Q ➤ 1744. கடைசிநாட்களில் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பவர் யார்?
Q ➤ 1745. எதற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது?
Q ➤ 1746, யாருக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1747. பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்று சொல்லுபவர்கள் யார்?
Q ➤ 1748. அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தவர் யார்?
Q ➤ 1749, கர்த்தர் எதினால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறார்?
Q ➤ 1750. கர்த்தர் யாரை மறுபடியும் கட்டுவிப்பார்?
Q ➤ 1751. மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவது எது?
Q ➤ 1752. இஸ்ரவேல் மறுபடியும் எங்கே திராட்சத்தோட்டங்களை நாட்டும்?
Q ➤ 1753. சமாரியாவின் மலைகளில் திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறவர்கள் எதை அநுபவிப்பார்கள்?
Q ➤ 1754. யாரிடத்திற்குப் போவோம் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுவார்கள்?
Q ➤ 1755. யாரினிமித்தம் மகிழ்ச்சியாய்க் கெம்பீரிக்கவேண்டும்?
Q ➤ 1756. யார் நிமித்தம் ஆர்ப்பரிக்கவேண்டும்?
Q ➤ 1757. யாரில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று கர்த்தரிடம் சொல்ல வேண்டும்?
Q ➤ 1758. வடதேசத்திலிருந்து கர்த்தர் எவர்களை வரப்பண்ணுவார்?
Q ➤ 1759. இஸ்ரவேலில் மீதியானவர்களை பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டி வருபவர் யார்?
Q ➤ 1760. மகா கூட்டமாய் இஸ்ரவேலுக்குத் திரும்புபவர்கள் யார்?
Q ➤ 1761. அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருபவர்கள் யார்?
Q ➤ 1762. இஸ்ரவேலில் மீதியானவர்களை நடத்துபவர் யார்?
Q ➤ 1763. இஸ்ரவேலில் மீதியானவர்களை கர்த்தர் எப்படிப்பட்ட வழியில் நடக்கப்பண்ணுவார்?
Q ➤ 1764. இஸ்ரவேலுக்குப் பிதாவாயிருப்பவர் யார்?
Q ➤ 1765. கர்த்தரின் சேஷ்டபுத்திரனாயிருப்பவர் யார்?
Q ➤ 1766. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவிக்கவேண்டியவர்கள் யார்?
Q ➤ 1767. இஸ்ரவேலைச் சேர்த்துக் கொள்பவர் யார்?
Q ➤ 1768. யார் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாகக் கர்த்தர் இஸ்ரவேலைக் காப்பார்?
Q ➤ 1769. கர்த்தர் யாக்கோபை யாருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவிக்கிறார்?
Q ➤ 1770. சீயோனின் உச்சியிலே கெம்பீரிப்பவர்கள் யார்?
Q ➤ 1771. கர்த்தர் அருளும் நன்மைகளுக்காக ஓடிவருபவர்கள் யார்?
Q ➤ 1772. இஸ்ரவேலரின் ஆத்துமா எப்படிப்பட்ட தோட்டம்போலிருக்கும்?
Q ➤ 1773. இஸ்ரவேலில் கன்னிகைகளும் வாலிபரும் முதியோரும் எப்படி மகிழுவார்கள்?
Q ➤ 1774. இஸ்ரவேலரின் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுபவர் யார்?
Q ➤ 1775. கர்த்தர் இஸ்ரவேலரைத் தேற்றி, எது நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவார்?
Q ➤ 1776. கர்த்தர் யாருடைய ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவார்?
Q ➤ 1777. கர்த்தர் அளிக்கும் நன்மையினால் திருப்தியாகிறவர்கள் யார்?
Q ➤ 1778. புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் எங்கே கேட்கப்பட்டது?
Q ➤ 1779. ராமாவில் தன் பிள்ளைகளுக்காக அழுதவள் யார்?
Q ➤ 1780. ராகேல் யார் இல்லாததினால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருந்தாள்?
