Tamil Bible Quiz from Ezekiel Chapter 16

Q ➤ 565. எசேக்கியல் எதை எருசலேமுக்கு அறிவிக்கவேண்டும்?


Q ➤ 566. எருசலேமின் உற்பத்திக்கும் பிறப்புக்கும் இடம் எது என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 567. எருசலேமின் தகப்பன் யார் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 568. எருசலேமின் தாய் யார் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 569. எசேக்கியேல் 16:4 -ல் யாருடைய பிறப்பின் வர்த்தமானம் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 570. பிறப்பின் நாளிலே சுத்தமாவதற்கு தண்ணீரினால் குளிப்பாட்டப்படாதது எது?


Q ➤ 571. எருசலேம் பிறப்பின் நாளில் எதினால் சுத்திகரிக்கப்படவில்லை?


Q ➤ 572. எருசலேம் பிறப்பின் நாளில் எதில் சுற்றப்படவில்லை?


Q ➤ 573. பிறந்த நாளில் அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டது எது?


Q ➤ 574. எருசலேமின் அருகே கர்த்தர் கடந்துபோகும்போது அது எதற்கு ஏதுவாய் இரத்தத்தில் கிடந்தது?


Q ➤ 575. இரத்தத்தில் கிடக்கிற எருசலேமைப் பார்த்து கர்த்தர் என்ன சொன்னார்?


Q ➤ 576. கர்த்தர் எருசலேமை எதைப்போல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தார்?


Q ➤ 577. வளர்ந்து பெரியவளாகி, மகா சௌந்தரியவதியானவள் யார்?


Q ➤ 578. வளர்ந்து பெரியவளானபின்பும் எருசலேம் எப்படியிருந்தது?


Q ➤ 579. கர்த்தர் எருசலேமின் அருகே கடந்துபோனபோது அதின் காலம் எப்படியிருந்தது?


Q ➤ 580. எருசலேமின்மேல் கர்த்தர் எதை விரித்தார்?


Q ➤ 581. கர்த்தர் எருசலேமின்மேல் வஸ்திரத்தை விரித்து எதை மூடினார்?


Q ➤ 582. கர்த்தர் எருசலேமுக்கு ஆணையிட்டுக் கொடுத்து, அதனோடு பண்ணியது என்ன?


Q ➤ 583. எருசலேமை ஜலத்தினால் முழுக்காட்டி, இரத்தமற ஸ்நானம் பண்ணுவித்தவர் யார்?


Q ➤ 584. கர்த்தர் எருசலேமுக்கு .........பூசினார்?


Q ➤ 585. சித்திரத்தையலாடையை எருசலேமுக்கு உடுத்தியவர் யார்?


Q ➤ 586. கர்த்தர் எருசலேமுக்கு எவைகளைத் தரித்தார்?


Q ➤ 587. எருசலேம் தன்மேல் கட்டிக்கொள்ள கர்த்தர் எதைக் கொடுத்தார்?


Q ➤ 588. எருசலேம் மூடிக்கொள்ள கர்த்தர் எதைக் கொடுத்தார்?


Q ➤ 589. கர்த்தர் எருசலேமை எவைகளால் அலங்கரித்தார்?


Q ➤ 590. எருசலேமின் கைகளிலே கர்த்தர் எவைகளை போட்டார்?


Q ➤ 591. எருசலேமின் கழுத்திலே கர்த்தர் எதை போட்டார்?


Q ➤ 592. எருசலேமின் நெற்றியில் கர்த்தர் எதை தரித்தார்?


Q ➤ 593. எருசலேமின் காதுகளில் கர்த்தர் எதை தரித்தார்?


Q ➤ 594. எருசலேமின் தலையின்மேல் கர்த்தர் எதைத் தரித்தார்?


Q ➤ 595. பொன்னினாலும் வெள்ளியினாலும் அலங்கரிக்கப்பட்டவள் யார்?


Q ➤ 596. மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது எது?


Q ➤ 597. மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டது எது?


Q ➤ 598. எருசலேம் மிகவும் அழகுள்ளவளாகி எதைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தை பெற்றது?


Q ➤ 599. எதினாலே எருசலேமின் கீர்த்தி புறஜாதிகளுக்குள்ளே பிரசித்தமானது?


