Q ➤ 1924. வேலைசெய்கிற ஆறு நாளிலும் பூட்டப்பட்டிருக்க வேண்டியது எது?
Q ➤ 1925. கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் எப்பொழுது திறக்கப்படக்கடவது?
Q ➤ 1926. அதிபதி எந்த வாசல்வழியாய் பிரவேசித்து வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்?
Q ➤ 1927. அதிபதியின் தகனபலியையும் சமாதான பலிகளையும் படைக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 1928. வாசற்படியிலே நின்று ஆராதனை செய்து புறப்பட வேண்டியவன் யார்?
Q ➤ 1929. தேசத்து ஜனங்களும் எப்பொழுது வாசல் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள்?
Q ➤ 1930. அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி என்ன?
Q ➤ 1931. ஆட்டுக்குட்டிகளோடும் ஆட்டுக்கடாவோடும் அதிபதி எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 1932. அதிபதி எப்பொழுது ஒரு இளங்காளையையும், ஆறு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிடவேண்டும்?
Q ➤ 1933. அதிபதி வருகிறபோது எதின் வழியாய் பிரவேசித்து அதின் வழியாய் திரும்பப் புறப்படக்கடவன்?
Q ➤ 1934, கர்த்தருடைய சந்நிதியில் வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் எதன் வழியாய் புறப்படவேண்டும்?
Q ➤ 1935. கர்த்தருடைய சந்நிதியில் தெற்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் எதன் வழியாய் புறப்படவேண்டும்?
Q ➤ 1936. தேசத்தின் ஜனங்கள் கர்த்தருடைய சந்நிதியில் தான் பிரவேசித்த வாசல் வழியாக திரும்பிப்போகாமல் எப்படி புறப்பட்டு போகவேண்டும்?
Q ➤ 1937. தேசத்தின் ஜனங்கள் கர்த்தருடைய சந்நிதியில் உட்பிரவேசிக்கும் போது அவர்களோடு உட்பிரவேசிக்க வேண்டியவன் யார்?
Q ➤ 1938. பண்டிகைகளிலும் குறிக்கப்பட்டகாலங்களிலும் அதிபதி ஆட்டுக்குட்டிகளோடே எதைக் கொடுக்க வேண்டும்?
Q ➤ 1939. அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும் சமாதானபலிகளையாகிலும் உற்சாகமாக செலுத்த எந்த வாசல் திறக்கப்படவேண்டும்?
Q ➤ 1940. தினந்தோறும் அதிபதி எதை கர்த்தருக்குத் தகனபலியாக படைக்க வேண்டும்?
Q ➤ 1941. அதிபதி தினந்தோறும் தகனபலியை எப்பொழுது படைக்கவேண்டும்?
Q ➤ 1942. காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே எவ்வளவு படைக்கவேண்டும்?
Q ➤ 1943. மெல்லிய மாவை பிசையும்படிக்கு ஒருபடி எண்ணெயிலே எவ்வளவு படைக்க வேண்டும்?
Q ➤ 1944. அதிபதி யாருக்கு தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால் அது அவர்களுக்கு சொந்தமாகும்?
Q ➤ 1945. ஒரு அதிபதி தன் ஊழியக்காரனுக்கு தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால் அது எப்பொழுது அதிபதியின் வசமாய் சேரும்?
Q ➤ 1946. ஜனங்களை அவர்கள் சொந்தமானதற்கு புறம்பாக்கி அவர்கள் சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கக்கூடாதவன் யார்?
Q ➤ 1947. கர்த்தருடைய ஜனம் சிதறடிக்கப்படாதபடிக்கு அதிபதி எதிலே தன் குமாரருக்கு சுதந்தரம் கொடுக்கக்கடவன்?
Q ➤ 1948. ஆசாரியர்களின் பரிசுத்த அறைவீடுகளுக்கு மேற்கே இருபுறத்திலும் உள்ள இடம் எவைகளை சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான இடம்?
Q ➤ 1949. வெளிப் பிராகாரத்தில் நாலு மூலையிலும் இருந்தது என்ன?
Q ➤ 1950. புகைத்துவாரங்களுள்ள முற்றங்களின் அளவு என்ன?
Q ➤ 1951. புகைத்துவாரங்களுள்ள முற்றங்களைச் சுற்றிலும் உண்டாயிருந்தது என்ன?
Q ➤ 1952. சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் போடப்பட்டிருந்தது என்ன?
Q ➤ 1953. ஜனங்கள் இடும் பலிகளை சமைக்கிறவர்கள் யார்?
Q ➤ 1954. ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் எது?