Tamil Bible Quiz from Esther Chapter 1

Q ➤ 1. அகாஸ்வேரு எத்தனை நாடுகளை அரசாண்டான்?


Q ➤ 2. அகாஸ்வேரு எதுமுதல் எதுவரையுள்ள நாடுகளை அரசாண்டான்?


Q ➤ 3. அகாஸ்வேருவின் ராஜ்யத்தின் சிங்காசனம் எங்கே இருந்தது?


Q ➤ 4. அகாஸ்வேரு எவர்களுக்கு விருந்துபண்ணினான்?


Q ➤ 5. அகாஸ்வேரு தன் ராஜ்யபாரத்தின் எத்தனையாவது வருஷத்தில் விருந்துபண்ணினான்?


Q ➤ 6. தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தை விளங்கச்செய்து கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 7.அகாஸ்வேரு தன் மகத்துவத்தின் கொண்டிருந்தான்?


Q ➤ 8. அகாஸ்வேரு தன் ராஜ்யத்தின் ஐசுவரியத்தையும் பிரதாபத்தையும் எத்தனைநாளளவும் விளங்கச்செய்து கொண்டிருந்தான்?


Q ➤ 9. அகாஸ்வேரு 180 நாட்கள் முடிந்தபோது எங்கே விருந்து செய்வித்தான்?


Q ➤ 10. அகாஸ்வேரு சிங்காரத்தோட்டத்தில் எத்தனை நாள் விருந்து செய்தான்?


Q ➤ 11. விருந்தின்போது எப்படிப்பட்ட பாத்திரங்களில் பானம் கொடுக்கப்பட்டது?


Q ➤ 12. ராஜ ஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது எது?


Q ➤ 13. ராஜஸ்திரீயின் பெயர் என்ன?


Q ➤ 14. வஸ்தி அகாஸ்வேருவின் அரமனையில் யாருக்கு விருந்துசெய்தாள்?


Q ➤ 15. "மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீ"-யார்?


Q ➤ 16.ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாய் யாரை தனக்கு முன்பாக அழைத்துவர அகாஸ்வேரு கூறினான்?


Q ➤ 17.எதை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜா வஸ்தியை அழைத்துவரக் கூறினான்?


Q ➤ 18.வஸ்தியை அழைத்துவர ராஜா யாருக்குக் கட்டளையிட்டான்?


Q ➤ 19.ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு வரமாட்டேன் என்றவள் யார்?


Q ➤ 20. அகாஸ்வேருவின் சமுகத்தில் பெர்சியர் மேதியருடைய எத்தனை பிரபுக்கள் இருந்தார்கள்?


Q ➤ 21.எவைகளை அறிந்தவர்களிடத்தில் பேசுவது அகாஸ்வேருக்கு வழக்கமாயிருந்தது?


Q ➤ 22.தேசச் சட்டத்தின்படி வஸ்திக்குச் செய்யவேண்டியதை ராஜா யாரிடம் கேட்டான்?


Q ➤ 23.வஸ்தி யாருக்கெல்லாம் அநியாயஞ்செய்தாள் என்று மெமுகான் கூறினான்?


Q ➤ 24.புருஷரை அற்பமாய் எண்ணுவார்களென்று மெமுகான் கூறினான்?


Q ➤ 25. வஸ்தியின் செய்தியைக் கேட்கும்போது மெமுகான் கூறினான் ....... விளையும் என்று?


Q ➤ 26. யார், இனி அகாஸ்வேவுருக்கு முன்பாக வரக்கூடாது என்று மெமுகான் கூறினான்?


Q ➤ 27.எது வஸ்தியைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு கொடுக்கப்படுவதாக என்று மெமுகான் கூறினான்?


Q ➤ 28.ராஜாவிடமிருந்து பிறக்கும் கட்டளை எதில் எழுதப்பட மெமுகான் கூறினான்?


Q ➤ 29.ராஜா தீர்த்த காரியம் கேட்கப்படும்போது எல்லா ஸ்திரீகளும் யாரைக் கனம்பண்ணுவார்கள் என்று மெமுகான் கூறினான்?


Q ➤ 30. யாருடைய வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினது?


Q ➤ 31. யார், தன் வீட்டுக்கு அதிகாரியாயிருக்கவேண்டும் என்று பிரசித்தம்பண்ண ராஜா கட்டளையிட்டான்?