Tamil Bible Quiz from Ezekiel Chapter 29

Q ➤ 1303. 10ம் வருஷம் 10ம் மாதம் 12ம் தேதியில் எவைகளுக்கு விரோதமாய் எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைக்கவேண்டும்?


Q ➤ 1304. பார்வோன் எதின் நடுவிலே படுத்திருந்ததாகக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 1305. என் நதி என்னுடையது என்று சொன்னவன் யார்?


Q ➤ 1306. பார்வோன் எதை தனக்காக உண்டுபண்ணினேன் என்றான்?


Q ➤ 1307. 'பெரிய முதலையே' என்று யாரைப் பற்றி கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1308. பார்வோனின் வாயில் எதை மாட்டுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1309. பார்வோனின் நதிகளின் மச்சங்களை கர்த்தர் எதில் ஒட்டிக் கொள்ளும்படி செய்வார்?


Q ➤ 1310. பார்வோனை கர்த்தர் எங்கிருந்து தூக்கிவிடுவார்?


Q ➤ 1311. கர்த்தர் பார்வோனையும் அவன் நதிகளின் எல்லா மச்சங்களையும் எங்கே போட்டுவிடுவார்?


Q ➤ 1312. வெட்டவெளியிலே விழுவாய் என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 1313. நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 1314. பூமியின் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இரையாகக் கொடுக்கப்படுபவன் யார்?


Q ➤ 1315. பார்வோனை கர்த்தர் தண்டிப்பதினால் கர்த்தரை அறிந்து கொள்பவர்கள் யார்?


Q ➤ 1316. இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 1317. எகிப்து தேசத்தார் கையிலே பிடிக்கும்போது ஒடிந்துபோகிறவர் யார்?


Q ➤ 1318. எசேக்கியேல் ஒடிந்துபோய் எகிப்து தேசத்தாரின்..........பிளப்பார்?


Q ➤ 1319. எகிப்து தேசத்தார் தன்மேல் சாயும்போது முறிந்துபோகிறவர் யார்?


Q ➤ 1320. எசேக்கியேல் முறிந்து, எகிப்து தேசத்தாரின் ...........மரத்துப் போகப்பண்ணுவார்?


Q ➤ 1321. எகிப்தின்மேல் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 1322. பட்டயத்தை அனுப்பி, கர்த்தர் எகிப்தில் எவைகளை சங்காரம் பண்ணுவார்?


Q ➤ 1323. பாழும் வனாந்தரமுமாவது எது?


Q ➤ 1324. நதி யாருடையது?


Q ➤ 1325. நதியை உண்டாக்கினவர் யார்?


Q ➤ 1326. பார்வோனுக்கும் அவன் நதிகளுக்கும் விரோதமாக வருகிறவர் யார்?


Q ➤ 1327. கர்த்தர் எதை அவாந்தரமும் பாழுமான வனாந்தரமுமாக்குவார்?


Q ➤ 1328. எகிப்துதேசத்தில் எதுமுதல் எதுவரை கர்த்தர் பாழான வனாந்தரமாக்குவார்?


Q ➤ 1329. செவெனே எதிலுள்ள எல்லையிலிருந்தது?


Q ➤ 1330. எது எகிப்துதேசத்தைக் கடப்பதில்லை?


Q ➤ 1331. எது எகிப்துதேசத்தை மிதிப்பதில்லை?


Q ➤ 1332. நாற்பது வருஷம் குடியற்றிருப்பது எது?


Q ➤ 1333. எகிப்துதேசத்தைக் கர்த்தர் எவைகளின் நடுவிலே பாழாய்ப்போகப் பண்ணுவார்?


Q ➤ 1334. எகிப்தின் பட்டணங்கள் எவைகளின் நடுவிலே பாழாய்க் கிடக்கும்?


Q ➤ 1335. அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்கள் நடுவே எகிப்தின் பட்டணங்கள் எத்தனை வருஷம் பாழாய்க்கிடக்கும்?


Q ➤ 1336. கர்த்தர் எகிப்தியரை யாருக்குள்ளே சிதறடிப்பார்?


Q ➤ 1337. கர்த்தர் எகிப்தியரை யாருக்குள்ளே தூற்றிவிடுவார்?


Q ➤ 1338. 40 வருஷம் முடியும்போது எகிப்தியரை சேர்த்துக்கொள்ளுபவர் யார்?


Q ➤ 1339. 40 வருஷம் முடியும்போது கர்த்தர் எகிப்தியரை எங்கேயிருந்து சேர்த்துக்கொள்வார்?


Q ➤ 1340. எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்புபவர் யார்?


Q ➤ 1341. எகிப்தியரின் ஜநந தேசம் எது?


Q ➤ 1342. கர்த்தர் எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை எத்தேசத்திலே திரும்ப வரப்பண்ணுவார்?


Q ➤ 1343. ஜநந தேசமாகிய பத்ரோஸிலே அற்ப ராஜ்யமாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 1344. பத்ரோசில் அற்ப ராஜ்யமாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 1345. இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமலிருப்பது எது?


Q ➤ 1346. எகிப்து மற்ற ராஜ்யங்களிலும் எப்படியிருக்கும்?


Q ➤ 1347. எகிப்தை குறுகிப்போகப் பண்ணுகிறவர் யார்?


Q ➤ 1348. எகிப்து எதை ஆளாதபடிக்கு கர்த்தர் அவர்களைக் குறுகிப்போகப் பண்ணுவார்?


Q ➤ 1349. இஸ்ரவேல் வம்சத்தார் எகிப்தியரை நோக்கிக் கொண்டிருக்கிறதினால் எதை நினைப்பூட்டாதிருக்க கர்த்தர் கூறினார்?


Q ➤ 1350. எகிப்தியர் இனி யாருடைய நம்பிக்கையாயிராமற்போவார்கள்?


Q ➤ 1351. 27ம் வருஷம் முதலாம் மாதம் முதலாம்தேதியில் கர்த்தருடைய வார்த்தை யாருக்கு விரோதமாக உண்டானது?


Q ➤ 1352. நேபுகாத்நேச்சார் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 1353. தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினவன் யார்?


Q ➤ 1354. எங்கே ஒவ்வொரு தலையும் மொட்டையானது?


Q ➤ 1355. தீருவின் ஒவ்வொரு தோள்பட்டையின் உரிந்துபோயிற்று?


Q ➤ 1356. தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே கூலி கிடைக்காதவர்கள் யார்?


Q ➤ 1357. நேபுகாத்நேச்சாருக்கு எதைக் கொடுக்கிறேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1358. எகிப்தின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடிப்பவன் யார்?


Q ➤ 1359. நேபுகாத்நேச்சார் எகிப்தின் சூறையாடுவான்?


Q ➤ 1360. நேபுகாத்நேச்சார் எகிப்தின் எதை எடுத்துக்கொள்வான்?


Q ➤ 1361. நேபுகாத்நேச்சாரின் சேனைக்குக் கூலியாயிருப்பவை எவை?


Q ➤ 1362. நேபுகாத்நேச்சார் எதிலே செய்த வேலைக்குக் கூலியாகக் கர்த்தர் எகிப்தைக் கொடுத்தார்?


Q ➤ 1363. நேபுகாத்நேச்சார் தீருவுக்காகச் செய்ததை தமக்காகச் செய்தான் என்று சொன்னவர் யார்?


Q ➤ 1364. கர்த்தர் அந்நாளில் யாருடைய கொம்பை முளைக்கப்பண்ணுவார்?


Q ➤ 1365. இஸ்ரவேல் வம்சத்தார் நடுவே தாராளமாய்ப் பேசும் கட்டளையிடுவார்?