Q ➤ 3523. சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவர் எங்கேயிருந்து வந்தார்?
Q ➤ 3524. மகத்துவமாய் உடுத்தியிருக்கிறவர் எங்கேயிருந்து வந்தார்?
Q ➤ 3525. தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராக வந்தவர் எங்கேயிருந்து வந்தார்?
Q ➤ 3526. நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவர் யார்?
Q ➤ 3527. யாருடைய உடுப்புச் சிவப்பாக இருந்தது?
Q ➤ 3528. கர்த்தருடைய வஸ்திரங்கள் எதைப்போல இருந்தது?
Q ➤ 3529. தான் ஒருவராய் ஆலையை மிதித்தவர் யார்?
Q ➤ 3530. கர்த்தர் ஆலையை மிதிக்கும்போது யார் கர்த்தரோடிருக்கவில்லை?
Q ➤ 3531. கர்த்தர் தமது கோபத்திலே யாரை மிதித்தார்?
Q ➤ 3532, கர்த்தர் தமது உக்கிரத்திலே யாரை நசுக்கிப்போட்டார்?
Q ➤ 3533. யாருடைய இரத்தம் கர்த்தருடைய வஸ்திரங்கள்மேல் தெளித்தது?
Q ➤ 3534. தம் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டவர் யார்?
Q ➤ 3535. எதை சரிக்கட்டும் நாள் கர்த்தருடைய மனதிலிருந்தது?
Q ➤ 3536. "என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது" - கூறியவர் யார்?
Q ➤ 3537. நான் பார்த்தேன்,. ........செய்பவர் ஒருவருமில்லை?
Q ➤ 3538. யார் ஒருவருமில்லை என்று கர்த்தர் ஆச்சரியப்பட்டார்?
Q ➤ 3539, துணைசெய்வார் இல்லாததினால் கர்த்தருக்கு இரட்சிப்பானது எது?
Q ➤ 3540. துணைசெய்வார் இல்லாததினால் கர்த்தரைத் தாங்கினது எது?
Q ➤ 3541. கர்த்தர் தம் கோபத்திலே யாரை மிதித்தார்?
Q ➤ 3542. கர்த்தர் தம் உக்கிரத்திலே யாரை வெறியாக்கினார்?
Q ➤ 3543. ஜனங்களுடைய சாரத்தைத் தரையிலே இறங்கப்பண்ணினவர் யார்?
Q ➤ 3544. கர்த்தருடைய கிரியைகளையும் துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுபவர்கள் யார்?
Q ➤ 3545, கர்த்தர் செய்த எல்லாவற்றுக்காகவும் அவரைப் பிரஸ்தாபம் பண்ணுபவர்கள் யார்?
Q ➤ 3546. கர்த்தர் எவைகளின்படி இஸ்ரவேல் வம்சத்துக்கு மகா நன்மை செய்திருக்கிறார்?
Q ➤ 3547. இஸ்ரவேல் வம்சத்தார் எதற்காக கர்த்தருடைய கிரியைகளையும் துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவார்கள்?
Q ➤ 3548. இஸ்ரவேலருக்கு இரட்சகரானவர் யார்?
Q ➤ 3549. கர்த்தர் யாரை தம் ஜனந்தானென்று சொல்லி அவர்களுக்கு இரட்சகரானார்?
Q ➤ 3550.இஸ்ரவேலர்........செய்யாதிருக்கும் பிள்ளைகளென்று சொல்லி கர்த்தர் அவர்களுக்கு இரட்சகரானார்?
Q ➤ 3551. இஸ்ரவேலருடைய எல்லா நெருக்கத்திலும் நெருக்கப்பட்டவர் யார்?
Q ➤ 3552. கர்த்தருடைய சமூகத்தின் தூதனால் இரட்சிக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 3553. கர்த்தர் தமது அன்பினிமித்தம் யாரை மீட்டார்?
Q ➤ 3554. கர்த்தர் தமது பரிதாபத்தினிமித்தம் யாரை மீட்டார்?
Q ➤ 3555. பூர்வநாட்களிலெல்லாம் இஸ்ரவேலரைத் தூக்கிச் சுமந்தவர் யார்?
