Tamil Bible Quiz from Esther Chapter 3

Q ➤ 82. அகாஸ்வேரு யாரை மேன்மைப்படுத்தினான்?


Q ➤ 83. தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக ராஜா எதை உயர்த்தினான்?


Q ➤ 84. அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் யாரை வணங்கி நமஸ்கரித்தார்கள்?


Q ➤ 85. ஆமானை வணங்காமலும் நமஸ்கரிக்காமலும் இருந்தவன் யார்?


Q ➤ 86. “நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன”- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 87. மொர்தெகாய் தன்னை நமஸ்கரியாததைக் கண்டு, மூர்க்கம் நிறைந்தவன் யார்?


Q ➤ 88. யார்மேல் மாத்திரம் கைபோடுவது ஆமானுக்கு அற்பகாரியமாகக் கண்டது?


Q ➤ 89. ஆமான் யாரைச் சங்கரிக்க வகைதேடினான்?


Q ➤ 90. மொர்தெகாயின் ஜனம் எது?


Q ➤ 91. ஆமானுக்கு முன்பாக ஒவ்வொரு நாளையும் மாதத்தையும் குறித்து போடப்பட்டது என்ன?


Q ➤ 92. பூர் என்னப்பட்ட சீட்டு எந்த மாதத்தின்மேல் விழுந்தது?


Q ➤ 93. அகாஸ்வேருவின் சகல நாடுகளிலுள்ள ஜனங்களுக்குள் யார் பரம்பியிருப்பதாக ஆமான் ராஜாவிடம் கூறினான்?


Q ➤ 94. அகாஸ்வேருவின் நாடுகளுக்குள் பரம்பியிருக்கும் ஜனங்கள் எதைக் கைக்கொள்கிறதில்லையென்று ஆமான் கூறினான்?


Q ➤ 95. அழிக்கவேண்டுமென்று கூறியவன் யார்?


Q ➤ 96. நாடுகளில் பரம்பியிருக்கிற ஜனங்களை அழிக்கும்போது தான் எதை எண்ணி காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்று ஆமான் கூறினான்?


Q ➤ 97. "யூதரின் சத்துரு" - யாரைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 98. ஆமானின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 99. ராஜா எதை ஆமானிடம் கொடுத்தான்?


Q ➤ 100. அந்த ஜனத்துக்கு யாருடைய இஷ்டப்படி செய்ய ராஜா கூறினான்?


Q ➤ 101. ராஜாவின் சம்பிரதிகள் எப்பொழுது அழைக்கப்பட்டார்கள்?


Q ➤ 102. ஒரே நாளிலே யாரை அழித்துக் கொன்று நிர்மூலமாக்க கட்டளைகள் அனுப்பப்பட்டது?


Q ➤ 103. எந்த நாளில் யூதரை அழிக்கும்படியான கட்டளை அனுப்பப்பட்டது?


Q ➤ 104. யூதரை அழிக்கும்படியான கட்டளை யாருடைய பேரால் எழுதப்பட்டது?


Q ➤ 105. யூதரை அழிக்கும்படியான கட்டளையில் எதினால் முத்திரை போடப்பட்டது?


Q ➤ 106. ராஜாவின் நாடுகளுக்கு கட்டளை யார் மூலமாய் அனுப்பப்பட்டது?


Q ➤ 107. யூதருக்கு விரோதமான கட்டளை எங்கே பிறந்தது?


Q ➤ 108. யூதருக்கு விரோதமான கட்டளையால் கலங்கிய நகரம் எது?