண்டும்?


Q ➤ 2111. யூதா குடும்பத்தார் எதைவிட்டுத் திரும்பும்படியாகக் கர்த்தர் அவர்களுக்குத் தீங்குசெய்ய நினைத்திருந்தார்?


Q ➤ 2112. யூதா குடும்பத்தாரின் எவைகளை கர்த்தர் மன்னிக்கும்படியாக நினைத்திருந்தார்?


Q ➤ 2113. எழுதும்படியாக எரேமியா யாரை அழைத்தார்?


Q ➤ 2114. பாருக் யாருடைய குமாரன்?


Q ➤ 2115. எரேமியா சொல்ல பாருக் எவைகளைப் புஸ்தகச்சுருளில் எழுதினான்?


Q ➤ 2116. "நான் அடைக்கப்பட்டவன்" - கூறியவன் யார்?


Q ➤ 2117. எரேமியா எதற்குள் பிரவேசிக்கக்கூடாது?


Q ➤ 2118. பாருக் எவைகளை ஜனங்கள் செவிகள் கேட்க வாசிக்கவேண்டும்?


Q ➤ 2119. சுருளில் எழுதின கர்த்தருடைய வார்த்தைகளை பாருக் எந்தநாளில் வாசிக்கவேண்டும்?


Q ➤ 2120. சுருளில் எழுதின கர்த்தருடைய வார்த்தைகளை பாருக் எவர்கள் கேட்கும்படி வாசிக்கவேண்டும்?


Q ➤ 2121. ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய முகத்துக்கு முன்பாக பணிந்து விண்ணப்பம்பண்ணுவார்களென்று எரேமியா யாரை கூறினார்?


Q ➤ 2122. யூதாவின் குடும்பத்தார் ஒருவேளை எதைவிட்டுத் திரும்புவார்களென்று எரேமியா கூறினார்?


Q ➤ 2123. யூதாவின் குடும்பத்தாருக்கு விரோதமாகக் கூறியிருந்த எவைகள் பெரியதாயிருந்தது?


Q ➤ 2124. பாருக்கு யார் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்?


Q ➤ 2125. பாருக்கு எதை வாசிக்கும்படி எரேமியா தீர்க்கதரிசி கற்பித்தபடியெல்லாம் செய்தான்?


Q ➤ 126. பாருக் கர்த்தருடைய வார்த்தைகளை எங்கே வாசிக்கும்படி எரேமியா தீர்க்கதரிசி கற்பித்தபடியெல்லாம் செய்தான்?


Q ➤ 2127. எங்கேயிருக்கிற எல்லா ஜனத்துக்கும் உபவாசம் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டது?


Q ➤ 2128. எங்கேயிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா ஜனத்துக்கும் உபவாசம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டது?


Q ➤ 2129. யாருக்குமுன்பாக உபவாசம் செய்யவேண்டுமென்று எருசலேம் மற்றும் யூதாவின் ஜனங்களிடம் கூறப்பட்டது?


Q ➤ 2130. யாருடைய ஐந்தாம் வருஷத்து ஒன்பதாம் மாதம் ஜனங்களுக்கு உபவாசம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டது?


Q ➤ 2131. பாருக் யாருடைய அறையிலே எரேமியாவின் வார்த்தைகளை ஜனங்கள் கேட்க வாசித்தான்?


Q ➤ 2132. கெமரியா யாராய் இருந்தான்?


Q ➤ 2133. கெமரியா யாருடைய குமாரன்?


Q ➤ 2134. கெமரியாவின் அறை கர்த்தருடைய ஆலயத்தில் எங்கே இருந்தது?


Q ➤ 2135. கெமரியாவின் அறை எதற்கு அருகில் இருந்தது?


Q ➤ 2136. கெமரியாவின் மகன் பெயர் என்ன?


Q ➤ 2137. மிகாயா கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கக் கேட்டபோது எங்கே போனான்?


Q ➤ 2138. ராஜாவின் அரமனையில் மிகாயா எங்கே பிரவேசித்தான்?