Q ➤ 1781. இஸ்ரவேலர் அழாதபடிக்கு எதை அடக்கும்படி கர்த்தர் கூறினார்?
Q ➤ 1782. கண்ணீர் விடாதபடிக்கு எதைக் காத்துக்கொள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1783. உன் கிரியைக்கு உண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார்?
Q ➤ 1784. சத்துருவின் தேசத்திலிருந்துத் திரும்பி வருபவர்கள் யார்?
Q ➤ 1785. இஸ்ரவேலுக்குத் தன் முடிவைப்பற்றி ........உண்டு?
Q ➤ 1786. இஸ்ரவேலரின் பிள்ளைகள் எங்கே திரும்பவருவார்கள்?
Q ➤ 1787. கர்த்தர் தன்னைத் தண்டித்தார் என்று கூறியது யார்?
Q ➤ 1788. எப்பிராயீம் எதைப்போல் அடிக்கப்பட்டதாகக் கூறினான்?
Q ➤ 1789. என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன் என்று கூறியது யார்?
Q ➤ 1790. தான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக் கொண்டிருந்தது யார்?
Q ➤ 1791. தன்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக் கொண்டிருந்தது யார்?
Q ➤ 1792. தன்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு வெட்கி நாணிக் கொண்டிருந்தது யார்?
Q ➤ 1793. எதை சுமந்து வருகிறேன் என்று எப்பிராயீம் கூறியது?
Q ➤ 1794, எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதைக் கேட்டவர் யார்?
Q ➤ 1795, கர்த்தருக்கு அருமையான குமாரன் யார்?
Q ➤ 1796. கர்த்தருக்குப் பிரியமான பிள்ளை யார்?
Q ➤ 1797. எப்பிராயீமுக்கு விரோதமாய்ப் பேசினதுமுதல் எப்பிராயீமை நினைத்துக் கொண்டே இருந்தவர் யார்?
Q ➤ 1798. கர்த்தருடைய உள்ளம் யாருக்காகக் கொதித்தது?
Q ➤ 1799. எப்பிராயீமுக்கு உருக்கமாக இரங்குபவர் யார்?
Q ➤ 1800. எதை தனக்கு நிறுத்தும்படிக் கர்த்தர் எப்பிராயீமிடம் கூறினார்?
Q ➤ 1801. எதை தனக்கு நாட்டும்படிக் கர்த்தர் எப்பிராயீமிடம் கூறினார்?
Q ➤ 1802. தான் நடந்த வழியாகிய பாதையின்மேல் தன் மனதை வைக்க வேண்டியது யார்?
Q ➤ 1803. உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு என்று யாரிடம் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 1804. "எந்தமட்டும் விலகித் திரிவாய்?" - யாரிடம் கேட்கப்பட்டது?
Q ➤ 1805. பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பவர் யார்?
Q ➤ 1806. புருஷனைச் சூழ்ந்துகொள்ளுபவள் யார்?
Q ➤ 1807. நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தை எங்கே சொல்லப்படும்?
Q ➤ 1808. கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தை எப்போது யூதாவில் சொல்லப்படும்?
Q ➤ 1809. எங்கே அதின் பட்டணங்களின் மனுஷர், பயிரிடுங் குடிகள் மற்றும் மந்தை மேய்க்கிறவர்கள் ஏகமாய்க் குடியிருப்பார்கள்?
Q ➤ 1810. கர்த்தர் எப்படிப்பட்ட ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணுவார்?
Q ➤ 1811. கர்த்தர் எப்படிப்பட்ட எல்லா ஆத்துமாவையும் நிரப்புவார்?
Q ➤ 1812. கர்த்தர் விடாய்த்த ஆத்துமாவை சம்பூரணமடையப்பண்ணுவதையும் தொய்ந்த ஆத்துமாவை நிரப்புவதையும் விழித்துப் பார்க்கிறவர் யார்?
Q ➤ 1813. எரேமியாவுக்கு இன்பமாயிருந்தது எது?
Q ➤ 1814. கர்த்தர் எவர்களை நாட்கள் வரும்போது மனுஷவித்தினாலும் மிருக வித்தினாலும் விதைப்பார்?
