Tamil Bible Quiz from Ezekiel Chapter 40

Q ➤ 1756. இஸ்ரவேல் சிறைப்பட்டுப்போன எந்த நாளில் கர்த்தருடைய கை எசேக்கியேல்மேல் அமர்ந்தது?


Q ➤ 1757. எசேக்கியேலின்மேல் கர்த்தருடைய கை அமர்ந்தபோது நகரம் அழிக்கப்பட்டு எத்தனை வருஷமாயிருந்தது?


Q ➤ 1758. தேவதரிசனங்களில் இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டு போகப்பட்டவர் யார்?


Q ➤ 1759. எசேக்கியேலை கர்த்தர் எதின்மேல் நிறுத்தினார்?


Q ➤ 1760. மகா உயரமான மலையின்மேல் தெற்காகக் கட்டியிருந்ததுபோல் காணப்பட்டது என்ன?


Q ➤ 1761. நகரத்தில் இருந்த புருஷனுடைய தோற்றம் எப்படியிருந்தது?


Q ➤ 1762. வெண்கலமாயிருந்த புருஷனுடைய கையில் இருந்தது என்ன?


Q ➤ 1763. வெண்கலமாயிருந்த புருஷன் காண்பிப்பதை எசேக்கியேல் யாருக்குத் தெரிவிக்க வேண்டும்?


Q ➤ 1764. ஆலயத்துக்குப் புறம்பேயிருந்த மதிலை அளந்தவர் யார்?


Q ➤ 1765.வெண்கலமாயிருந்த புருஷனின் கையிலிருந்தது என்ன?


Q ➤ 1766. ஆலயத்தின் மதிலின் அகலமும் உயரமும் என்ன அளவாயிருந்தது?


Q ➤ 1767. ஆலயத்தின் ஒவ்வொரு அறையும் என்ன அளவாயிருந்தது?


Q ➤ 1768. வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் எத்தனை முழம் இருந்தது?


Q ➤ 1769. பிரவேச வாசலின் முகப்புத்துவக்கி உட்புறவாசல் மண்டபமுகப்பு மட்டும் எத்தனை முழமாயிருந்தது?


Q ➤ 1770. வாசலுக்கு உட்புறமான தூணாதாரங்களில் இருந்தது என்ன?


Q ➤ 1771. பிராகாரத்தில் பதித்தத் தளவரிசையின்மேல் இருந்தது என்ன?


Q ➤ 1772. வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் என்ன அளவாயிருந்தது?


Q ➤ 1773. எசேக்கியேல் தெற்கு வாசலால் எங்கே அழைத்துக் கொண்டு போகப்பட்டார்?


Q ➤ 1774. வடக்கு வாசலின் தூணாதாரங்கள் எங்கே இருந்தது?


Q ➤ 1775, வடக்கு வாசலின் வெளிப்பிராகாரத்தில் எவைகளைக் கழுவுவார்கள்?


Q ➤ 1776. வடக்கு வாசலின் மண்டபத்தில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்தவை எவை?


Q ➤ 1777. வடக்கு வாசலின் மண்டபத்தில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த பீடங்களில் எவைகளைச் செலுத்துவார்கள்?


Q ➤ 1778. வடக்கு வாசலின் அருகே இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் மொத்தம் எத்தனை பீடங்கள் இருந்தது?


Q ➤ 1779. வடக்கு வாசலின் அருகே இருந்த எட்டு பீடங்களிலும் எவைகளைச் செலுத்துவார்கள்?


Q ➤ 1780. வெட்டின கல்லாயிருந்தவை எவை?


Q ➤ 1781. தகனபலிக்குரிய நாலு பீடங்கள்மேல் எவைகளை வைப்பார்கள்?


Q ➤ 1782. உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தவை எவை?


Q ➤ 1783. செலுத்தும் பலிகளின் மாம்சம் எவைகளின்மேல் வைக்கப்படும்?


Q ➤ 1784. உட்பிராகாரத்திலே உள்வாசலுக்குப் புறம்பாக இருந்தவை எவை?


Q ➤ 1785. வடதிசைக்கு எதிராயிருக்கிற அறை எவர்களுடையது?


Q ➤ 1786. ஆசாரியர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்காக சேருகிற புத்திரர்?


Q ➤ 1787. பலிபீடம் எதற்கு முன்பாயிருந்தது?