Q ➤ 2139. எலிசாமா யாராய் இருந்தான்?


Q ➤ 2140. தெலாயா யாருடைய குமாரன்?


Q ➤ 2141. எல்நாத்தான் யாருடைய குமாரன்?


Q ➤ 2142. சிதேக்கியா என்பவன் யாருடைய குமாரன்?


Q ➤ 2143. ஜனத்தின் செவிகள் கேட்கப் புஸ்தகத்திலுள்ளவைகளை வாசித்தவன் யார்?


Q ➤ 2144. தான் கேட்ட எல்லா வார்த்தைகளையும் பிரபுக்களுக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 2145. பிரபுக்கள் யாரை பாருக்கினிடத்தில் அனுப்பினார்கள்?


Q ➤ 2146. யெகுதி யாருடைய குமாரன்?


Q ➤ 2147. பிரபுக்கள் எதை எடுத்துக்கொண்டுவர பாருக்கினிடத்தில் கூறினார்கள்?


Q ➤ 2148. பாருக்கு எதை எடுத்துக்கொண்டு பிரபுக்களிடத்தில் வந்தான்?


Q ➤ 2149. "நாங்கள் கேட்க வாசி" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 2150. பிரபுக்கள் கேட்க சுருளிலுள்ளவைகளை வாசித்தவன் யார்?


Q ➤ 2151. பாருக் வாசித்தவைகளைக் கேட்கையில் பயமுற்றவர்கள் யார்?


Q ➤ 2152. பிரபுக்கள் சுருளிலுள்ள வார்த்தைகளை யாருக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்று கூறினார்கள்?


Q ➤ 2153. சுருளில் வார்த்தைகளை எவ்விதமாய் எழுதினாய் என்று பாருக்கிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 2154. தமது வாயினால் வார்த்தைகளை உரைத்து, பாருக்கிடம் சொன்னவர் யார்?


Q ➤ 2155. எரேமியா கூறியவற்றை பாருக்கு எதினால் புஸ்தகத்தில் எழுதினான்?


Q ➤ 2156. "நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக் கொள்ளுங்கள்"- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 2157. பாருக்கிடம் ஒளித்துக்கொள்ளும்படி கூறியவர்கள் யார்?


Q ➤ 2158. எதை ஒருவரும் அறியக்கூடாது என்று பிரபுக்கள் பாருக்கிடம் கூறினார்கள்?


Q ➤ 2159. பிரபுக்கள் சுருளை யாருடைய அறையிலே வைத்தார்கள்?


Q ➤ 2160. எலிசாமா யாராய் இருந்தான்?


Q ➤ 2161. சுருளிலுள்ள வார்த்தைகளை ராஜாவினிடத்தில் அறிவித்தவர்கள் யார்?


Q ➤ 2162. சுருளை எடுத்துக்கொண்டுவர ராஜா யாரை அனுப்பினான்?


Q ➤ 2163. யெகுதி சுருளை யாருடைய அறையிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தான்?


Q ➤ 2164. ராஜாவும் எல்லா பிரபுக்களும் கேட்க சுருளை வாசித்தவன் யார்?


Q ➤ 2165. குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தவன் யார்?


Q ➤ 2166. ராஜா எப்பொழுது குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்?


Q ➤ 2167. ராஜாவுக்கு முன்பாக,..........மூட்டியிருந்தது?


Q ➤ 2168. சுருளை சூரிக்கத்தியினால் அறுத்தவன் யார்?


Q ➤ 2169. யெகுதி எவ்வளவு வாசித்தபின் ராஜா சுருளை அறுத்தான்?


Q ➤ 2170. சுருளனைத்தும் வெந்துபோகும்படி எறிந்துபோட்டவன் யார்?


Q ➤ 2171. சுருள் வெந்துபோகும்படி ராஜா அதை எதிலே எறிந்துபோட்டான்?


Q ➤ 2172. சுருளிலுள்ள வார்த்தைகளைக் கேட்ட எவர்கள் பயப்படவில்லை?