Q ➤ 600. கர்த்தர் எருசலேமின்மேல் வைத்த அதின் கீர்த்தி எதினாலே புறஜாதிகளுக்குள்ளே பிரசித்தமானது?


Q ➤ 601. எருசலேம் எதை நம்பினது?


Q ➤ 602. எருசலேம் தன் கீர்த்தியினால் எப்படி நடந்தது?


Q ➤ 603. வழிப்போக்கரில் தனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம் பண்ணியது எது?


Q ➤ 604. எருசலேம் எப்படிப்பட்ட மேடைகளை தனக்கு உண்டாக்கினது?


Q ➤ 605. பலவருணச் சோடிப்பான மேடைகளின்மேல் வேசித்தனம் பண்ணியது எது?


Q ➤ 606. கர்த்தர் கொடுத்த பொன்னும் வெள்ளியுமான ஆபரணங்களால் எருசலேம் எவைகளை உண்டுபண்ணியது?


Q ➤ 607. எருசலேம் உண்டாக்கின ஆண்சுரூபங்களை எதினால் மூடினது?


Q ➤ 608. எருசலேம் உண்டாக்கின ஆண்சுரூபங்களின் முன் எவைகளைப் படைத்தது?


Q ➤ 609. தான் உண்டுபண்ணின ஆண்சுரூபத்துக்கு கர்த்தர் கொடுத்த தமது அப்பத்தை சுகந்த வாசனையாகப் படைத்தது எது?


Q ➤ 610. எருசலேம் சாப்பிடும்படி கர்த்தர் கொடுத்த எவைகளை அது தன் ஆண்சுரூபத்துக்கு சுகந்த வாசனையாகப் படைத்தது?


Q ➤ 611. எருசலேம் யாரை தன் ஆண்சுரூபத்துக்கு இரையாகப் பலியிட்டது?


Q ➤ 612. எருசலேம் கர்த்தரின் பிள்ளைகளை எதற்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்தது?


Q ➤ 613. எருசலேம் எவைகள் போதாதென்று குமாரரையும் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ண ஒப்புக் கொடுத்தது?


Q ➤ 614. தன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனது எது?


Q ➤ 615. எருசலேம் தனக்கு எவைகளைக் கட்டினது?


Q ➤ 616. எருசலேம் சகல வீதிகளிலும் தனக்கு .........உண்டுபண்ணியது?


Q ➤ 617. எருசலேம் சகல வழிமுகனையிலும் எதைக் கட்டினது?


Q ➤ 618. தன் அழகை அருவருப்பாக்கினது எது?


Q ➤ 619. வழிப்போக்கர் யாவருக்கும் தன் கால்களை விரித்தது எது?


Q ➤ 620. எருசலேம் எதை திரளாய்ப் பெருகப்பண்ணியது?


Q ➤ 621. சதை பெருத்த எருசலேமின் அயல் தேசத்தார் யார்?


Q ➤ 622. எகிப்திய புத்திரரோடே வேசித்தனம் பண்ணியது எது?


Q ➤ 623. கர்த்தருக்குக் கோபமுண்டாக்கும்படி எருசலேம் எதை பெருகப்பண்ணியது?


Q ➤ 624. கர்த்தர் எருசலேமுக்கு நியமித்த எதைக் குறுக்குவேன் என்று கூறினார்?


Q ➤ 625. எருசலேமின் பகையாளிகள் என்று யாரை கூறப்பட்டுள்ளது?


Q ➤ 626. பெலிஸ்தருடைய குமாரத்திகள் எதைக் குறித்து வெட்கப்பட்டார்கள்?


Q ➤ 627. கர்த்தர் எருசலேமை யாருடைய இச்சைக்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 628. எருசலேம் திருப்தியடையாததினால் யாரோடே வேசித்தனம் பண்ணியது?


Q ➤ 629. அசீரிய புத்திரரோடே வேசித்தனம்பண்ணியும் திருப்தியடையாதது எது?


Q ➤ 630. எருசலேம் கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை யார்மட்டும் எட்டச் செய்தது?


Q ➤ 631. வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளைச் செய்தது எது?


Q ➤ 632. மண்டபங்களைக் கட்டி, மேடைகளை உண்டாக்கினபடியால் எருசலேமின்............களைத்துப்போயிருந்தது?


Q ➤ 633. எருசலேம் எதை அலட்சியம்பண்ணுகிறதினால், அது வேசியைப்போல இருக்கவில்லை?


