Tamil Bible Quiz from Ezekiel Chapter 1

Q ➤ 1.எசேக்கியேல் தீர்க்கதரிசி எந்த நாளில் வானங்கள் திறக்கப்பட தேவதரிசனங்களைக் கண்டார்?


Q ➤ 2.எசேக்கியேல் தீர்க்கதரிசி முப்பதாம் வருஷம் நாலாம் மாதம் ஐந்தாந்தேதி எந்த நதியண்டையில் இருந்தார்?


Q ➤ 3.எசேக்கியேல் தீர்க்கதரிசி யார் நடுவே இருக்கும்போது தீர்க்கதரிசனங்களைக் கண்டார்?


Q ➤ 4. முப்பதாம் வருஷம் எந்த ராஜாவின் சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது?


Q ➤ 5.கேபார் நதி எந்த தேசத்தில் இருந்தது?


Q ➤ 6. எசேக்கியேலின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 7.பூசி என்பவன் யாராயிருந்தான்?


Q ➤ 8. எசேக்கியேலுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானபோது அவர்மேல் அமர்ந்தது எது?


Q ➤ 9.எசேக்கியேல் வடக்கேயிருந்து எது வரக்கண்டார்?


Q ➤ 10. புசல்காற்று, மேகம், அக்கினி இவைகளைச் சுற்றிலும் உண்டாயிருந்தது எது?


Q ➤ 11.அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய ........உண்டாயிருந்தது?


Q ➤ 12. புசல்காற்று, மேகம், மற்றும் அக்கினியின் நடுவிலிருந்து எவைகள் தோன்றின?


Q ➤ 13. நாலு ஜீவன்களின் சாயல் எப்படியிருந்தது?


Q ➤ 14. மனுஷ சாயலான ஜீவன்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை முகங்கள் இருந்தன?


Q ➤ 15. மனுஷ சாயலான ஜீவன்கள் ஒவ்வொன்றிற்கும் எத்தனை செட்டைகள் இருந்தன?


Q ➤ 16. நான்கு ஜீவன்களின் கால்கள் எப்படியிருந்தன?


Q ➤ 17.நான்கு ஜீவன்களின் உள்ளங்கால்கள் எப்படியிருந்தன?


Q ➤ 18.நான்கு ஜீவன்களின் உள்ளங்கால்கள் எதைப்போல மின்னிக் கொண்டிருந்தன?


Q ➤ 19.ஜீவன்களின் செட்டைகளின் கீழ் நாலு பக்கங்களிலும் இருந்தவை எவை?


Q ➤ 20.அந்த நாலுக்கும் அதினதின் அதினதின் உண்டாயிருந்தன?


Q ➤ 21. நான்கு ஜீவன்களின் செட்டைகளும் எப்படியிருந்தன?


Q ➤ 22.நாலு ஜீவன்களும் செல்லுகையில் எதற்கு நேர்முகமாய்ச் சென்றன?


Q ➤ 23. ஜீவன்களின் முகங்களின் சாயல் வலது பக்கம் எப்படியிருந்தது?


Q ➤ 24. ஜீவன்களின் முகங்களின் சாயல் இடதுபக்கம் எப்படியிருந்தது?


Q ➤ 25. ஜீவன்களின் செட்டைகள் எப்படியிருந்தன?


Q ➤ 26. ஜீவன்களின் மற்ற இரண்டிரண்டு செட்டைகள் எதை மூடின?


Q ➤ 27.எவைகள் போகவேண்டுமென்றிருந்த இடத்துக்கு ஜீவன்கள் போயின?


Q ➤ 28. எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும், தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது எது?


Q ➤ 29. ஜீவன்களுக்குள்ளே உலாவி பிரகாசமாயிருந்தது எது?


Q ➤ 31. ஜீவன்கள் எதைப்போல ஓடித்திரிந்தன?


Q ➤ 32. ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில் எசேக்கியேல் ஜீவன்களண்டையில் கண்டது என்ன?


Q ➤ 33. சக்கரத்துக்கு எத்தனை முகங்கள் இருந்தன?


Q ➤ 34. சக்கரங்கள் எப்படிப்பட்ட வருணமாயிருந்தது?


Q ➤ 35. சக்கரத்தின் முகங்களுக்கு எப்படிப்பட்ட சாயல் இருந்தன?


Q ➤ 36. சக்கரங்கள் எதற்குள் இருந்தாற்போல் இருந்தது?


Q ➤ 37. சக்கரங்கள் ஓடுகையில் எவ்வாறு ஓடும்?


Q ➤ 38. சக்கரங்களின் வட்டங்கள் எப்படியிருந்தன?


Q ➤ 39. சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தவை எவை?


Q ➤ 40. ஜீவன்கள் செல்லும்போது அவைகள் அருகே ஓடினவை எவை?


Q ➤ 41. எவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின?


Q ➤ 42. ஜீவனுடைய ஆவி எவைகளில் இருந்தது?


Q ➤ 43. ஜீவன்கள் செல்லும்போது சென்று, நிற்கும்போது நின்றவை எவை?


Q ➤ 44. ஜீவனுடைய தலைகளின்மேல் இருந்தது என்ன?


Q ➤ 45.ஜீவனுடைய தலைகளின்மேல் இருந்த மண்டலம் எப்படியிருந்தது?


Q ➤ 46.ஜீவன்களின் செட்டைகள் மண்டலத்தின் கீழ் எப்படியிருந்தன?


Q ➤ 47.ஜீவன்களில் ஒவ்வொன்றுக்கும் எப்படிப்பட்ட செட்டைகள் இருந்தன?


Q ➤ 48. ஜீவன்கள் செல்லும்போது செட்டைகளின் இரைச்சல் எதின் இரைச்சலைப் போலிருந்தது?


Q ➤ 49.ஜீவன்கள் செல்லும்போது செட்டைகளின் இரைச்சல் யாருடைய சத்தம் போலிருந்தது?


Q ➤ 50. ஜீவன்கள் செல்லும்போது செட்டைகளின் இரைச்சல் எதற்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம் போலிருந்தது?


Q ➤ 51. ஜீவன்கள் நிற்கும்போது தங்கள் செட்டைகளை என்ன செய்தன?


Q ➤ 52. ஜீவன்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில் தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து பிறந்தது என்ன?


Q ➤ 53. ஜீவன்களின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் எதன் சாயல் இருந்தது?


Q ➤ 54. ஜீவன்களின் தலைகளுக்கு மேலுள்ள மண்டலத்தின்மீதில் சிங்காசனத்தின் சாயலின்மேல் இருந்தது என்ன?


Q ➤ 55.மனுஷசாயலுள்ளவரின் இடுப்பு முதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் என்ன நிறமாயிருந்தது?


Q ➤ 56.மனுஷசாயலுள்ளவரின் இடுப்பு முதல் கீழெல்லாம் எப்படியிருந்தது?


Q ➤ 57.மனுஷசாயலுள்ளவரின் இடுப்புமுதல் கீழெல்லாம் காணப்பட்ட அக்கினியைச் சுற்றிலும் எப்படி இருந்தது?


Q ➤ 58.மனுஷசாயலுள்ளவரின் இடுப்புக்கு கீழே காணப்பட்ட பிரகாசம் எப்படியிருந்தது?


Q ➤ 59. எசேக்கியேல் கண்ட இந்த தரிசனம் எதன் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது?


Q ➤ 60. தரிசனத்தைக் கண்டபோது எசேக்கியேல் செய்தது என்ன?


Q ➤ 61. எசேக்கியேல் முகங்குப்புற விழுந்தவுடன் எதைக் கேட்டார்?