Q ➤ 2173, ராஜாவும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எவைகளை கிழித்துக் கொள்ளவில்லை?


Q ➤ 2174. சுருளைச் சுட்டெரிக்கவேண்டாம் என்று விண்ணப்பம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 2175. எல்நாத்தான், தெலாயா மற்றும் கெமரியாவின் விண்ணப்பத்துக்குச் செவிகொடுக்காதவன் யார்?


Q ➤ 2176. பாருக்கையும் எரேமியாவையும் பிடிக்கும்படி கட்டளைக் கொடுத்தவன் யார்?


Q ➤ 2177. பாருக்கையும் எரேமியாவையும் பிடிக்கும்படி ராஜாவிடம் கட்டளைப் பெற்றவர்கள் யார்?


Q ➤ 2178. யெரமெயேல் யாருடைய குமாரன்?


Q ➤ 2179. செராயா யாருடைய குமாரன்?


Q ➤ 2180. செலேமியா யாருடைய குமாரன்?


Q ➤ 2181. எரேமியாவையும் பாருக்கையும் மறைத்தவர் யார்?


Q ➤ 2182. சுருளில் யாருடைய வாய்ச்சொல்லப் பாருக்கு எழுதியிருந்தான்?


Q ➤ 2183. சுருளை ராஜா சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்கு உண்டானது என்ன?


Q ➤ 2184. திரும்ப வேறொரு சுருளை எடுக்கும்படி யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 2185. முதலாம் சுருளைச் சுட்டெரித்த ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 2186. இரண்டாம் சுருளில் எவைகளை எழுத கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 2187. யார் நிச்சயமாய் வருவான் என்று யோயாக்கீமிடம் கூறப்பட்டது?


Q ➤ 2188. பாபிலோன் ராஜா எதை அழிப்பான் என்று யோயாக்கீமிடம் கூறப்பட்டது?


Q ➤ 2189. பாபிலோன் ராஜா எவைகளை ஒழியப்பண்ணுவான் என்று யோயாக்கீமிடம் கூறப்பட்டது?


Q ➤ 2190. "அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே" - யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 2191. யோயாக்கீமின் வம்சத்தில் எதின்மேல் உட்காரும்படி ஒருவனும் இருக்கமாட்டான்?


Q ➤ 2192. யோயாக்கீமின் பிரேதம் எதின் உஷ்ணத்துக்கு எறிந்து விடப்படும்?


Q ➤ 2193. யோயாக்கீமின் பிரேதம் எதின் குளிருக்கு எறிந்து விடப்படும்?


Q ➤ 2194. கர்த்தர் யாரிடத்திலும் அவன் சந்ததியினிடத்திலும் அவன் அக்கிரமத்தை விசாரிப்பார்?


Q ➤ 2195. யோயாக்கீமின் பிரபுக்களிடத்தில் கர்த்தர் எதை விசாரிப்பார்?


Q ➤ 2196. யோயாக்கீமின்மேலும் எருசலேமின் குடிகள்மேலும், அவர்கள் கேளாமற்போன எவைகளை கர்த்தர் வரப்பண்ணுவார்?


Q ➤ 2197. யோயாக்கீமின்மேலும் எருசலேமின் குடிகள்மேலும், கர்த்தர் அவர்களுக்குச் சொன்ன எவைகளை வரப்பண்ணுவார்?


Q ➤ 2198. யூதா மனுஷர்மேல் கர்த்தர் சொன்னதும் அவர்கள் கேளாமற்போனதுமான எவைகளை கர்த்தர் வரப்பண்ணுவார்?


Q ➤ 2199. எரேமியா வேறொரு சுருளை எடுத்து யாரிடத்தில் கொடுத்தான்?


Q ➤ 2200. பாருக்கு இரண்டாம் சுருளில் எவைகளை எழுதினான்?


Q ➤ 2201. இரண்டாம் சுருளில் எவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகள் சேர்க்கப்பட்டது?