Tamil Bible Quiz from Nehemiah Chapter 6

Q ➤ 164. அலங்கத்தைக் கட்டிமுடித்ததைக் கேள்விப்பட்டவர்கள் யார்?


Q ➤ 165. நெகேமியாவிடம் ஆள் அனுப்பியவர்கள் யார்?


Q ➤ 166. எங்கே இருக்கிற பள்ளத்தாக்கில் நெகேமியாவைக் கண்டு பேசுவோம் என்று சன்பல்லாத்தும் கேஷேமும் கூறினார்கள்?


Q ➤ 167. நெகேமியாவுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தவர்கள் யார்?


Q ➤ 168. "நான் பெரிய வேலையைச் செய்கிறேன்"- கூறியவன் யார்?


Q ➤ 169. நான் வேலையை விட்டு வருகிறதினால், அது மினக்கட்டுப் போவானேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 170. சன்பல்லாத்தும் கேஷேமும் எத்தனைதரம் நெகேமியாவை அழைத்தனுப்பினார்கள்?


Q ➤ 171. ஐந்தாந்தரம் சன்பல்லாத் தன் வேலைக்காரனிடம் எதை நெகேமியாவுக்கு கொடுத்து அனுப்பினான்?


Q ➤ 172. சன்பல்லாத் அனுப்பிய கடிதத்தில் எது போடப்படவில்லை?


Q ➤ 173. நெகேமியாவும் யூதரும் ............... பண்ண நினைக்கிறதாக சன்பல்லாத் எழுதி அனுப்பினான்?


Q ➤ 174. கலகம் பண்ணுவதற்காக நெகேமியா எதைக் கட்டுவதாக சன்பல்லாத் எழுதினான்?


Q ➤ 175.யூதருக்கு யார், ராஜாவாகப் போகிறதாக சன்பல்லாத் எழுதினான்?


Q ➤ 176. யார், சொல்லுகிற காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லையென்று நெகேமியா கூறினான்?


Q ➤ 177. யாருடைய கை சலித்துப்போம் என்று சொல்லி, சன்பல்லாத்தும் உடனிருந்தவர்களும் அவர்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள்?


Q ➤ 178. யார், தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது நெகேமியா அவனிடத்தில் போனான்?


Q ➤ 179. செமாயாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 180. ஆலயத்துக்குள்ளே போய், எதின் கதவுகளைப் பூட்டுவோம் என்று செமாயா கூறினான்?


Q ➤ 181. இரவிலே நெகேமியாவைக் கொன்றுபோட வருவார்கள் என்று கூறியவன் யார்?


Q ➤ 182. தேவனுடைய வீடு என்று செமாயா எதைக் கூறினான்?


Q ➤ 183. செமாயாவை யார் அனுப்பவில்லையென்று நெகேமியா அறிந்து கொண்டான்?


Q ➤ 184. எவர்கள் கூலிகொடுத்ததினால் செமாயா நெகேமியாவுக்கு விரோதமான தீர்க்கதரிசனம் சொன்னான்?


Q ➤ 185. நெகேமியா கட்டிக்கொள்ளுகிறதற்கு முகாந்தரம் உண்டாகும்படி செமாயாவுக்குக் கைக்கூலி கொடுத்தார்கள்?


Q ➤ 186.நொவதியாள் என்பவள் யார்?


Q ➤ 187.தனக்குப் பயமுண்டாக்கப் பார்த்தவர்களை நினைத்துக்கொள்ளும் என்று தேவனிடம் கூறியவன் யார்?


Q ➤ 188. எத்தனை நாளில் அலங்கம் கட்டப்பட்டது?


Q ➤ 189.எந்தநாளில் அலங்கம் கட்டி முடிந்தது?


Q ➤ 190.யூதரின் கிரியை யாரால் கைகூடி வந்ததென்று அவர்கள் பகைஞரும் சுற்றுப்புறத்தாரும் அறிந்தார்கள்?


Q ➤ 191.யாரிடத்திலிருந்து தொபியாவுக்கும், தொபியாவிடத்திலிருந்து அவர்களிடத்துக்கும் வருகிற கடிதங்கள் அநேகமாயிருந்தன?


Q ➤ 192.யூதாவில் அநேகர் யாருக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்?


Q ➤ 193. யார், செய்யும் நன்மைகளை யூதாவின் பெரிய மனிதர் நெகேமியாவுக்கு முன்பாக விவரித்தார்கள்?


Q ➤ 194. தொபியா யாருக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்பினான்?