Tamil Bible Quiz Jeremiah Chapter 11

Q ➤ 718. எவர்களுக்குச் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகள் எரேமியா 11ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 719. யூதாவின் மனுஷரும் எருசலேமின் குடிகளும் யார் கற்பிக்கிறபடியே செய்யவேண்டும்?


Q ➤ 720. கர்த்தர் கற்பிக்கிறபடி செய்யும்போது யூதா மனுஷருக்கு தேவனாயிருப்பவர் யார்?


Q ➤ 721. யூதா மனுஷரின் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப் பண்ணினவர் யார்?


Q ➤ 722. இருப்புக்காளவாய் என்பது எது?


Q ➤ 723. கர்த்தர் கற்பித்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 724. எவைகள் ஓடுகிற தேசத்தை யூதாவின் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 725. திடச்சாட்சியாய் தம் சத்தத்தைக் கேளுங்களென்று எது விளங்கத்தக்கவிதமாய் கர்த்தர் பிதாக்களை எச்சரித்தார்?


Q ➤ 726. தம்தம் பொல்லாத இருதய கடினத்தின்படி நடந்தவர்கள் யார்?


Q ➤ 727. பிதாக்களுக்குக் கர்த்தர் கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதும் எது?


Q ➤ 728. யூதாவின் மனுஷருக்குள்ளும் எருசலேமின் குடிகளுக்குள்ளும் காணப்பட்டது என்ன?


Q ➤ 729. யூதாவின் மனுஷர் எவைகளைச் சேவிக்க, அவைகளைப் பின்பற்றினார்கள்?


Q ➤ 730. தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினவர்கள் யார்?


Q ➤ 731. இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் கர்த்தர் யாரோடே பண்ணின உடன்படிக்கையை மீறினார்கள்?


Q ➤ 732. எவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை கர்த்தர் அவர்கள்மேல் வரப்பண்ணுவார்?


Q ➤ 733. யூதா மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் ஆபத்துக்காலத்தில் இரட்சிக்காதவை எவை?


Q ➤ 734. எதினுடைய பட்டணங்களின் இலக்கமும் தேவர்களின் இலக்கமும் சரியாயிருந்தது?


Q ➤ 735. எருசலேமின் வீதிகளின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது எது?


Q ➤ 736. "நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் பண்ணவேண்டாம்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 737. யாருக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம் என்று கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 738. தங்கள் ஆபத்தினிமித்தம் கூப்பிடும்போது கர்த்தர் எவர்களைக் கேளாதிருப்பார்?


Q ➤ 739. துர்ச்சணரோடு மகா தீவினை செய்தவர்கள் யார்?


Q ➤ 740. கர்த்தருக்குப் பிரியமானவள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 741. என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது என்று கேட்டவர் யார்?


Q ➤ 742. கர்த்தர் எதை யூதா ஜனங்களைவிட்டுத் தாண்டிப் போகப்பண்ணுவார்?


Q ➤ 743. தன் பொல்லாப்பு நடக்கும்போது களிகூர்ந்தவர்கள் யார்?


Q ➤ 744. நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் யாருக்கு இட்டார்?


Q ➤ 745. மகா அமளியின் சத்தமாய் எதைச் சுற்றிலும் கர்த்தர் நெருப்பைக் கொளுத்துகிறார்?


Q ➤ 746. யூதா ஜனங்களின்........ முறிக்கப்பட்டது?


Q ➤ 747. இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் கர்த்தருக்கு கோபமுண்டாக்க யாருக்கு தூபங்காட்டினார்கள்?


Q ➤ 748. தங்களுக்கு கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் கர்த்தர் எவர்கள்மேல் தீங்கை வரப்பண்ணுவார்?


Q ➤ 749. இஸ்ரவேல் மற்றும் யூதா குடும்பத்தாரின் செய்கைகளை கர்த்தர் யாருக்குத் தெரியக்காட்டினார்?


Q ➤ 750. மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப் போடுவோமென்று கூறியவர்கள் யார்?


Q ➤ 751. எரேமியா எங்கே இராமல் போக அவனை சங்கரிப்போமென்று ஆனதோத்தின் மனுஷர் கூறினார்கள்?


Q ➤ 752. யாருடைய பேர் இனி நினைக்கப்படாமலும் போக அவனைச் சங்கரிப்போமென்று ஆனதோத்தின் மனுஷர் கூறினார்கள்?


Q ➤ 753. தனக்கு விரோதமாய் ஆலோசனைப்பண்ணியவர்களை அறியாதிருந்தவர் யார்?


Q ➤ 754. "அடிக்கப்படுவதற்கு கொண்டுப் போகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப் போல இருந்தேன்" - நான் யார்?


Q ➤ 755. உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிறவர் யார்?


Q ➤ 756. நீதியுள்ள நியாயாதிபதி யார்?


Q ➤ 757. தன் வழக்கை நீதியுள்ள நியாயாதிபதியிடம் வெளிப்படுத்திவிட்டவர் யார்?


Q ➤ 758. எரேமியாவை கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 759. எரேமியாவின் பிராணனை வாங்கத் தேடியவர்கள் யார்?


Q ➤ 760. ஆனதோத்தின் மனுஷரை விசாரிப்பவர் யார்?


Q ➤ 761. ஆனதோத்திலே எவர்கள் பட்டயத்தால் சாவார்கள்?


Q ➤ 762. ஆனதோத்தின் மனுஷரின் குமாரரும் குமாரத்திகளும் எதனால் சாவார்கள்?


Q ➤ 763. எவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை?


Q ➤ 764. கர்த்தர் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் எதை வரப் பண்ணுவார்?