Q ➤ 1843. நேபுகாத்நேச்சாரின் 18ம் வருஷத்தில் எரேமியாவுக்கு..........உண்டானது?
Q ➤ 1844. சிதேக்கியா அரசாண்ட 10ம் வருஷத்தில் யாருக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானது?
Q ➤ 1845. சிதேக்கியாவின் 10ம் வருஷத்தில் எருசலேமைமுற்றிக்கை போட்டிருந்தது எது?
Q ➤ 1846. யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருந்தவன் யார்?
Q ➤ 1847. எருசலேமை கர்த்தர் யார் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று எரேமியா கூறியதற்காக சிதேக்கியா அவரை அடைத்து வைத்தான்?
Q ➤ 1848. சிதேக்கியா யாருடைய கைக்குத் தப்பிப்போகமாட்டான் என்று எரேமியா கூறியதற்காக சிதேக்கியா அவரை அடைத்துவைத்தான்?
Q ➤ 1849. சிதேக்கியா யாருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவான் என்று எரேமியா கூறியதற்காக சிதேக்கியா அவரை அடைத்து வைத்தான்?
Q ➤ 1850. சிதேக்கியாவின் வாய் யாருடைய வாயோடே பேசும் என்று எரேமியா கூறியதற்காக சிதேக்கியா அவரை அடைத்து வைத்தான்?
Q ➤ 1851. சிதேக்கியாவின் கண்கள் எதைக் காணும் என்று எரேமியா கூறியதற்காக சிதேக்கியா அவரை அடைத்து வைத்தான்?
Q ➤ 1852. யூதா ஜனங்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணினாலும் வாய்ப்பதில்லை என்று கூறியதற்காக சிதேக்கியாவால் அடைத்து வைக்கப்பட்டவன் யார்?
Q ➤ 1853. எரேமியாவின் பெரிய தகப்பன் யார்?
Q ➤ 1854. சல்லூமின் குமாரன் பெயர் என்ன?
Q ➤ 1855. ஆனதோத்திலிருக்கிற தன் நிலத்தை வாங்கிக்கொள்ள எரேமியாவிடம் கூறியவன் யார்?
Q ➤ 1856. எதைக் கொள்ளுகிறதற்கு எரேமியாவுக்கே மீட்கும் அதிகாரம் உண்டு என்று அனாமெயேல் கூறுவான்?
Q ➤ 1857. கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் எரேமியாவிடம் வந்தவன் யார்?
Q ➤ 1858. ஆனதோத்தூர் எந்த நாட்டில் இருந்தது?
Q ➤ 1859. ஆனதோத்தூரிலிலுள்ள அனாமெயேலின் நிலத்தை வாங்குவதற்கு பென்யமீனுக்கு உள்ளது என்ன?
Q ➤ 1860. அனாமெயேலின் நிலத்தை தான் வாங்குவது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டவர் யார்?
Q ➤ 1861. எரேமியா அனாமெயேலின் நிலத்துக்கு விலைக்கிரயமான எதை நிறுத்துக்கொடுத்தான்?
Q ➤ 1862. அனாமெயேலின் நிலத்திற்குரிய கிரயப்பத்திரத்தையும், பிரதியையும் எரேமியா யாரிடம் கொடுத்தான்?
Q ➤ 1863. பாருக் யாருடைய குமாரன்?
Q ➤ 1864. நேரியா யாருடைய குமாரன்?
Q ➤ 1865. எரேமியா கிரயப்பத்திரத்தையும் பிரதியையும் எவர்களுடைய கண்களுக்கு முன்பாக பாருக்கினிடத்தில் கொடுத்தார்?
Q ➤ 1866. பாருக் கிரயப்பத்திரத்தையும் பிரதியையும் வாங்கி எதிலே வைக்க வேண்டும்?
Q ➤ 1867. கிரயப்பத்திரமும் பிரதியும் எவ்வளவு நாளிருக்கும்படி மண்பாண்டத்தில் வைக்கப்பட வேண்டும்?
Q ➤ 1868. யூதா தேசத்தில் இனி எவைகள் கொள்ளப்படுமென்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1869. எரேமியா கிரயப்பத்திரத்தை பாருக்கினிடத்தில் கொடுத்தபின் யாரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார்?
Q ➤ 1870. கர்த்தர் தம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும் எவைகளை உண்டாக்கினார்?