Q ➤ 634. தன் புருஷனுக்குப் பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிறவள் யார்?


Q ➤ 635. விபசார ஸ்திரீயைப்போல இருந்தது எது?


Q ➤ 636. எல்லா வேசிகளுக்கும்.....கொடுக்கிறார்கள்?


Q ➤ 637. தன் நேசர்கள் தன்னிடத்தில் வேசித்தனஞ்செய்ய வரும்படி எருசலேம் அவர்களுக்கு எதைக் கொடுத்தது?


Q ➤ 638. தன் நேசர்கள் தன்னிடத்தில் வேசித்தனஞ்செய்ய வரும்படி எருசலேம் அவர்களுக்குத் தருவது எது?


Q ➤ 639. யார் செய்வது விபரீதம் என்று எசேக்கியேல் 16-ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 640. தன் காமவிகாரிகளோடும் நரகலான விக்கிரகங்களோடும் எருசலேம் பண்ணியது என்ன?


Q ➤ 641. தன் காமவிகாரிகளுக்கும் நரகலான விக்கிரகங்களுக்கும் எருசலேம் எதைப் படைத்தது?


Q ➤ 642. தன் காமவிகாரிகளுக்கும் விக்கிரகங்களுக்கும் தன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் திறக்கப்பட்டது எது?


Q ➤ 643. எவர்களை நியாயந்தீர்க்கிறபடியே எருசலேமை நியாயந்தீர்ப்பேன்


Q ➤ 644. கர்த்தர் எதை எருசலேமின் பேரில் சுமத்துவார்?


Q ➤ 645, இரத்தப்பழியை கர்த்தர் எப்படி எருசலேமின்மேல் சுமத்துவார்?


Q ➤ 646. கர்த்தர் எருசலேமை எவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 647. காமவிகாரிகளும், எருசலேமை நேசித்தவர்களும் அதை பகைத்திருக்கிறவர்களும் எதை இடிப்பார்கள்?


Q ➤ 648. காமவிகாரிகளும், எருசலேமை நேசித்தவர்களும் அதை பகைத்திருக்கிறவர்களும் எதை தரையாக்கிப் போடுவார்கள்?


Q ➤ 649. காமவிகாரிகளும், எருசலேமை நேசித்தவர்களும் அதை பகைத்திருக்கிறவர்களும் எதை உரிந்து போடுவார்கள்?


Q ➤ 650. காமவிகாரிகளும், எருசலேமை நேசித்தவர்களும் அதை பகைத்திருக்கிறவர்களும் எதை எடுத்துக்கொள்வார்கள்?


Q ➤ 651. காமவிகாரிகளும், எருசலேமை நேசித்தவர்களும் அதை பகைத்திருக்கிறவர்களும் எருசலேமைஎப்படி விட்டுப்போவார்கள்?


Q ➤ 652. காமவிகாரிகளும், எருசலேமை நேசித்தவர்களும் அதை பகைத்திருக்கிறவர்களும் எதை கொண்டுவருவார்கள்?


Q ➤ 653. காமவிகாரிகளும், எருசலேமை நேசித்தவர்களும் அதை பகைத்திருக்கிறவர்களும் எருசலேமைக் கல்லெறிந்து செய்வது என்ன?


Q ➤ 654. காமவிகாரிகளும், எருசலேமை நேசித்தவர்களும் அதை பகைத்திருக்கிறவர்களும் எதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்?


Q ➤ 655. காமவிகாரிகளும், எருசலேமை நேசித்தவர்களும் அதை பகைத்திருக்கிறவர்களும் எருசலேமில் எவைகளைச் செய்வார்கள்?


Q ➤ 656. காமவிகாரிகளும், எருசலேமை நேசித்தவர்களும் பகைத்திருக்கிறவர்- களும் யாருக்கு முன்பாக எருசலேமில் நியாயத்தீர்ப்புகள் செய்வார்கள்?


Q ➤ 657. எருசலேமின் எதை ஒழியப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 658. கர்த்தர் எதை எருசலேமைவிட்டு நீங்கும்படிச் செய்வார்?


Q ➤ 659. கர்த்தர் எதை எருசலேமில் ஆறப்பண்ணுவார்?


Q ➤ 660. எருசலேமின் தலையின்மேல் எதை சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 661. தாயைப்போல மகள் என்பது என்ன?


