Tamil Bible Quiz from Ezekiel Chapter 45

Q ➤ 1886. இஸ்ரவேலர் தேசத்தை சீட்டுப்போட்டு பங்கிடும்போது அதில் எவ்வளவு பரிசுத்த பங்காக பிரித்து வைக்கவேண்டும்?


Q ➤ 1887. தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருப்பது எது?


Q ➤ 1888. பரிசுத்த ஸ்தலத்துக்கான நாற்சதுரத்தின் அளவு என்ன?


Q ➤ 1889. பரிசுத்த ஸ்தலத்தை சுற்றிலுமான வெளி நிலத்தின் அளவு என்ன?


Q ➤ 1890. பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்க வேண்டிய அளவு என்ன?


Q ➤ 1891. பரிசுத்த பங்கு யாருடைய இடமாயிருக்கிறது?


Q ➤ 1892. ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடைய இடத்தின் அளவு எவ்வளவு?


Q ➤ 1893. லேவியருடைய காணியாட்சியிலே எத்தனை அறைவீடுகள் இருக்கவேண்டும்?


Q ➤ 1894. இஸ்ரவேல் வம்சத்தாருக்கு சொந்தமான நகரத்தின் காணியாட்சியின் அளவு என்ன?


Q ➤ 1895. மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலே கீழ்ப்புறமாகவும் யாருடைய பங்கு இருக்க வேண்டும்?


Q ➤ 1896. இஸ்ரவேல் ஜனத்தை ஒடுக்காமல் தேசத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு விட்டுவிடவேண்டியவர்கள் யார்?


Q ➤ 1897. கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து நீதியையும் நியாயத்தையும் செய்ய வேண்டியவர்கள் யார்?


Q ➤ 1898. இஸ்ரவேலின் அதிபதிகள் எதனை ஜனத்தை விட்டு அகற்றவேண்டும்?


Q ➤ 1899. சுமுத்திரையான தராசும், மரக்காலும், அளவுகுடமும் யாருக்கு இருக்கக்கடவது?


Q ➤ 1900. மரக்காலும் அளவுகுடமும் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 1901. மரக்காலும் அளவுகுடமும் கலத்திலே எத்தனைபங்கு பிடிக்கக்கடவது?


Q ➤ 1902. சேக்கலானது எத்தனை கேரா?


Q ➤ 1903. ஒரு இராத்தல் என்பது எவ்வளவு?


Q ➤ 1904. இஸ்ரவேலின் அதிபதிகளிடம் ஒரு மரக்காலில் எத்தனை பங்கு காணிக்கையாக செலுத்த வேண்டும்?


Q ➤ 1905. அதிபதிகளிடம் பத்து குடம் பிடிக்கிற கலத்துக்கு சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே எத்தனை பங்கு செலுத்தவேண்டும்?


Q ➤ 1906. பத்து அளவு குடம் என்பது ?


Q ➤ 1907. எதில் இருநூறு ஆடுகளில் ஒரு ஆட்டை செலுத்த வேண்டும்?


Q ➤ 1908, இருநூறு ஆடுகளில் ஒரு ஆட்டை எதற்காக செலுத்த வேண்டும்?


Q ➤ 1909. தேசத்தின் ஜனங்களெல்லாரும் யாருக்கு காணிக்கைச் செலுத்த கடனாளிகளாயிருக்கிறார்கள்?


Q ➤ 1910. அதிபதியின் மேல் சுமந்த கடன் எது?


Q ➤ 1911.அதிபதி எப்பொழுது பலிகளை செலுத்த வேண்டும்?


Q ➤ 1912. இஸ்ரவேல் வம்சத்தாருக்காக பலிகளைப் படைக்கவேண்டியவர் யார்?


Q ➤ 1913. பழுதற்ற ஒரு காளையைக் கொண்டு வந்து பரிசுத்த ஸ்தலத்துக்குப் பாவ நிவிர்த்தி செய்ய வேண்டிய நாள் எது?


Q ➤ 1914. எதிலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து ஆலயத்தின் வாசல் நிலைகளில் பூசக்கடவன்?


Q ➤ 1915. ஏழாந்தேதியிலே யாருக்காக ஆலயத்துக்குப் பாவ நிவிர்த்தி செய்ய வேண்டும்?


Q ➤ 1916. புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழு நாள் பண்டிகை எது?


Q ➤ 1917. பஸ்கா எப்பொழுது ஆரம்பமாகும்?


Q ➤ 1918. அதிபதி, பஸ்கா ஆரம்பமாகும் நாளிலே தனக்காகவும் ஜனங்களுக் காகவும் பாவநிவாரணத்துக்காக எதைப் படைக்க வேண்டும்?


Q ➤ 1919. அதிபதியானவன் தகனபலியாக எவைகளை பண்டிகையில் படைக்க வேண்டும்?


Q ➤ 1920. அதிபதியானவன் பண்டிகையில் தினந்தோறும் ஏழு நாளும் எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 1921. அதிபதியானவன் பண்டிகையில் தினந்தோறும் பாவநிவாரண பலியாக எதைப் படைக்க வேண்டும்?


Q ➤ 1922. அதிபதியானவன் போஜனபலியாக எவைகளைப் படைக்க வேண்டும்?


Q ➤ 1923. அதிபதி, ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே ஆரம்பமாகிற பண்டிகையில் எத்தனை நாள் பலிகளை செலுத்த வேண்டும்?