Q ➤ 1871. யாராலே செய்யக்கூடாத அதிசயமான காரியமஒன்றுமில்லை?
Q ➤ 1872. ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவர் யார்?
Q ➤ 1873. கர்த்தர் பிதாக்களுடைய அக்கிரமத்தை யாருடைய மடியிலே சரிக்கட்டுவார்?
Q ➤ 1874. மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனுடைய நாமம் என்ன?
Q ➤ 1875. யோசனையில் பெரியவராயிருக்கிறவர் யார்?
Q ➤ 1876. கர்த்தர் செயலிலே எப்படியிருக்கிறார்?
Q ➤ 1877. மனுஷனுடைய வழிக்குத்தக்கதாக அளிக்கிறவர் யார்?
Q ➤ 1878. கர்த்தர் மனுஷனுக்கு எவைகளின் பலனுக்குத்தக்கதாக அளிப்பார்?
Q ➤ 1879. மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருப்பவை எவை?
Q ➤ 1880. இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் விளங்கும் அடையாளங்களையும் அற்புதங்களையும் கர்த்தர் எங்கே செய்தார்?
Q ➤ 1881. எகிப்துதேசத்தில் செய்த அற்புதத்தினிமித்தம் கர்த்தர் எதைத் தமக்கு உண்டாக்கினார்?
Q ➤ 1882. கர்த்தர் யாரை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் பலத்த கையினாலும் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்?
Q ➤ 1883. இஸ்ரவேலாகிய தமது ஜனத்தை ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்திலிருந்தது புறப்படப்பண்ணியவர் யார்?
Q ➤ 1884. கர்த்தர் இஸ்ரவேலின் பிதாக்களுக்கு எப்படிப்பட்ட தேசத்தைக் கொடுப்பதாக ஆணையிட்டிருந்தார்?
Q ➤ 1885. கர்த்தர் கொடுத்த தேசத்தில் இஸ்ரவேலின் பிதாக்கள் எதற்குச் செவிகொடுக்கவில்லை?
Q ➤ 1886. கர்த்தர் கொடுத்த தேசத்தில் இஸ்ரவேலின் பிதாக்கள் எதில் நடக்கவில்லை?
Q ➤ 1887. கர்த்தர் கொடுத்த தேசத்தில் இஸ்ரவேலின் பிதாக்கள் எதைச் செய்யவில்லை?
Q ➤ 1888. தீங்கையெல்லாம் இஸ்ரவேலருக்கு நேரிடப்பண்ணியவர் யார்?
Q ➤ 1889. எங்கே கொத்தளங்கள் போடப்பட்டிருந்தது?
Q ➤ 1890. எவைகளினிமித்தம் எருசலேம் கல்தேயர் கையிலே கொடுக்கப்பட்டது?
Q ➤ 1891. மாம்சமான யாவருக்கும் தேவன் யார்?
Q ➤ 1892. தேவனாலே செய்யக்கூடாத காரியம் ஒன்றுண்டோ?
Q ➤ 1893. எருசலேமை கல்தேயரின் கையிலும் பாபிலோன் ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுத்தவர் யார்?
Q ➤ 1894. எருசலேமை தீக்கொளுத்தி அதைச் சுட்டெரிப்பவர்கள் யார்?
Q ➤ 1895. யாருக்கு தூபங்காட்டின வீடுகளைக் கல்தேயர் சுட்டெரிப்பார்கள்?
Q ➤ 1896. யாருக்கு பானபலிகளை வார்த்த வீடுகளைக் கல்தேயர் சுட்டெரிப்பார்கள்?
Q ➤ 1897. தங்கள் சிறுவயதுமுதல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தவர்கள் யார்?
Q ➤ 1898. இஸ்ரவேல் புத்திரர் எதினாலே கர்த்தருக்குக் கோபத்தை உண்டாக்கினார்கள்?
Q ➤ 1899. இஸ்ரவேலர் எதைக் கட்டின நாள் முதற்கொண்டு, அது கர்த்தருக்கு கோபமுண்டாகவும் உக்கிரமுண்டாகவும் இருந்தது?
Q ➤ 1900. இஸ்ரவேலர் எதைக் கட்டின நாள் முதற்கொண்டு, அது கர்த்தருடைய முகத்தைவிட்டு அகற்றுகிறதற்கு எதுவாக இருந்தது?
