Tamil Bible Quiz from 2nd Kings: 23

Q ➤ 795. யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பரையெல்லாம் கூடிவரச் செய்தவன் யார்?


Q ➤ 796. எவைகளைக் கைக்கொள்ளும்படி யோசியா ஜனங்களிடம் உடன்படிக்கை பண்ணினான்?


Q ➤ 797. யோசியா எவைகளுக்குப் பண்ணப்பட்டிருந்த பணிமுட்டுகளை ஆலயத்திலிருந்து புறம்பாக்கினான்?


Q ➤ 798. பாகால், விக்கிரகத்தோப்பு மற்றும் வானத்தின் சேனைக்கு பண்ணப்பட்டிருந்த பணிமுட்டுகளை சுட்டெரித்தவன் யார்?


Q ➤ 799. பாகாலுக்கும் விக்கிரகத் தோப்புகளுக்கும் பண்ணப்பட்டிருந்த பணிமுட்டுகளை எங்கே சுட்டெரித்தார்கள்?


Q ➤ 800. யோசியா பணிமுட்டுகளை எரித்த சாம்பலை எங்கே கொண்டுபோகப் பண்ணினான்?


Q ➤ 801. மேடைகளில் தூபங்காட்ட யார் வைத்த பூஜாசாரிகளை யோசியா அகற்றிவிட்டான்?


Q ➤ 802. எவைகளுக்கு தூபங்காட்டினவர்களை யோசியா அகற்றிவிட்டான்?


Q ➤ 803. தோப்பு விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எங்கே கொண்டுப் போனார்கள்?


Q ➤ 804. தோப்பு விக்கிரகத்தை எவ்விடத்திலே சுட்டெரித்தார்கள்?


Q ➤ 805. எதை சுட்டெரித்தபின் தூளாக்கினார்கள்?


Q ➤ 806. தோப்பு விக்கிரகத்தை எரித்த தூளை யோசியா எங்கே போடுவித்தான்?


Q ➤ 807. கர்த்தருடைய ஆலயத்துக்கு அருகே ஸ்திரீகள் எதற்கு கூடாரங்களை நெய்திருந்தார்கள்?


Q ➤ 808. தோப்பு விக்கிரகத்துக்கு கூடாரம் நெய்த இடத்திலுள்ள எவைகளை யோசியா இடித்துப்போட்டான்?


Q ➤ 809. கேபா முதல் பெயெர்செபா மட்டுமுள்ள எவைகளை யோசியா தீட்டாக்கினான்?


Q ➤ 810. எதின் வாசல்களிலிருந்த மேடையை யோசியா இடித்துப்போட்டான்?


Q ➤ 811. யாருடைய வாசற்படியின் மேடையை யோசியா இடித்துப்போட்டான்?


Q ➤ 812. புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்கு உத்தாரம் பெற்றவர்கள் யார்?


Q ➤ 813.இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற எதை யோசியா தீட்டாக்கினான்?


Q ➤ 814. யாரை மோளேகுக்குத் தீக்கடக்கப் பண்ணாதபடிக்கு யோசியா தோப்பேத்தைக் தீட்டாக்கினான்?


Q ➤ 815.பட்டணத்துக்குப் புறம்பே இருந்த பிரதானியின் பெயர் என்ன?


Q ➤ 816. யார், சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை யோசியா அகற்றினான்?


Q ➤ 817. யூதாவின் ராஜாக்கள் வைத்திருந்த சூரியனின் இரதங்களைச் சுட்டெரித்தவன் யார்?


Q ➤ 818. ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்த பலிபீடங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை?


Q ➤ 819. ஆகாசின் மேல்வீட்டில் இருந்த பலிபீடங்களை இடித்தவன் யார்?


Q ➤ 820. கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும் பலிபீடங்களை உண்டாக்கியவன் யார்?


Q ➤ 821. ஆகாசின் மேல்வீட்டிலிருந்த பலிபீடங்களையும் மனாசே செய்த பலிபீடங்களையும் இடித்த தூளை யோசியா எங்கே கொட்டினான்?


Q ➤ 822. நாசமலை எதற்கு எதிரே இருந்தது?


Q ➤ 823. சீதோனியரின் அருவருப்பின் பெயர் என்ன?


Q ➤ 824. மோவாபியரின் அருவருப்பின் பெயர் என்ன?


Q ➤ 825. அம்மோன் புத்திரரின் அருவருப்பின் பெயர் என்ன?


Q ➤ 826. சாலொமோன் எவைகளுக்குக் கட்டியிருந்த மேடைகளை யோசியா தீட்டாக்கினான்?


Q ➤ 827. சாலொமோன் கட்டியிருந்த சிலைகளை உடைத்து விக்கிரகத் தோப்புகளை நிர்மூலமாக்கியவன் யார்?


Q ➤ 828. யோசியா சாலொமோனின் விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி எதினால் அதை நிரப்பினான்?


