Q ➤ 2001. யாருடைய ஆளுகைக்குட்பட்ட சகல ராஜ்யங்களும் எருசலேமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்கள்'
Q ➤ 2002. நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகையில் யாருக்கு கர்த்தரால் வார்த்தை உண்டானது?
Q ➤ 2003. யாரிடத்தில் சொல்லும்படி எரேமியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது?
Q ➤ 2004. சிதேக்கியா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 2005. எருசலேமை யார் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சிதேக்கியாவிடம் சொல்லச் சொன்னார்?
Q ➤ 2006. பாபிலோன் ராஜா எதை அக்கினியால் சுட்டெரிப்பான்?
Q ➤ 2007. சிதேக்கியா யாருடைய கைக்குத் தப்பிப்போகமாட்டான்?
Q ➤ 2008. சிதேக்கியா யாருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவான்?
Q ➤ 2009. சிதேக்கியாவின் கண்கள் யாருடைய கண்களைக் காணும்?
Q ➤ 2010. பாபிலோன் ராஜாவின் வாய் யாருடைய வாயோடே பேசும்?
Q ➤ 2011. "நீ பாபிலோனுக்குப் போவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்" யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 2012. சிதேக்கியா எதினாலே சாவதில்லையென்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 2013. "சமாதானத்தோடே சாவாய்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 2014. சிதேக்கியா முன்னிருந்த ராஜாக்களுக்கு எதைக் கொளுத்தினது போல சிதேக்கியாவுக்குக் கொளுத்துவார்கள்?
Q ➤ 2015. ஜனங்கள் 'ஐயோ ஆண்டவனே', என்று சொல்லி யாருக்காகப் புலம்புவார்கள்?
Q ➤ 2016. யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் மீந்தவை எவை?
Q ➤ 2017. எருசலேமுக்கும், லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாக யுத்தம் பண்ணினவைகள் எவை?
Q ➤ 2018. யூதாவில் ஒருவனும் யாரை அடிமைகொள்ளக்கூடாதென்று சிதேக்கியா கூறினான்?
Q ➤ 2019. ஒவ்வொருவனும்...........தன் வேலைக்காரனை சுயாதீனனாக அனுப்பவேண்டுமென்று சிதேக்கியா கூறினான்?
Q ➤ 2020. எபிரேய ஸ்திரீயாகிய தன் வேலைக்காரியை எப்படி அனுப்பிவிட சிதேக்கியா கூறினான்?
Q ➤ 2021. எபிரேய வேலைக்காரனுக்கும் வேலைக்காரிக்கும் விடுதலையைக் கூறும்படி சிதேக்கியா எல்லா ஜனத்தோடும் பண்ணியது என்ன?
Q ➤ 2022. உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களும் ஜனங்களும் செவிகொடுத்து யாரை அனுப்பிவிட்டார்கள்?
Q ➤ 2023. அனுப்பிவிடப்பட்ட எபிரேய வேலைக்காரனையும் வேலைக்காரியையும் மறுபடியும் அழைப்பித்தவர்கள் யார்?
Q ➤ 2024. உடன்படிக்கைக்கு உட்பட்ட ஜனங்களும் பிரபுக்களும் ................ பண்ணினார்கள்?
Q ➤ 2025. மாறாட்டம்பண்ணினவர்கள் எவர்களை அடிமைப்படுத்திக் கொண்டார்கள்?
Q ➤ 2026. இஸ்ரவேலர் தனக்கு விற்கப்பட்ட வேலைக்கார சகோதரனை எப்பொழுது அனுப்பிவிட வேண்டும்?
Q ➤ 2027. இஸ்ரவேலர் தனக்கு விற்கப்பட்ட வேலைக்கார சகோதரன் எத்தனை வருஷம் அடிமையாயிருப்பான்?
Q ➤ 2028. ஆறுவருஷம் முடிந்தபின்பு இஸ்ரவேலர் எபிரேய வேலைக்காரனை எப்படி அனுப்பிவிட வேண்டும்?
Q ➤ 2029. அடிமைவீடு என்று கூறப்பட்டுள்ளது எது?
Q ➤ 2030. இஸ்ரவேலின் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணியவர் யார்?
Q ➤ 2031. இஸ்ரவேலின் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாளில் கர்த்தர் அவர்களோடே பண்ணியது என்ன?
Q ➤ 2032. இஸ்ரவேலின் பிதாக்கள் யாருடைய சொல்லைக் கேட்கவில்லை?
Q ➤ 2033. கர்த்தருக்குத் தங்கள் செவியைச் சாயாமல் போனவர்கள் யார்?
Q ➤ 2034. யூதா ஜனங்கள் தன் அயலானுக்கு விடுதலைக் கூறின விஷயத்தில் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தார்கள்?
Q ➤ 2035. யூதா ஜனங்கள் தன் அயலானுக்கு விடுதலைக் கூறின விஷயத்தில் எங்கே உடன்படிக்கைபண்ணினார்கள்?
Q ➤ 2036. யூதா ஜனங்கள் தன் அயலானுக்கு விடுதலைக் கூறின விஷயத்தில் எதற்குமுன் உடன்படிக்கைபண்ணினார்கள்?
Q ➤ 2037. யூதா ஜனங்கள் மாறாட்டம்பண்ணி, எதை பரிசுத்தக் குலைச்சலாக்கினார்கள்?
Q ➤ 2038. யூதா ஜனங்கள் எவர்களுக்கு விடுதலையைக் கூறின விஷயத்தில் கர்த்தரின் சொல்லைக் கேளாமற்போனார்கள்?
Q ➤ 2039, கர்த்தர் யூதா ஜனங்களை எவைகளுக்கு ஒப்புக்கொடுக்கிற விடுதலையைக் கூறினார்?
Q ➤ 2040. பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்குக் கர்த்தர் யாரை ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 2041. தம் உடன்படிக்கையை மீறின மனுஷரைக் கர்த்தர் எவைகளின் நடுவாக கடந்துபோகும்படி பண்ணுவார்?
Q ➤ 2042. துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி, தம் உடன்படிக்கையை மீறின மனுஷரைக் கர்த்தர் எதைப்போல் ஆக்குவார்?
Q ➤ 2043. துண்டங்களின் நடுவே கடந்துபோனவர்களைக் கர்த்தர் யாருடைய கையில் ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 2044. துண்டங்களின் நடுவே கடந்துபோனவர்களுடைய பிரேதம் எவைகளுக்கு இரையாகும்?
Q ➤ 2045. சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் கர்த்தர் யார் கையில் ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 2046. சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் கர்த்தர் அவர்களை விட்டு பேர்ந்துபோன எதன் கையில் ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 2047. கர்த்தர் கட்டளை கொடுத்து, எதை எருசலேமுக்குத் திரும்பப்பண்ணுவார்?
Q ➤ 2048. பாபிலோன் ராஜாவின் சேனைகள் எதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்?
Q ➤ 2049. கர்த்தர் எவைகளை ஒருவரும் குடியிராதபடி பாழாய்ப் போகப் பண்ணுவார்?