Q ➤ 1901. இஸ்ரவேல் மற்றும் யூதா புத்திரர் கர்த்தருக்கு எதைக் காட்டினார்கள்?
Q ➤ 1902. கர்த்தர் உபதேசித்தும், புத்தியை ஏற்றுக்கொள்ளச் செவிகொடாமற் போனவர்கள் யார்?
Q ➤ 1903. இஸ்ரவேல் மற்றும் யூதா புத்திரர் தங்கள் அருவருப்புகளை எங்கே வைத்தார்கள்?
Q ➤ 1904. ஆலயத்தை என்ன செய்யும்படிக்கு இஸ்ரவேல், யூதா புத்திரர் தங்கள் அருவருப்புகளை அதில் வைத்தார்கள்?
Q ➤ 1905. இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலிருக்கிற மேடைகளைக் கட்டினவர்கள் யார்?
Q ➤ 1906. இஸ்ரவேல் மற்றும் யூதா புத்திரர் எதற்காக இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கின் மேடைகளைக் கட்டினார்கள்?
Q ➤ 1907. எதற்கென்று தீக்கடக்கப்பண்ண இஸ்ரவேல், யூதா புத்திரர் மேடைகளைக் கட்டினார்கள்?
Q ➤ 1908. யூதா புத்திரர் எதைச் செய்யவேண்டுமென்று கர்த்தர் கற்பித்ததில்லை?
Q ➤ 1909. எருசலேம் நகரம் எவைகளினால் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும் என்று யூதா மனுஷர் கூறினார்கள்?
Q ➤ 1910. யூதா ஜனங்களை தம் சினத்திலும், கோபத்திலும், மகா உக்கிரத்திலும் துரத்தினவர் யார்?
Q ➤ 1911. கர்த்தர் யூதா ஜனங்களை எங்கே திரும்பிவரவும் அங்கே சுகமாய்க் குடியிருக்கவும் பண்ணுவார்?
Q ➤ 1912. யூதா ஜனங்களுக்கும் அவர்கள் பின்னடியாருக்கும். பிள்ளைகளுக்கும் கர்த்தர் எதைக் கட்டளையிடுவார்?
Q ➤ 1913. கர்த்தர் யூதா ஜனங்களுக்கு நன்மையுண்டாகும்படி தமக்குப் பயப்படும்படிக்கு அவர்களுக்கு எதைக்கட்டளையிடுவார்?
Q ➤ 1914. கர்த்தர் யூதா ஜனங்களை விட்டுப் பின் வாங்குவதில்லையென்று அவர்களோடே பண்ணுவது எது?
Q ➤ 1915.யூதா ஜனங்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற உடன்படிக்கையை கர்த்தர் ஏன் பண்ணுவார்?
Q ➤ 1916. தமக்குப் பயப்படும் பயத்தை யூதா ஜனங்களின் இருதயத்தில் வைப்பவர் யார்?
Q ➤ 1917. யார் தம்மைவிட்டு அகன்று போகாதபடிக்குக் கர்த்தர் தமக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்தில் வைப்பார்?
Q ➤ 1918. யூதா ஜனங்களுக்கு. ........செய்யும்படி கர்த்தர் அவர்கள்மேல் சந்தோஷமாயிருப்பார்?
Q ➤ 1919. தம் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் யூதா ஜனங்களை யூதா தேசத்தில் நிச்சயமாய் நாட்டுபவர் யார்?
Q ➤ 1920. யூதா ஜனங்களைக்குறித்துக் கர்த்தர் சொன்ன எவைகளை அவர்கள்மேல் வரப்பண்ணுவார்?
Q ➤ 1921. எவைகள் இல்லாதபடிக்குப் பாழாய்போயிற்று என்று யூதா தேசம் சொல்லப்பட்டது?
Q ➤ 1922. கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதென்று சொல்லப்படும் நிலங்கள் எங்கே கொள்ளப்படும்?
Q ➤ 1923. பென்யமீனிலும் யூதாவிலும் எருசலேமிலும் விலைக்கிரயமாய்க் கொள்ளப்படுகிற பத்திரங்களில் எவைகள் உண்டாயிருக்கும்?
Q ➤ 1924. யூதா ஜனங்களின் சிறையிருப்பைத் திருப்புபவர் யார்?