Tamil Bible Quiz from Ezekiel Chapter 37

Q ➤ 1672. கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய் எதின் நடுவே நிறுத்தினார்?


Q ➤ 1673. உலர்ந்த எலும்புகள் எங்கே மகா திரளாய்க் கிடந்தது?


Q ➤ 1674. "மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 1675. எலும்புகளைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டியது யார்?


Q ➤ 1676. உலர்ந்த எலும்புகளுக்குள் கர்த்தர் எதை பிரவேசிக்கப்பண்ணுவார்?


Q ➤ 1677. கர்த்தர் எவைகள்மேல் நரம்புகளைச் சேர்த்து, மாம்சத்தை உண்டாக்கி, தோலினால் மூடி அவைகளில் ஆவியைக் கட்டளையிடுவார்?


Q ➤ 1678. எவைகள் உயிரடைந்து கர்த்தரை அறிந்து கொள்ளும்?


Q ➤ 1679. எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைக்கையில் அசைவுண்டாகி ஒவ்வொரு எலும்பும் எதனோடே சேர்ந்து கொண்டது?


Q ➤ 1680. ஆவியை நோக்கி தீர்க்கதரிசனம் உரை என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 1681. ஆவியானது எங்கிருந்து வந்து கொலையுண்டவர்கள் உயிரடையும்படிக்கு அவர்கள்மேல் ஊதவேண்டும்?


Q ➤ 1682 . உயிரடைந்து, காலூன்றி மகா பெரிய சேனையாய் நின்றவர்கள் யார்?


Q ➤ 1683. உலர்ந்த எலும்புகள் என்பது யாரைக் குறிக்கிறது?


Q ➤ 1684. எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று. நாங்கள் அறுப்புண்டு போகிறோம் என்றவர்கள் யார்?


Q ➤ 1685. கர்த்தர் எவர்களை அவர்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்பட பண்ணி அவர்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரப்பண்ணுவார்?


Q ➤ 1686. இஸ்ரவேல் வம்சத்தார் உயிரடையும்போது யாரை அறிந்து கொள்வார்கள்?


Q ➤ 1687. எசேக்கியேல் ஒரு கோலை எடுத்து அதிலே என்ன எழுதவேண்டும்?


Q ➤ 1688. எசேக்கியேல் வேறொரு கோலை எடுத்து அதிலே என்ன எழுத வேண்டும்?


Q ➤ 1689. எசேக்கியேல் எதற்காக இரண்டு கோல்களையும் ஒன்றோடொன்று இசையச் செய்ய வேண்டும்?


Q ➤ 1690. யோசேப்பின் கோலோடு யூதாவின் கோலை சேர்த்து ஒன்றாக்குபவர் யார்?


Q ➤ 1691. இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே கர்த்தர் எவர்களை ஒரே ஜாதியாக்குவார்?


Q ➤ 1692. யூதாவும் எப்பிராயிமைசேர்ந்த இஸ்ரவேல் புத்திரரும் இனி எப்படிப் பிரிவதில்லை?


Q ➤ 1693. தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் இனித் தங்களைத் தீட்டுப்படுத்தாதவர்கள் யார்?


Q ➤ 1694. இஸ்ரவேலரை இரட்சித்து அவர்களை சுத்தம்பண்ணுபவர் யார்?


Q ➤ 1695. இஸ்ரவேலரின் மேல் ராஜாவாக இருப்பவர் யார்?


Q ➤ 1696. எவர்கள் எல்லோருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்?


Q ➤ 1697. கர்த்தர் தம் தாசனாகிய யாக்கோபுக்கு கொடுத்த தேசத்திலே குடியிருப்பவர்கள் யார்?


Q ➤ 1698. இஸ்ரவேலருக்கு என்றென்றைக்கும் அதிபதியாயிருப்பவர் யார்?


Q ➤ 1699. இஸ்ரவேலரோடே கர்த்தர் செய்வது என்ன?


Q ➤ 1700. இஸ்ரவேலர் நடுவிலே கர்த்தர் என்றென்றைக்கும் ஸ்தாபிப்பது என்ன?


Q ➤ 1701. இஸ்ரவேலரிடத்தில் கர்த்தருடைய............இருக்கும்?


Q ➤ 1702. ஜாதிகள் கர்த்தரை எப்படி அறிந்துகொள்வார்கள்?