Q ➤ 1815. கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதாபேரில் எதற்கு ஜாக்கிரதையாயிருந்தார்? பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும்
Q ➤ 1816 . கர்த்தர் எவர்களைக் கட்டவும் நாட்டவும் ஜாக்கிரதையாயிருப்பார்?
Q ➤ 1817. பிதாக்கள் தின்ற திராட்சக்காய்களால் யாருடைய பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்?
Q ➤ 1818. அவனவன் எதினிமித்த மேசாவான்?
Q ➤ 1819. திராட்சக்காய்களைத் தின்பதினிமித்தம் யாருடைய பற்கள் கூசிப்போகும்?
Q ➤ 1820. நாட்கள் வரும்போது கர்த்தர் எவர்களோடே புது உடன்படிக்கை பண்ணுவார்?
Q ➤ 1821. நாட்கள் வரும்போது கர்த்தர் எந்தநாளில் பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் யூதாவோடே பண்ணமாட்டார்?
Q ➤ 1822. கர்த்தர் யாருக்கு நாயகராயிருந்தார்?
Q ➤ 1823. இஸ்ரவேல் மற்றும் யூதா மனுஷர் எதை மீறி அவமாக்கினார்கள்?
Q ➤ 1824. கர்த்தர் இஸ்ரவேலரோடு பண்ணும் உடன்படிக்கையில் எதை அவர்கள் உள்ளத்தில் வைப்பார்?
Q ➤ 1825. கர்த்தர் இஸ்ரவேலரோடு பண்ணும் உடன்படிக்கையில் எதை அவர்கள் இருதயத்தில் எழுதுவார்?
Q ➤ 1826. கர்த்தர் இஸ்ரவேலரோடு பண்ணும் உடன்படிக்கையில் கர்த்தர் அவர்களின்.....இருப்பார்?
Q ➤ 1827. இஸ்ரவேலில் ஒருவன் எவர்களை நோக்கி, கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை?
Q ➤ 1828. எவர்களில் சிறியவன் முதல் பெரியவன்மட்டும் எல்லாரும் கர்த்தரை அறிந்துகொள்வார்கள்?
Q ➤ 1829. இஸ்ரவேலரின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பவர் யார்?
Q ➤ 1830. கர்த்தர் எதை பகல் வெளிச்சத்துக்காக உண்டாக்கினார்?
Q ➤ 1831. கர்த்தர் எவைகளை இரா வெளிச்சத்துக்காக உண்டாக்கினார்?
Q ➤ 1832. அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிறவர் யார்?
Q ➤ 1833. சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவர் யார்?
Q ➤ 1834. எது ஒழிந்துபோனால் இஸ்ரவேல் சந்ததியும் ஒரு ஜாதியாயிராமல் அற்றுப்போம்?
Q ➤ 1835. எவைகள் அளக்கப்படக்கூடுமானால் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் செய்தவற்றினிமித்தம் கர்த்தர் வெறுத்துவிடுவார்?
Q ➤ 1836. எவைகள் ஆராயப்படக்கூடுமானால் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் செய்தவற்றினிமித்தம் கர்த்தர் வெறுத்துவிடுவார்?
Q ➤ 1837. யூதாவில் எதுமுதல் எதுமட்டும் கர்த்தருக்கென்று கட்டப்படும்?
Q ➤ 1838. காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத்புறமாக சுற்றிப் போவது எது?
Q ➤ 1839. நாட்கள் வரும்போது எவைகளைப் புதைக்கிறப் பள்ளத்தாக்கு கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்?
Q ➤ 1840. நாட்கள் வரும்போது எவைகளைப் கொட்டுகிறப் பள்ளத்தாக்கு கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்?
Q ➤ 1841. கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் யாருக்குப் பரிசுத்தமாயிருக்கும்?
Q ➤ 1842. என்றென்றைக்கும் பிடுங்கப்படாமலும் இடிக்கப்படாமலும் இருப்பது எது?