Tamil Bible Quiz from Esther Chapter 9

Q ➤ 229. யூதரின் பகைஞர் எப்பொழுது அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்கள்?


Q ➤ 230. 12ம் மாதம் 13ம் தேதியில் யூதர்கள், யாரை மேற்கொள்ளும்படி காரியம் மாறுதலாய் முடிந்தது?


Q ➤ 231. தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப் பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 232. ஒருவரும் யாருக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது?


Q ➤ 233. யூதர்களைப் பற்றி யாருக்குப் பயமுண்டானது?


Q ➤ 234. நாடுகளில் யூதர்களுக்குத் துணைநின்றவர்கள் யார்?


Q ➤ 235. மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் யாரைப் பிடித்தது?


Q ➤ 236. ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தவன் யார்?


Q ➤ 237. யாருடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமானது?


Q ➤ 238. மேன்மேலும் பெரியவனானவன் யார்?


Q ➤ 239. யூதர் யாரையெல்லாம் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கினார்கள்?


Q ➤ 240. தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தவர்கள் யார்?


Q ➤ 241. யூதர் எங்கே 500 பேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்?


Q ➤ 242. ஆமானின் எத்தனை குமாரரை யூதர் கொன்றுபோட்டார்கள்?


Q ➤ 243. யூதர் எதற்குத் தங்கள் கையை நீட்டவில்லை?


Q ➤ 244. எங்கே கொல்லப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டு வரப்பட்டது?


Q ➤ 245. இன்றையதினத்துக் கட்டளையின்படி நாளையதினமும் செய்ய யாருக்கு உத்தரவிடும்படி எஸ்தர் ராஜாவிடம் கேட்டாள்?


Q ➤ 248. ஆதார் மாதத்தின் 14ம் தேதியில் சூசானில் யூதர் எத்தனைபேரைக் கொன்றார்கள்?


Q ➤ 249. அகாஸ்வேருவின் நாடுகளிலுள்ள யூதர் எதைத் தற்காக்க ஒருமிக்கச் சேர்ந்தார்கள்?


Q ➤ 250. அகாஸ்வேருவின் நாடுகளிலுள்ள யூதர் யாருக்கு விலகி இளைப்பாறுதல் அடையும்படி ஒருமிக்கச் சேர்ந்தார்கள்?


Q ➤ 251. அகாஸ்வேருவின் நாடுகளிலுள்ள யூதர் எத்தனைபேரைக் கொன்றார்கள்?


Q ➤ 252. அகாஸ்வேருவின் நாடுகளிலுள்ள யூதர் யாரில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றார்கள்?


Q ➤ 253. அகாஸ்வேருவின் நாடுகளிலுள்ள யூதர் எந்நாளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றார்கள்?


Q ➤ 254. அகாஸ்வேருவின் நாடுகளிலுள்ள யூதர் எந்நாளை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்?


Q ➤ 255. சூசானிலுள்ள யூதர் எந்நாளை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்?


Q ➤ 256. எங்கேக் குடியிருந்தவர்களை நாட்டுப்புறத்தாரான யூதர் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 257. நாட்டுப்புறத்தாரான யூதர் எந்தநாளை விருந்துண்கிற நாளாக்கினார்கள்?


Q ➤ 258. ஆதார் மாதத்தின் 14ம் தேதியை நாட்டுப்புறத்தாரான யூதர் ஒருவருக்கொருவர் . அனுப்புகிற நாளாக்கினார்கள்?


Q ➤ 259. இந்த வர்த்தமானங்களை எழுதி எல்லா யூதருக்கும் அனுப்பியவன் யார்?


Q ➤ 260. வருஷந்தோறும் எந்த மாதத்தை யூதர் மகிழ்ச்சியாக மாறின மாதமாக ஆசரிக்கத் திட்டம்பண்ணினார்கள்?


Q ➤ 261. யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கி இளைப்பாறுதல் அடைந்த நாளாகக் கொண்டாடத் திட்டம்பண்ணின நாட்கள் எது?


Q ➤ 262. ஆதார் மாதத்தின் 14,15ம் தேதிகளை யூதர் எது நீங்கி சந்தோஷமான நாளாகக் கொண்டாட திட்டம்பண்ணினார்கள்?


Q ➤ 263. ஆதார் மாதத்தின் 14,15ம் தேதிகளை யூதர், எது நீங்கி மகிழ்ச்கியான நாளாகக் கொண்டாட திட்டம்பண்ணினார்கள்?


Q ➤ 264. ஆதார் மாதத்தின் 14,15ம் தேதிகளில் யூதர் யாருக்கு தானதர்மஞ்செய்ய வேண்டுமென்று திட்டம்பண்ணினார்கள்?


Q ➤ 265. யூதர் தங்களுக்கு யார் எழுதினபடிச் செய்யச் சம்மதித்தார்கள்?


Q ➤ 266. யூதரைச் சங்கரிக்க நினைத்திருந்தவன் யார்?


Q ➤ 267. ஆமான் யூதரை அழிக்கவும் நிர்மூலமாக்கவும் எதைப் போடுவித்தான்?


Q ➤ 268. எஸ்தர் ராஜசமுகத்தில் போய், எதை ஆமானின் தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்தாள்?


Q ➤ 269. ஆதார் மாதத்தின் 14, 15ம் தேதிகள் எப்படி என்னப்பட்டது?


Q ➤ 270. பூரீம் என்பது .......... என்னும் பேரினால் வந்தது?


Q ➤ 271. ஆதார் மாதத்தின் 14,15 ம் தேதிகள் எங்கெங்கே நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்று நியமித்துக் கொண்டார்கள்?


Q ➤ 272. எது யூதருக்குள்ளே தவறிப்போகாமலிருக்கவேண்டும் என்று நியமித்துக்கொண்டார்கள்?


Q ➤ 273. எதைத் திடப்படுத்தும்படிக்கு, எஸ்தரும் மொர்தெகாயும் மகா உறுதியாய் எழுதினார்கள்?


Q ➤ 274. பூரீமை உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள் மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 275. அகாஸ்வேருவின் நூற்றிருபத்தேழு நாடுகளிலும் யூதருக்கு சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பியவன் யார்?


Q ➤ 276. பூரீம் நாட்களைப்பற்றின வர்த்தமானங்களை திடப்படுத்தினது எது?


Q ➤ 277. பூரீம் நாட்களைப்பற்றின எஸ்தரின் கட்டளை எதில் எழுதப்பட்டது?