Q ➤ 3556. இஸ்ரவேலர் கலகம்பண்ணி யாரை விசனப்படுத்தினார்கள்?
Q ➤ 3557. இஸ்ரவேலருக்குச் சத்துருவாய் மாறினவர் யார்?
Q ➤ 3558. கர்த்தர் யாருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்?
Q ➤ 3559. பூர்வநாட்களை நினைவுகூர்ந்தவர் யார்?
Q ➤ 3560. மோசேயையும் தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தவர் யார்?
Q ➤ 3561. கர்த்தர் இஸ்ரவேலரையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் எங்கிருந்து ஏறிவரப்பண்ணினார்?
Q ➤ 3562. கர்த்தர் இஸ்ரவேலர் நடுவிலே எதை இருக்கக் கட்டளையிட்டார்?
Q ➤ 3563. இஸ்ரவேலரை தமது மகிமையின் புயத்தினால் நடத்தியவர் யார்?
Q ➤ 3664. கர்த்தர் எதைக்கொண்டு இஸ்ரவேலரை தமது மகிமையின் புயத்தினால் நடத்தினார்?
Q ➤ 3565. கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாக எதைப் பிளந்தார்?
Q ➤ 3566. கர்த்தர் தமக்கு எதை உண்டாக்க இஸ்ரவேலருக்கு முன்பாக தண்ணீரைப் பிளந்தார்?
Q ➤ 3567. இஸ்ரவேல் இடறாதபடிக்கு எவைகளைக் கடந்தார்கள்?
Q ➤ 3568. இஸ்ரவேலர் எதைப்போல ஆழங்களைக் கடந்தார்கள்?
Q ➤ 3569. பள்ளத்தாக்கில் போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறினவர்கள் யார்?
Q ➤ 3570. பள்ளத்தாக்கில் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இஸ்ரவேலரை இளைப்பாறப்பண்ணினவர் யார்?
Q ➤ 3571. கர்த்தர் தமக்கு நடத்தினார்? உண்டாக்கும்படி தம்முடைய ஜனத்தை
Q ➤ 3572. தேவன் எங்கிருந்து கண்ணோக்க வேண்டும் என்று ஏசாயா கூறினார்?
Q ➤ 3573. தேவனுடைய வாசஸ்தலம் எப்படிப்பட்டது?
Q ➤ 3574. தேவன் தம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பார்க்க வேண்டுமென்று கூறியவர் யார்?
Q ➤ 3575. தேவனுடைய ........ எங்கே என்று ஏசாயா கேட்டார்?
Q ➤ 3576. தேவன் எவைகளை தனக்கு முன்பாக அடக்கிக் கொள்கிறீரோ என்று ஏசாயா கேட்டார்?
Q ➤ 3577. இஸ்ரவேலருக்குப் பிதாவாயிருந்தவர் யார்?
Q ➤ 3578. ஆபிரகாம் எங்களை அறியான் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 3579. இஸ்ரவேலுக்கு அறியப்படாதவர்கள் யார்?
Q ➤ 3580. இஸ்ரவேலரின் பிதாவும், மீட்பருமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 3581. கர்த்தர் இஸ்ரவேலரை எவைகளைவிட்டுத் தப்பிப்போக பண்ணினார்?
Q ➤ 3582. இஸ்ரவேலரின் இருதயத்தைத் தமக்குப் பயப்படாதபடிக்கு கடினப்படுத்தியவர் யார்?
Q ➤ 3583. கர்த்தருடைய ஊழியக்காரரினிமித்தமும் அவருடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும் என்று சொன்னவர்கள் யார்?
Q ➤ 3584. பரிசுத்தமுள்ள கர்த்தருடைய ஜனங்கள் எதை கொஞ்ச காலமாத்திரம் சுதந்தரித்தார்கள்?
Q ➤ 3585. கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டவர்கள் யார்?
Q ➤ 3586. "நாங்களே உம்முடையவர்கள்"- கூறியவர்கள் யார்?
Q ➤ 3587. கர்த்தர் ஒருபோதும் எவர்களை ஆண்டதில்லை?
Q ➤ 3588. இஸ்ரவேலரின் சத்துருக்களுக்கு .. ......தரிக்கப்பட்டதில்லை?