Q ➤ 829. யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த எவைகளை யோசியா இடித்தான்?


Q ➤ 830. யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த சுட்டெரித்தான்? யோசியா


Q ➤ 831. யோசியா கல்லறைகளிலுள்ள எலும்புகளை பெத்தேலிலுள்ள எதின்மேல் சுட்டெரித்தான்?


Q ➤ 832. "நான் காண்கிற அந்த குறிப்படையாளம் என்ன?"- கேட்டவன் யார்?


Q ➤ 833. யோவாஸ் கல்லறையில் கண்ட குறிப்படையாளம் யாருடையது?


Q ➤ 834. எதைத் தொடவேண்டாம் என்று யோசியா கூறினான்?


Q ➤ 835. தேவனுடைய மனுஷனின் எலும்புகளை எவைகளோடு விட்டுவிட்டார்கள்?


Q ➤ 836. சமாரியாவில் யார் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களை யோசியா தகர்த்தான்?


Q ➤ 837. சமாரியாவிலிருந்த ஆசாரியரை யோசியா எதின்மேல் கொன்று போட்டான்?


Q ➤ 838. சாமாரியாவின் பலிபீடங்களின்மேல் யோசியா எவைகளைச் சுட்டெரித்தான்?


Q ➤ 839. கர்த்தருக்கு கட்டளையிட்டான்?..ஆசாரிக்கும்படி யோசியா ஜனங்களுக்கு


Q ➤ 840. யோசியாவின் எத்தனையாவது வருஷத்தில் எருசலேமில் பஸ்கா ஆசரிக்கப்பட்டது?


Q ➤ 841. எதை நிறைவேற்றும்படிக்கு, யோசியா யூதா மற்றும் எருசலேமிலுள்ள அருவருப்புகளை நிர்மூலமாக்கினான்?


Q ➤ 842. மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய தன் மனதைச் சாய்த்தவன் யார்?


Q ➤ 843. "அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குபின் எழும்பினதுமில்லை* - யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 844. எதினால் கர்த்தர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய கோபத்தின் உக்கிரகத்தை விட்டுத் திரும்பவில்லை?


Q ➤ 845. கர்த்தர் எதை வெறுத்துவிடுவேன் என்று கூறினார்?


Q ➤ 846, யோசியாவின் நாட்களில் எகிப்தில் இருந்த ராஜா யார்?


Q ➤ 847. அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போனவன் யார்?


Q ➤ 848. பார்வோன்நேகா ஐபிராத்து நதிக்குப் போகிறபோது அவனுக்கு எதிர்ப்பட்டவன் யார்?


Q ➤ 849. யோசியாவை வெட்டிக் கொன்றவன் யார்?


Q ➤ 850. பார்வோன்நேகா யோசியாவை எங்கே வெட்டிக்கொன்றான்?


Q ➤ 851. மரணமடைந்த யோசியாவை இரதத்தின்மேல் ஏற்றி, எருசலேமுக்குக் கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 852. யோசியாவின் ஸ்தானத்தில் ஜனங்கள் யாரை ராஜாவாக்கினார்கள்?


Q ➤ 853. யோவாகாசின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 854. யோவாகாஸ் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 855. யோவாகாஸ் எருசலேமில் எவ்வளவு நாள் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 856. யோவாகாசின் அம்மா பெயர் என்ன?


Q ➤ 857. யோவாகாஸ் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 858. யோவாகாஸ் எருசலேமில் அரசாளாதபடிக்கு அவனைப் பிடித்து கட்டுவித்தவன் யார்?


Q ➤ 859. பார்வோன்நேகா எங்கே யோவாகாசைப் பிடித்துக் கட்டுவித்தான்?


Q ➤ 860. பார்வோன்நேகா எருசலேமின்மேல் எவ்வளவு வெள்ளியை சுமத்தினான்?


Q ➤ 861. பார்வோன்நேகா எருசலேமில் அபராதமாக சுமத்தின பொன் எவ்வளவு?


Q ➤ 862. பார்வோன்நேகா யோசியாவின் ஸ்தானத்தில் யாரை ராஜாவாக வைத்தான்?


Q ➤ 863. எலியாக்கீம் யாருடைய குமாரன்?


Q ➤ 864. பார்வோன்நேகா எலியாக்கீமின் பெயரை எப்படி மாற்றினான்?


Q ➤ 865. யோவாகாஸ் எவ்விடத்தில் வைத்து மரித்தான்?


Q ➤ 866. பார்வோன்நேகா எருசலேமின்மேல் சுமத்தின பொன்னையும், வெள்ளியையும் அவனுக்குக் கொடுத்தவன் யார்?


Q ➤ 867. யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுக்க வேண்டிய பொன்னையும், வெள்ளியையும் யார் கையில் தண்டினான்?


Q ➤ 868. யோயாக்கீம் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 869. யோயாக்கீம் எருசலேமில் எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 870. யோயாக்கீமின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 871. யோயாக்கீம் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?