Q ➤ 1242. யாருடைய அரமனைக்குப்போய் வசனம் சொல்லும்படி கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?
Q ➤ 1243. ராஜாவும் அவன் ஊழியக்காரரும், ஜனங்களும் யாருடைய வார்த்தையைக் கேட்கவேண்டும்?
Q ➤ 1244. யூதாவின் ராஜாவும் அவன் ஊழியக்காரரும், ஜனங்களும் எதைச் செய்யவேண்டும்?
Q ➤ 1245. யூதாவின் ராஜாவும் அவன் ஊழியக்காரரும், ஜனங்களும் ஒடுக்குகிறவனுடைய கைக்கு யாரைத் தப்புவிக்கவேண்டும்?
Q ➤ 1246. யூதாவின் ராஜாவும் அவன் ஊழியக்காரரும், ஜனங்களும் எவர்களை ஒடுக்கக்கூடாது?
Q ➤ 1247. யூதாவின் ராஜாவும் அவன் ஊழியக்காரரும், ஜனங்களும் எவர்களை கொடுமை செய்யக்கூடாது?
Q ➤ 1248. யூதாவின் ராஜாவும் அவன் ஊழியக்காரரும், ஜனங்களும் எதை சிந்தக்கூடாது?
Q ➤ 1249. தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் எதின்படி செய்தால் அரமனை வாசல்வழியாய் உட்பிரவேசிப்பார்கள்?
Q ➤ 1250. தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் எப்படி செய்தால் இரதங்கள், குதிரைகளில் ஏறி அரமனையில் பிரவேசிப்பார்கள்?
Q ➤ 1251. தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளாமற்போனால் எது பாழாகும்?
Q ➤ 1252. எவைகள் பாழாகும் என்பதை கர்த்தர் தம்பேரில் ஆணையிட்டார்?
Q ➤ 1253. கர்த்தருக்குக் கீலேயாத்தைப்போல இருப்பது எது?
Q ➤ 1254. யூதா ராஜாவின் அரமனை கர்த்தருக்கு எதின் கொடுமுடியைப்போல இருந்தது?
Q ➤ 1255. கர்த்தர் எதை வனாந்தரத்தைப்போல ஆக்கிவிடுவார்?
Q ➤ 1256. யூதா ராஜாவின் அரமனையை கர்த்தர் எப்படிப்பட்ட பட்டணங்களைப் போலாக்குவார்?
Q ➤ 1257. கர்த்தர் யாரை யூதா ராஜாவின் அரமனைக்கு விரோதமாய் அனுப்புவார்?
Q ➤ 1258. சங்காரக்காரரை கர்த்தர் எவைகளோடுங்கூட யூதா ராஜாவின் அரமனைக்கு விரோதமாய் அனுப்புவார்?
Q ➤ 1259. யூதா ராஜாவின் அரமனையின் உச்சிதமான கேதுருக்களை வெட்டுபவர்கள் யார்?
Q ➤ 1260. சங்காரக்காரர் யூதா ராஜாவின் அரமனையின் உச்சிதமான கேதுருக்களை வெட்டி எதிலே போடுவார்கள்?
Q ➤ 1261. அநேகம் ஜாதிகள் எந்த நகரத்தைக் கடந்துவருவார்கள்?
Q ➤ 1262. "இந்தப் பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்ன" - கேட்பவர்கள் யார்?
Q ➤ 1263. "இந்தப் பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்ன"- எதைக்குறித்து சொல்லப்படும்?
Q ➤ 1264. யூதா ஜனங்கள் எதை விட்டுவிட்டபடியினால் எருசலேம் நகரம் இப்படியாயிற்று என்று சொல்லப்படும்?
Q ➤ 1265. யூதா ஜனங்கள் எவைகளுக்கு ஆராதனை செய்தபடியினால் எருசலேம் இப்படி ஆயிற்று என்று சொல்லப்படும்?
Q ➤ 1266. யாருக்காக அழவேண்டாம் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1267. யாருக்காகப் பரிதபிக்கவேண்டாம் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1268. யாருக்காக அழுங்கள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1269. இனித் திரும்பிவராமலும், தன் ஜநந பூமியைக் காணாமலும் இருப்பவன் யார்?
Q ➤ 1270. தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டவன் யார்?
Q ➤ 1271. யோசியா எதின் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 1272. சல்லூம் யாருடைய குமாரன்?
