Tamil Bible Quiz Jeremiah Chapter 17

Q ➤ 1001. இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டிருந்தது எது?


Q ➤ 1002. யூதாவின் பாவம் யாருடைய இருதயத்தின் பலகையில் பதிந்திருக்கிறது?


Q ➤ 1003. யூதாவின் பாவம் எதின் கொம்புகளில் பதிந்திருக்கிறது?


Q ➤ 1004. யூதா ஜனங்களின் பிள்ளைகள் எவைகளை நினைக்கும்படி அவர்கள் பாவங்கள் பதிந்திருந்தது?


Q ➤ 1005. யூதா ஜனங்களின் பிள்ளைகள் எங்கே இருந்த பலிபீடங்களையும் தோப்புகளையும் நினைக்கும்படி அவர்கள் பாவங்கள் பதிந்திருந்தது?


Q ➤ 1006. யூதா ஜனங்கள் தங்கள் எல்லைகளில் செய்த பாவத்தினிமித்தம் அரமனைகளைde எவைகளைச் சூறையிடுவிப்பார்?


Q ➤ 1007. கர்த்தர் தனக்குக் கொடுத்த எதை யூதா விட்டுவிட்டது?


Q ➤ 1008. கர்த்தர் யூதாவை அதின் சத்துருக்களுக்கு எங்கே அடிமையாக்குவார்?


Q ➤ 1009. யூதா ஜனங்கள் என்றென்றைக்கும் எரியத்தக்க எதை மூட்டி விட்டார்கள்?


Q ➤ 1010. யாரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 1011. யார்மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரை விட்டு விலகுகிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 1012. எதை தன் புயபலமாக்கிக்கொண்டு கர்த்தரை விட்டு விலகுகிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 1013. கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ளவன் எதைப் போலிருப்பான்?


Q ➤ 1014. கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ளவன் எதைக் காணமாட்டான்?


Q ➤ 1015. வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும் குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குபவன் யார்?


Q ➤ 1016. யாரை நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்?


Q ➤ 1017. கர்த்தரை தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் எங்கே நாட்டப்பட்ட மரத்தைப்போலிருப்பான்?


Q ➤ 1018. கர்த்தரை தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் எங்கே தன் வேர்களை விடுகிற மரத்தைப்போலிருப்பான்?


Q ➤ 1019. கர்த்தரை தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் எதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிற மரத்தைப்போலிருப்பான்?


Q ➤ 1020. கர்த்தரை தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் எப்பொழுது தப்பாமல் கனிகொடுக்கிற மரத்தைப்போலிருப்பான்?


Q ➤ 1021. திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது எது?


Q ➤ 1022. கர்த்தர் ஒவ்வொருவனுக்கும் எதற்குத் தக்கதைக் கொடுப்பார்?


Q ➤ 1023. கர்த்தர் எதை ஆராய்கிறவர்?


Q ➤ 1024. கர்த்தர் எவைகளைச் சோதித்தறிகிறவர்?


Q ➤ 1025. முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமானமாயிருப்பவன் யார்?


Q ➤ 1026. அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் தன் பாதி வயதில் எதை விடுவான்?


Q ➤ 1027. அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் தன் முடிவிலே எப்படியிருப்பான்?


Q ➤ 1028. ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருந்தது எது?


Q ➤ 1029. யாரைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்?


Q ➤ 1030. ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்று யார்?


Q ➤ 1031. கர்த்தரைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் எங்கே எழுதப்படும்?


Q ➤ 1032. 'கர்த்தர் தன்னைக் குணமாக்கினால், குணமாவேன்'- கூறியவர் யார்?


Q ➤ 1033. 'கர்த்தர் தன்னை இரட்சித்தால், இரட்சிக்கப்படுவேன்'- கூறியவர் யார்?


Q ➤ 1034. 'கர்த்தருடைய வார்த்தை எங்கே?'- கேட்டவர்கள் யார்?


Q ➤ 1035, எது இப்பொழுது வரட்டும் என்று யூதா ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 1036. கர்த்தரைப் பின்பற்றுகிற மேய்ப்பனாயிருந்தவர் யார்?


Q ➤ 1037. எரேமியா எந்த நாளை விரும்பவில்லை?


Q ➤ 1038. எரேமியாவின் உதடுகளிலிருந்து புறப்பட்டது யாருக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது?


Q ➤ 1039. 'நீர் எனக்கு பயங்கரமாயிராதேயும்' கூறியவர் யார்?


Q ➤ 1040. தீங்கு நாளில் எரேமியாவுக்கு அடைக்கலம் யார்?


Q ➤ 1041. யார் வெட்கப்படவும் கலங்கவும் செய்வார்களாக என்று எரேமியா கர்த்தரிடம் கூறினார்?


Q ➤ 1042. தன்னைத் துன்பப்படுத்துகிறவர்கள்மேல் எதை வரப்பண்ணும் என்று எரேமியா கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 1043. தன்னைத் துன்பப்படுத்துகிறவர்களை எதினால் நொறுக்கும் என்று எரேமியா கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 1044. எரேமியா எங்கே நின்றுகொண்டு ஓய்வுநாளைப்பற்றி கூறவேண்டும்?


Q ➤ 1045. வாசல்களில் பிரவேசிக்கிற எவர்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கவேண்டும்?


Q ➤ 1046. யூதாவின் ராஜாக்களும் யூதரும் எருசலேமின் குடிகளும் எப்போது சுமைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவரக் கூடாது?


Q ➤ 1047. ஓய்வுநாளில் எங்கேயிருந்து சுமையை வெளியே கொண்டு வரக்கூடாது?


Q ➤ 1048. ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாதபடிக்கு எவைகளுக்காக எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 1049. பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி எதைப் பரிசுத்தமாக்க வேண்டும்?


Q ➤ 1050. புத்தியை ஏற்றுக் கொள்ளாதபடி கழுத்தைக் கடினப்படுத்தினவர்கள் யார்?


Q ➤ 1051. யூதா ஜனங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கினால் எங்கே உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இருப்பார்கள்?


Q ➤ 1052. யூதா ஜனங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கினால் எங்கே ஏறுகிற ராஜாக்களும் ராஜகுமாரரும் இருப்பார்கள்?


Q ➤ 1053. யூதா ஜனங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கினால் என்றைக்கும் குடியுள்ளதாயிருப்பது எது?


Q ➤ 1054. யூதா ஜனங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்காவிடில் கர்த்தர் எங்கே தீக்கொளுத்துவார்?


Q ➤ 1055. எருசலேமின் வாசல்களில் கர்த்தர் கொளுத்தும் தீ எதைப் பட்சித்தாலும் அவிந்துபோகாது?