Tamil Bible Quiz from 2nd Kings: 8

Q ➤ 284. தன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாகிலும் சஞ்சரிக்க எலிசா யாரிடம் கூறினான்?


Q ➤ 285. கர்த்தர் தேசத்தில் எதை வருவிப்பார் என்று எலிசா கூறினான்?


Q ➤ 286. எத்தனை வருஷம் தேசத்தில் பஞ்சம் இருக்கும் என்று எலிசா கூறினான்?


Q ➤ 287. எலிசா கூறியபடி ஸ்திரீ எத்தேசத்தில் போய் சஞ்சரித்தாள்?


Q ➤ 288. பெலிஸ்தரின் தேசத்தில் அந்த ஸ்திரீ எத்தனை வருஷம் சஞ்சரித்தாள்?


Q ➤ 289. எதற்காக முறையிடும்படி ஸ்திரீ ராஜாவிடம் போனாள்?


Q ➤ 290. எதை விவரமாய்ச் சொல்லும்படி ராஜா கேயாசியிடம் கூறினான்?


Q ➤ 291. தன் வீட்டுக்காகவும் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டவள் யார்?


Q ➤ 292. "எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன்தான்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 293. ஸ்திரீக்கு உண்டான எல்லாவற்றையும் வயலின் வருமானத்தையும் அவளுக்குக் கிடைக்கும்படி செய்ய ராஜாவினால் நியமிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 294. வியாதியாயிருந்த சீரியாவின் ராஜா யார்?


Q ➤ 295. யார், தமஸ்குவுக்கு வந்திருக்கிறாதாக பெனாதாத்துக்கு அறிவிக்கப்பட்டது?


Q ➤ 296. பெனாதாத் எதற்காக ஆசகேலை எலிசாவிடம் அனுப்பினான்?


Q ➤ 297. ஆசகேல் எவைகளிலிருந்து காணிக்கையை எடுத்துக்கொண்டு எலிசாவிடம் போனான்?


Q ➤ 298. நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையுடன் எலிசாவை எதிர்கொண்டவன் யார்?


Q ➤ 299. யார், வியாதி நீங்கிப் பிழைப்பதாக ஆசகேலிடம் எலிசா கூறினான்?


Q ➤ 300. யார், சாகவே சாவான் என்பதை கர்த்தர் எலிசாவுக்குக் காண்பித்தார்?


Q ➤ 301.யார், சலித்துப் போகுமட்டும் தேவனுடைய மனுஷன் அழுதான்?


Q ➤ 302. "என் ஆண்டவன் அழுகிறது என்ன"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 303. ஆசகேல் எதை அக்கினிக்கு இரையாக்குவான் என்று எலிசா கூறினான்?


Q ➤ 304. ஆசகேல் யாரை பட்டயத்தால் கொன்று போடுவான் என்று எலிசா கூறினான்?


Q ➤ 305. இஸ்ரவேலின் குழந்தைகளை தரையோடே மோதி கர்ப்பவதிகளைக் கீறிப்போடுகிறவன் யார் என்று எலிசா கூறினான்?


Q ➤ 306. "இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம்"- கூறியவன் யார்?


Q ➤ 307. யார், சீரியாவின்மேல் ராஜாவாவான் என்று எலிசா கூறினான்?


Q ➤ 308. ஆசகேல் எதை ராஜாவின் முகத்தின்மேல் விரித்தான்?


Q ➤ 309. பெனாதாத்தைக் கொன்று, அவனுக்குப் பதிலாக ராஜாவானவன் யார்?


Q ➤ 310. யோசபாத்தின் (யூதாவின் ராஜா) மகனின் பெயர் என்ன?


Q ➤ 311. யோசபாத் இன்னும் ராஜாவாயிருக்கையில் யூதாவில் ராஜ்யபாரம் பண்ணத்துவக்கியவன் யார்?


Q ➤ 312. யோராம் யூதாவில் ராஜாவாகும்போது அவன் வயது என்ன?


Q ➤ 313. யோராம் எருசலேமில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 314. யோராம் யாருடைய வழிகளில் நடந்தான்?


Q ➤ 315. யோராம் யார் செய்ததுபோலச் செய்துவந்தான்?


Q ➤ 316. யோராமுக்கு மனைவியாயிருந்தவள் யார்?


Q ➤ 317. யாருடைய குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தார்?


Q ➤ 318. கர்த்தர் யார் நிமித்தம் யூதாவை முற்றிலும் கெடுக்காமலிருந்தார்?


Q ➤ 319. சகல இரதங்களோடும் சாயீருக்குப் புறப்பட்டுப் போனவன் யார்?


Q ➤ 320. தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தவன் யார்?


Q ➤ 321. யோராமுக்குப் பதில் யூதாவில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 322. அகசியா ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 323. அகசியா எருசலேமில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 324. அகசியாவின் தாயின் பேர் என்ன?


Q ➤ 325. அகசியா யாருடைய வழியே நடந்தான்?


Q ➤ 326. அகசியா யாருடன் யுத்தம்பண்ணும்படி யோராமோடே கூடப் போனான்?


Q ➤ 327. யோராமை(இஸ்ரவேலின் ராஜா காயப்படுத்தியவர்கள் யார்?


Q ➤ 328. சீரியர் தன்னை வெட்டின காயத்தை ஆற்றிக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போன ராஜா யார்?


Q ➤ 329. யோராமைப் பார்க்கிறதற்கு யெஸ்ரயேலுக்குப் போனவன் யார்?