Q ➤ 1273. யார் இனி யூதா தேசத்துக்குத் திரும்ப வருவதில்லை என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1274. சல்லூம் எங்கே மரிப்பான் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1275. சல்லூம் இனி எந்த தேசத்தைக் காண்பதில்லை?
Q ➤ 1276. எதினாலே தன் வீட்டைக்கட்டுகிறவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1277. எதினாலே தன் மேலறைகளைக் கட்டுகிறவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1278. யாருக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலை கொள்ளுகிறவனுக்கு ஐயோ?
Q ➤ 1279. யாருடைய தகப்பன் போஜனபானம்பண்ணி நியாயமும் நீதியுஞ்செய்தபோது சுகமாய் வாழ்ந்து வந்தான்?
Q ➤ 1280. சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தவன் யார்?
Q ➤ 1281. கர்த்தரை அறிகிற அறிவு எது? சிறுமையும் எளிமையுமானவனுடைய
Q ➤ 1282. யாருடைய கண்களும் மனதும் தற்பொழிவின்மேல் வைக்கப்பட்டது?
Q ➤ 1283. யோயாக்கீமின் கண்களும் மனதும் எதைச் சிந்துவதின்மேல் வைக்கப்பட்டது?
Q ➤ 1284. யோயாக்கீமின் கண்களும் மனதும் எவைகளைச் செய்வதில் வைக்கப்பட்டது?
Q ➤ 1285. யாருக்காகப் புலம்புவதில்லையென்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1286. எது புதைக்கப்படுகிற வண்ணமாய் யோயாக்கீம் புதைக்கப்படுவான்?
Q ➤ 1287. எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுபவன் யார்?
Q ➤ 1288. லீபனோனின் மேலேறிப் புலம்பு என்று யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 1289. யோயாக்கீம் எங்கே உரத்த சத்தமிட கூறப்பட்டது?
Q ➤ 1290. ஆபரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு என்று யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 1291. யாருடைய நேசர் அனைவரும் முறிந்தார்கள்?
Q ➤ 1292. யூதா சுகமாய் வாழ்ந்திருக்கையில் யார் சொன்னதை கேளேன் என்று கூறினான்?
Q ➤ 1293. யூதா எதைக் கேளாமற்போகிறது சிறுவயதுமுதல் வழக்கமாயிருந்தது?
Q ➤ 1294. யாருடைய மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று அடித்துக்கொண்டு போகும்?
Q ➤ 1295. யாருடைய நேசர் சிறைப்பட்டுப் போவார்கள்?
Q ➤ 1296. தன் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் வெட்கப்பட்டு, இலச்சையடைவது யார்?
Q ➤ 1297. லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக் கொண்டிருக்கிறவளே என்று யாரைபற்றி கூறப்பட்டுள்ளது?
Q ➤ 1298. யூதாவுக்கு எப்படிப்பட்ட வாதை வரும்?
Q ➤ 1299. கோனியா யாருடைய குமாரன்?
Q ➤ 1300. கோனியா எதாக இருந்தாலும் கர்த்தர் அவனைக் கழற்றி எறிந்துபோடுவார்?
Q ➤ 1301. தன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் மற்றும் அவன் பயப்படுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்படுபவன் யார்?
Q ➤ 1302. நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்படுபவன் யார்?
Q ➤ 1303. கோனியாவையும் அவன் தாயையும் கர்த்தர் எங்கே துரத்திவிடுவார்?
Q ➤ 1304. கோனியாவும் அவன் தாயும் எங்கே சாவார்கள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1305. திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்குத் திரும்பி வராதவர்கள் யார்?
Q ➤ 1306. அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையைப் போன்றவன் யார்?
Q ➤ 1307. ஒருவரும் விரும்பாத பாத்திரம் யார்?
Q ➤ 1308. யார் மற்றும் அவன் சந்ததி தள்ளுண்டதாயிருக்கும்?
Q ➤ 1309. யார் மற்றும் அவன் சந்ததி தாங்கள் அறியாத தேசத்தில் துரத்தி விடப்பட்டதாயிருக்கும்?
Q ➤ 1310. சந்தானமற்றவன் யாரைக் குறித்து எழுதப்பட்டது?
Q ➤ 1311. தன் நாட்களில் வாழ்வடையாதவன் யார்?
Q ➤ 1312. யாருடைய வித்தில் ஒருவனும் தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருப்பதில்லை?