Q ➤ 381. எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய் கூடியோட வேண்டியவர்கள் யார்?
Q ➤ 382. பென்யமீன் புத்திரர் எங்கே எக்காளம் ஊதவேண்டும்?
Q ➤ 383. பென்யமீன் புத்திரர் எங்கே அடையாளமாகத் தீ வெளிச்சங்காட்ட வேண்டும்?
Q ➤ 384. வடக்கேயிருந்து எவைகள் தோன்றுகிறதாயிருந்தது?
Q ➤ 385. செல்வமாய் வளர்ந்தவள் யார்?
Q ➤ 386. ரூபவதியான சீயோன் குமாரத்தியைப் பாழாக்குபவர் யார்?
Q ➤ 387. தங்கள் மந்தைகளோடே சீயோன் குமாரத்தியிடம் வருகிறவர்கள் யார்?
Q ➤ 388. மேய்ப்பர் சீயோன் குமாரத்திக்கு விரோதமாகச் சுற்றிலும் போடுவது என்ன?
Q ➤ 389. சீயோன் குமாரத்தியைச் சுற்றிலும் தன் தன் ஸ்தலத்திலே மேய்க்கிறவர்கள் யார்?
Q ➤ 390. யாருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம் பண்ணுங்கள் என்று மேய்ப்பர் சொல்லுவார்கள்?
Q ➤ 391. இராக்காலத்திலாகிலும் போயேறி, எவைகளை அழிப்போம் என்று மேய்ப்பர் சொல்லுவார்கள்?
Q ➤ 392. மரங்களை வெட்டி எதற்கு விரோதமாய்க் கொத்தளம்போட கர்த்தர் கூறினார்?
Q ➤ 393. விசாரிக்கப்படவேண்டிய நகரம் எது?
Q ➤ 394. எருசலேமின் உட்புறமெல்லாம் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 395. தன் தீங்கைச் சுரக்கப்பண்ணியது எது?
Q ➤ 396. ஊற்று தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுவதுபோல தன் தீங்கைச் சுரக்கப்பண்ணியது எது?
Q ➤ 397. எருசலேமில் எவைகள் கேட்கப்பட்டது?
Q ➤ 398. எருசலேமில் நித்தமும் கர்த்தருக்கு முன்பாகக் காணப்பட்டவை எவை?
Q ➤ 399. எது எருசலேமைவிட்டுப் பிரியாதபடிக்கு, எருசலேம் புத்தி கேட்க வேண்டும்?
Q ➤ 400. கர்த்தர் எருசலேமை எப்படி ஆக்காதபடிக்கு எருசலேம் புத்தி கேட்க வேண்டும்?
Q ➤ 401. யாரைப் போல கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று மேய்ப்பர் சொல்லுவார்கள்?
Q ➤ 402. மேய்ப்பர் எதை நன்றாய்ப் பொறுக்கிக் கொண்டு போவார்கள்?
Q ➤ 403. இஸ்ரவேலரின் செவி எப்படிப்பட்டது?
Q ➤ 404. இஸ்ரவேலருக்கு நிந்தையாயிருந்தது எது?
Q ➤ 405. கர்த்தருடைய வசனத்தின்மேல் விருப்பமில்லாதவர்கள் யார்?
Q ➤ 406. "நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்"- கூறியவர் யார்?
Q ➤ 407. எரேமியா எதை அடக்கி இளைத்துப் போனார்?
Q ➤ 408. கர்த்தருடைய உக்கிரம் எவர்கள்மேல் ஊற்றப்படும்?
Q ➤ 409. எங்கே உள்ள புருஷர், ஸ்திரீகள், கிழவர் மற்றும் பூரணவயதுள்ளவர்கள் பிடிக்கப்படுவார்கள்?
Q ➤ 410. யாருடைய வீடுகளும் காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளும் ஏகமாய் அந்நியர் வசமாகும்?
Q ➤ 411. தமது கையை எருசலேமின் குடிகளுக்கு விரோதமாய் நீட்டுபவர் யார்?
Q ➤ 412. எருசலேமில் சிறியோர் முதல் பெரியோர் மட்டும் எப்படிப்பட்டவர்கள்?
Q ➤ 413. எருசலேமில் தீர்க்கதரிசிகள் முதல் ஆசாரியர்கள்மட்டும்.....எப்படிப்பட்டவர்கள்?
Q ➤ 414. தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் சமாதானமில்லாதிருந்தும் என்று சொல்லுகிறார்கள்?
Q ➤ 415. தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஜனத்தின் காயங்களை எப்படி குணமாக்கினார்கள்?
Q ➤ 416. அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படாதவர்கள் யார்?
Q ➤ 417. அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் நாணப்படாதவர்கள் யார்?
Q ➤ 418. விழுகிறவர்களுக்குள்ளே விழுகிறவர்கள் யார்?
Q ➤ 419. கர்த்தர் விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோகிறவர்கள் யார்?