Q ➤ 662. தாயைப் போல மகள் என்று யாரைக் குறித்து பழமொழி சொல்லுவார்கள்?


Q ➤ 663. 'தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த தன் தாயின் மகள்- யார்?


Q ➤ 664. 'தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த தன் சகோதரிகளின் சகோதரி'-யார்?


Q ➤ 665. எருசலேமின் தமக்கை என்று எதை கூறப்பட்டுள்ளது?


Q ➤ 666. எருசலேமின் தங்கை என்று எதை கூறப்பட்டுள்ளது?


Q ➤ 667. எருசலேமின் இடது புறத்தில் குடியிருந்தது எது?


Q ➤ 668. எருசலேமின் வலது புறத்தில் குடியிருந்தது எது?


Q ➤ 669. தன் எல்லா வழிகளிலேயும் எருசலேம் எவைகளைப்பார்க்கிலும் கேடாய் நடந்தது?


Q ➤ 670. எருசலேமும் அதின் குமாரத்திகளும் செய்ததுபோல செய்யாதது எது?


Q ➤ 671. சோதோமின் அக்கிரமங்கள் எவைகள்?


Q ➤ 672. சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை பலப்படுத்தாதவள் யார்?


Q ➤ 673. சோதோம் குமாரத்திகளும் தங்களை உயர்த்தி, கர்த்தரின் முகத்துக்கு முன்பாக எப்படிப்பட்டதைச் செய்தார்கள்?


Q ➤ 674. எருசலேம் செய்த பாவங்களில் அரைவாசியும் செய்யாதது எது?


Q ➤ 675. தான் செய்த எல்லா அருவருப்புகளிலும் தன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணியது எது?


Q ➤ 676. தன் சகோதரிகளை குற்றவாளிகள் என்று தீர்த்தது எது?


Q ➤ 677. தன் சகோதரிகளைப் பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த பாவத்தினிமித்தம் எருசலேம் எதை சுமக்க வேண்டும்?


Q ➤ 678. எருசலேமைப் பார்க்கிலும் நீதியுள்ளவர்கள் யார்?


Q ➤ 679. எவைகளின் சிறையிருப்பைத் திருப்பும்போது கர்த்தர் எருசலேமின் சிறையிருப்பையும் திருப்புவார்?


Q ➤ 680. எருசலேம் எவைகளுக்கு ஆறுதலாக இருக்கும்?


Q ➤ 681. சிறையிருப்பிலிருந்து திரும்பும்போது, தன் இலச்சையைச் சுமந்து தான் செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவது எது?


Q ➤ 682. தங்கள் முந்தின சீருக்குத் திரும்புகிறவர்கள் யார்?


Q ➤ 683. எருசலேமை வெறுத்தது எது?


Q ➤ 684. எவர்கள் அவமானம் பண்ணினபோது எருசலேமின் பொல்லாப்பு வெளிப்பட்டது?


Q ➤ 685. தன் கெர்வத்தின் நாளிலே சோதோமின் பெயரை தன் வாயினால் உச்சரிக்காதது எது?


Q ➤ 686. எவைகளைச் சுமப்பாய் என்று கர்த்தர் எருசலேமிடம் கூறினார்?


Q ➤ 687. உடன்படிக்கையை முறித்துப் போடுகிறதினால் ஆணையை அசட்டை பண்ணியது எது?


Q ➤ 688. எருசலேமுடன் தாம் எப்போது பண்ணின உடன்படிக்கையை நினைப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 689. இளவயதில் பண்ணின உடன்படிக்கையை நினைத்து, எதை எருசலேமுக்கு ஏற்படுத்துவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 690. எருசலேம் தன் தமக்கைகளையும் தங்கைகளையும் சேர்த்துக் கொள்ளுகையில் எதை நினைத்து நாணும்?


Q ➤ 691. கர்த்தர் எவைகளை எருசலேமுக்குக் குமாரத்திகளாகக் கொடுப்பார்?


Q ➤ 692. கர்த்தர் எருசலேமோடே ........ஏற்படுத்துவார்?


Q ➤ 693. கர்த்தர் எதை மன்னித்தருளும்போது எருசலேம் வெட்கி, நாணத்தினால் தன் வாயைத் திறக்காதிருக்கும்?