Tamil Bible Quiz from 2nd Kings: 10

Q ➤ 372. ஆகாபுக்கு சமாரியாவில் இருந்த குமாரர் எத்தனை பேர்?


Q ➤ 373. யெகூ சமாரியாவின் மூப்பரிடத்துக்கும் ராஜாவின் பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்திற்கும்.......எழுதினான்?


Q ➤ 374. யாரை சிங்காசனத்தின்மேல் வைக்க யெகூ நிருபத்தில் எழுதியிருந்தான்?


Q ➤ 375.வாருக்காக யுத்தம்பண்ணுங்கள் என்று யெகூ நிருபத்தில் எழுதியிருந்தான்?


Q ➤ 376. யாருக்கு முன்பாக இரண்டு ராஜாக்கள் நிற்கவில்லையே என்று சமாரியாவின் மூப்பர் கூறினார்கள்?


Q ➤ 377. உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று சொல்லியனுப்பியவர்கள் யார்?


Q ➤ 378. யெகூ எத்தனை முறை சமாரியா மூப்பருக்கு நிருபங்களை அனுப்பினான்?


Q ➤ 379. யாருடைய தலைகளை வாங்கி, எருசலேமுக்குத் தன்னிடத்தில் வரும்படி யெகூ நிருபத்தில் எழுதினான்?


Q ➤ 380. தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தவர்கள் யார்?


Q ➤ 381. எவைகளை கூடையில் வைத்து, யெகூவினிடத்தில் அனுப்பினார்கள்?


Q ➤ 382. ராஜகுமாரரின் தலைகளை எங்கே இரண்டு குவியலாக குவித்துவைக்க யெகூ கூறினான்?


Q ➤ 383. எதை விடியற்காலமட்டும் இரண்டு குவியலாக குவித்து வைத்தார்கள்?


Q ➤ 384. ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை"- கூறியவன் யார்?


Q ➤ 385. கர்த்தர் யாரைக் கொண்டு சொன்னதை செய்தார் என்று யெகூ கூறினான்?


Q ➤ 386. யெகூ ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊரில் வந்தபோது யாரைக் கண்டான்?


Q ➤ 387. ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 388. யெகூ ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே எத்தனை பேரை வெட்டிப்போட்டான்?


Q ➤ 389. யெகூ ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலிருந்து புறப்பட்டபோது அவனுக்கு எதிர்ப்பட்டவன் யார்?


Q ➤ 390. யோனதாபின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 391. "கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 392. சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீருமளவும் சங்காரஞ்செய்தவன் யார்?


Q ➤ 393. "ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி"- கூறியவன் யார்?


Q ➤ 394. ஒருவனும் குறையாதபடிக்கு எவர்களை தன்னிடத்தில் கூட்ட யெகூ கூறினான்?


Q ➤ 395. யாருக்கு பெரிய பலியிடப் போகிறதாக யெகூ கூறினான்?


Q ➤ 396. பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி தந்திரம் செய்தவன் யார்?


Q ➤ 397. பாகாலின் பணிவிடைக்காரருக்கு வஸ்திரங்களை எடுத்துக் கொண்டுவர யெகூ யாரிடம் கூறினான்?


Q ➤ 398. யாரை வெட்டிப்போட யெகூ எண்பதுபேரை ஆயத்தப்படுத்தினான்?


Q ➤ 399. பாகாலின் பணிவிடைக்காரரை வெட்டிப்போட்டவர்கள் யார்?


Q ➤ 400. எதை இடித்து மலஜலாதி இடமாக்கினார்கள்?


Q ➤ 401. யெகூ யாரை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்?


Q ➤ 402. எவைகளால் இஸ்ரவேலை பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை?


Q ➤ 403. கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நன்றாய்ச் செய்தவன் யார்?


Q ➤ 404. யெகூவின் குமாரர் இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் எத்தனை தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 405. கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்க கவலைப்படாதவன் யார்?


Q ➤ 406. கீலேயாத் முழுவதையும் முறிய அடித்தவன் யார்?


Q ➤ 407. யெகூவின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 408. யெகூ இஸ்ரவேலில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?