Q ➤ 420. வழிகளில் நின்று எவைகளைக் கேட்டு விசாரிக்கவேண்டும்?
Q ➤ 421. வழிகளில் நின்று...... எங்கே என்று பார்த்து, அதிலே நடக்கவேண்டும்?
Q ➤ 422. நல்ல வழியில் நடக்கும்போது ஆத்துமாவுக்குக் கிடைப்பது என்ன?
Q ➤ 423. நல்ல வழியில் நடக்கமாட்டோம் என்றவர்கள் யார்?
Q ➤ 424. எருசலேமின் குடிகள்மேல் கர்த்தர் யாரை வைத்தார்?
Q ➤ 425. கர்த்தர் எருசலேமின் குடிகளிடம் எதற்குச் செவிகொடுக்கச் சொன்னார்?
Q ➤ 426. எருசலேம் குடிகளுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்ள வேண்டியது எது?
Q ➤ 427. எருசலேமின் குடிகள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளாமலிருக்கிறதை கேட்கவேண்டியது எது?
Q ➤ 428. எருசலேமின் குடிகள் எதற்குச் செவிகொடாமல் அதை வெறுத்து விடுகிறார்கள்?
Q ➤ 429. கர்த்தர் எருசலேமின்மேல் எப்படிப்பட்ட தீங்கை வரப்பண்ணுவார்?
Q ➤ 430. எருசலேமின் குடிகளின்...... தமக்கு விருப்பமல்ல என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 431. எருசலேமின் குடிகளின்........கர்த்தருக்கு இன்பமாயிராது?
Q ➤ 432. கர்த்தர் யாருக்கு இடறல்களை வைப்பார்?
Q ➤ 433. கர்த்தர் வைக்கும் இடறல்கள்மேல் இடறுண்டு அழிபவர்கள் யார்?
Q ➤ 434. ஒரு ஜனம் எத்தேசத்திலிருந்து வரும்?
Q ➤ 435. பூமியின் கடையெல்லைகளிலிருந்து எழும்புவது எது?
Q ➤ 436. வடதேசத்திலிருந்து வரும் ஜனம் எவைகளைப் பிடித்து வரும்?
Q ➤ 437. கொடியரும் இரக்கம் அறியாதவர்களும் யார்?
Q ➤ 438. வடதேசத்திலிருந்து வரும் ஜனத்தின் சத்தம் எதற்கு சமானமாயிருக்கும்?
Q ➤ 439. சீயோன் குமாரத்திக்கு விரோதமாக யுத்தசந்நத்தராய்க் குதிரைகளின்மேல் வருபவர்கள் யார்?
Q ➤ 440. வடதேசத்திலிருந்து வருகிற ஜனத்தின் செய்தியைக் கேட்டவர்கள் யார்?
Q ➤ 441. வடதேசத்திலிருந்து வருகிற ஜனத்தின் செய்தியால் கைகள் தளர்ந்து இடுக்கண் அடைந்தவர்கள் யார்?
Q ➤ 442. கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனை யாரைப் பிடித்தது?
Q ➤ 443. பென்யமீன் புத்திரர் எங்கே புறப்படாதிருக்க வேண்டும்?
Q ➤ 444. பென்யமீன் புத்திரர் எங்கே நடவாதிருக்க வேண்டும்?
Q ➤ 445. யாரைச் சுற்றிலும் சத்துருவின் பட்டயம் பயங்கரமுள்ளது?
Q ➤ 446. இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலில் புரளவேண்டியது யார்?
Q ➤ 447. கர்த்தரின் ஜனமாகிய குமாரத்தி யாருக்காக துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பவேண்டும்?
Q ➤ 448. கர்த்தருடைய ஜனமாகிய குமாரத்தியின்மேல் சடிதியாய் வருகிறவன் யார்?
Q ➤ 449. இஸ்ரவேல் ஜனத்தின் வழியை அறிந்து கொள்ள வைக்கப்பட்டவர் யார்?
Q ➤ 450. இஸ்ரவேல் ஜனத்தின் வழியை சோதித்துப்பார்க்க வைக்கப்பட்டவர் யார்?
Q ➤ 451. இஸ்ரவேல் ஜனங்களுக்குள் எரேமியாவை கர்த்தர் எப்படி வைத்தார்?
Q ➤ 452. முரட்டாட்டமான அகங்காரிகள் யார்?
Q ➤ 453.தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 454. வெண்கலமும் இரும்புமானவர்கள் யார்?
Q ➤ 455. துருத்தி வெந்து, ஈயம் நெருப்பினால் அழிந்து விருதாவாய் போனது எது?
Q ➤ 456. யாருடைய பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை?
Q ➤ 457. இஸ்ரவேல் ஜனங்கள் எனப்படுவார்கள்?
Q ➤ 458. இஸ்ரவேல் ஜனங்களை தள்ளிவிட்டவர் யார்?