Tamil Bible Quiz Jeremiah Chapter 12

Q ➤ 765. "தேவரீர் நீதியுள்ளவராமே" - கூறியவர் யார்?


Q ➤ 766. எரேமியா கர்த்தரோடே எதைக்குறித்து பேசும்படி வேண்டினார்?


Q ➤ 767. எவர்களுடைய வழி வாய்க்கிறதென்று எரேமியா கூறினார்?


Q ➤ 768. எவர்கள் சுகித்திருக்கிறார்களென்று எரேமியா கூறினார்?


Q ➤ 769. வேர் பற்றித் தேறிப்போய், கனி கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 770. ஆகாதவர்கள் மற்றும் துரோகஞ்செய்தவர்களுடைய வாய்க்குச் சமீபமாய் இருந்தவர் யார்?


Q ➤ 771. எவர்களுடைய உள்ளிந்திரியங்களுக்குக் கர்த்தர் தூரமாயிருந்தார்?


Q ➤ 772. "கர்த்தாவே நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்"- கூறியவர் யார்?


Q ➤ 773. எரேமியாவின் இருதயத்தை சோதித்து அறிந்தவர் யார்?


Q ➤ 774. ஆகாதவர்களையும் துரோகஞ்செய்கிறவர்களையும் எவைகளைப் போல பிடுங்கிப்போடும் என்று எரேமியா கர்த்தரிடம் கூறினார்?


Q ➤ 775. எவர்களை கொலைநாளுக்கு நியமியும் என்று எரேமியா கர்த்தரிடம் கூறினார்?


Q ➤ 776. ஆகாதவர்களும் துரோகஞ்செய்கிறவர்களும் தங்கள் முடிவை யார் காண்பதில்லையென்றார்கள்?


Q ➤ 777. எரேமியா எவர்களோடே ஓடும்போதே அவரை இளைக்கப் பண்ணினார்கள்?


Q ➤ 778. குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய் என்று கர்த்தர் யாரிடம் கேட்டார்?


Q ➤ 779. சமாதானமுள்ள தேசத்திலேயே அடைக்கலம் தேடியவர் யார்?


Q ➤ 780. "யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்" - யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 781. எரேமியாவின் சகோதரரும், தகப்பன் வம்சத்தாரும் எரேமியாவுக்குச் செய்தது என்ன?


Q ➤ 782. எரேமியாவைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 783. எரேமியா எவர்களை நம்பக்கூடாது?


Q ➤ 784. தம் வீட்டை விட்டுவிட்டு, தம் சுதந்தரத்தை நெகிழவிட்டவர் யார்?


Q ➤ 785. கர்த்தர் யாரை அவனுடைய சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 786. காட்டிலுள்ள சிங்கத்தைப்போல் கர்த்தருக்கு ஆனது எது?


Q ➤ 787. கர்த்தருக்கு விரோதமாய் கெர்ச்சித்தது எது?


Q ➤ 788. தமது சுதந்தரத்தை வெறுத்தவர் யார்?


Q ➤ 789. பலவர்ணமான பட்சியைப்போல கர்த்தருக்கு ஆனது எது?


Q ➤ 790. வெளியில் சகல ஜீவன்களும் எதைப் பட்சிக்கும்படி கூடிவர வேண்டும்?


Q ➤ 791.கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தை அழித்தவர்கள் யார்?


Q ➤ 792. அநேக மேய்ப்பர்கள் எதை காலால் மிதித்தார்கள்?


Q ➤ 793. கர்த்தருடைய பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினவர்கள் யார்?


Q ➤ 794. பாழாய்க் கிடந்த கர்த்தருடைய பங்கு யாரை நோக்கிப் புலம்பியது?


Q ➤ 795. வனாந்தரத்திலுள்ள எல்லா உயர் நிலங்களின்மேலும் வந்தவர்கள் யார்?


Q ➤ 796. தேசத்தின் ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருப்பது எது?


Q ➤ 797. மாம்சமாகிய ஒன்றுக்கும்.........இல்லை?


Q ➤ 798. கோதுமையை விதைத்தவர்கள் எதை அறுப்பார்கள்?


Q ➤ 799.பிரயாசப்படுபவர்கள்...அடையமாட்டார்கள்?


Q ➤ 800. ஜனங்கள் எதினால் தங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்பட வேண்டும்?


Q ➤ 801. கர்த்தர் யாரை தங்கள் தேசத்தில் இராமல் அற்றுப்போகப்பண்ணுவார்?


Q ➤ 802. இஸ்ரவேலரின் துஷ்டரான அயலார் நடுவில் இராதபடிக்கு கர்த்தர் எவர்களைப் பிடுங்கிப்போடுவார்?


Q ➤ 803. கர்த்தர் எவர்கள்மேல் இரங்கி, திரும்பவும் அவர்களைத் தங்கள் சுதந்தரத்துக்கும் தங்கள் பூமிக்கும் திரும்பப்பண்ணுவார்?


Q ➤ 804. துஷ்டரான அயலார் கர்த்தருடைய ஜனத்துக்கு எதினாலே ஆணையிடக் கற்றுக்கொடுத்தார்கள்?


Q ➤ 805. கர்த்தருடைய ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் நடுவிலே ஊன்றக் கட்டப்படுகிறவர்கள் யார்?