Tamil Bible Quiz from Ezekiel Chapter 24

Q ➤ 1071. எந்த நாளின் பேரையும் தேதியையும் எழுதிவைக்க கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 1072. 9-ம் வருஷம் 10-ம் மாதம் 10-ம் தேதியில் எருசலேமில் பாளயமிறங்கினவன் யார்?


Q ➤ 1073. யாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பிக்க கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 1074. எசேக்கியேல் எதை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை விட வேண்டும்?


Q ➤ 1075. எசேக்கியேல் சகல நல்ல கண்டங்களான எவைகளை கொப்பரையில் போடவேண்டும்?


Q ➤ 1076. எவைகளால் எசேக்கியேல் கொப்பரையை நிரப்பவேண்டும்?


Q ➤ 1077. கொப்பரையில் போட எதில் தெரிந்துகொள்ளப்பட்டதைக் கொண்டு வரவேண்டும்?


Q ➤ 1078. எவைகளை கொப்பரையின் கீழே குவித்து எரிக்கவேண்டும்?


Q ➤ 1079. எது வேகத்தக்கதாக கொப்பரையை பொங்கப்பொங்கக் காய்ச்ச வேண்டும்?


Q ➤ 1080...... என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! என்று கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்?


Q ➤ 1081. எதை கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டு போகவும் சீட்டுப்போடலாகாதென்றும் கர்த்தர் கூறினார்?


Q ➤ 1082. இரத்தம் சிந்திய நகரத்தின் நடுவில் இருக்கிறது என்ன?


Q ➤ 1083. மண்ணிலே மறைந்துபோகும்படி தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போடப்பட்டது எது?


Q ➤ 1084. எருசலேமின் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தவர் யார்?


Q ➤ 1085. கர்த்தராகிய ஆண்டவர் எதற்காக கோபம் மூளும்படி எருசலேமின் இரத்தத்தை கன்மலையின்மேல் வைத்தார்?


Q ➤ 1086. பெரிதான கட்டைகளைக் குவித்து எதை எரியப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்?


Q ➤ 1087. திரளான விறகுகளைக் கூட்டி, தீயை மூட்டி எதை முறுக வேவித்துச் சம்பாரங்களை இட கர்த்தர் கூறினார்?


Q ➤ 1088. எவைகளை எரித்துப்போட கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 1089. எது உருகி, நுரை நீங்கும்படி கொப்பரையை வெறுமையாகத் தழலின்மேல் வைக்கவேண்டும்?


Q ➤ 1090. மகா வருத்தத்தை உண்டாக்கியும், கொப்பரையை விட்டு நீங்காதது எது?


Q ➤ 1091. கொப்பரையின் நுரை எதற்கு உள்ளாகவேண்டியது?


Q ➤ 1092. இரத்தஞ்சிந்திய நகரத்தின் அசுத்தத்தோடே.......இருக்கிறது?


Q ➤ 1093. கர்த்தர் சுத்திகரித்தும் சுத்தமாகாதது எது?


Q ➤ 1094. இரத்தஞ்சிந்திய நகரம் தன்னில் எது ஆறித்தீருமட்டும் சுத்திகரிக்கப்பட மாட்டாது?


Q ➤ 1095. தன் வழிகளுக்கும் செய்கைகளுக்குந்தக்கதாக நியாயந் தீர்க்கப்படுவது எது?


Q ➤ 1096. கர்த்தர் எவைகளை ஒரே அடியினால் எசேக்கியேலைவிட்டு எடுத்துக் கொள்ளுவார் என்று கூறினார்?


Q ➤ 1097. தன் கண்களுக்கு விருப்பமானவளைக் கர்த்தர் எடுத்துக்கொள்ளும் போது புலம்பாமலும் அழாமலும் கண்ணீர் விடாமலும் இருக்க வேண்டியவர் யார்?


Q ➤ 1098. எசேக்கியேல் தன் மனைவியினிமித்தம் அலறாமல் பெருமூச்சுவிட்டு,.......கொண்டாடக் கூடாது?


Q ➤ 1099. எசேக்கியேல் தன் மனைவியினிமித்தம் எதை தலையில் கட்டி, எதை பாதங்களில் தொடுத்துக்கொள்ளவேண்டும்?


Q ➤ 1100. எசேக்கியேல் தன் மனைவியினிமித்தம் தாடியை மூடாமலும், எதைப் புசியாமலும் இருக்கவேண்டும்?


Q ➤ 1101. எசேக்கியேல் விடியற்காலத்தில் ஜனங்களோடே பேசியபின்பு, சாயங்காலத்தில் செத்துப்போனவள் யார்?


Q ➤ 1102. தனக்குக் கட்டளையிடப்பட்டபடியே விடியற்காலத்தில் செய்தவர் யார்?


Q ➤ 1103. எசேக்கியேல் செய்கிறவைகளின் அடையாளத்தைக் கேட்டவர்கள் யார்?


Q ➤ 1104. இஸ்ரவேல் வீட்டாரின் பலத்தின் முக்கியமும் கண்களின் விருப்பமும் ஆத்துமாவின் வாஞ்சையுமானது எது?


Q ➤ 1105. தம் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1106. இஸ்ரவேலர் விட்டுவந்த எவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்?


Q ➤ 1107. தங்கள் குமாரரும் குமாரத்திகளும் பட்டயத்தால் விழும்போது இஸ்ரவேலர் யார் செய்ததுபோல செய்வார்கள்?


Q ➤ 1108. தங்கள் குமாரரும் குமாரத்திகளும் பட்டயத்தால் விழும்போது புலம்பாமலும் அழாமலும் இருப்பவர்கள் யார்?


Q ➤ 1109. தங்கள் குமாரரும் குமாரத்திகளும் பட்டயத்தால் விழும்போது இஸ்ரவேலர் எவைகளில் வாடிப்போய், தவிப்பார்கள்?


Q ➤ 1110. இஸ்ரவேல் வீட்டாருக்கு அடையாளமாக இருப்பவர் யார்?


Q ➤ 1111. கர்த்தர் இஸ்ரவேலரின் குமாரரையும் குமாரத்திகளையும் எடுத்துக் கொள்ளும்நாளில் எசேக்கியேலின் காதுகள் கேட்கச் சொல்லுபவன் யார்?


Q ➤ 1112. கர்த்தர் இஸ்ரவேலரின் குமாரரையும் குமாரத்திகளையும் எடுத்துக் கொள்ளும் நாளில் திறக்கப்படுவது எது?