Tamil Bible Quiz from 1st Kings: 18

Q ➤ 775. கர்த்தர் எலியாவிடம், அவனை யாருக்குக் காண்பிக்கும்படிக் கூறினார்?


Q ➤ 776. கர்த்தர் தேசத்தின்மேல் எதைக் கட்டளையிடுவேன் என்று கூறினார்?


Q ➤ 777. சமாரியாவில் கொடியதாயிருந்தது எது?


Q ➤ 778. ஆகாபின் அரமனை விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 779. ஒபதியா யாருக்குப் பயந்து நடக்கிறவன்?


Q ➤ 780. கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரித்தவள் யார்?


Q ➤ 781. ஒபதியா எவர்களை ஒளித்து வைத்து, அப்பமும் தண்ணீரும் கொடுத்தான்?


Q ➤ 782. ஒபதியா எத்தனை தீர்க்கதரிசிகளை ஒளித்துவைத்துப் பராமரித்தான்?


Q ➤ 783. ஒபதியா கர்த்தரின் தீர்க்கதரிசிகளை எங்கே ஒளித்துவைத்துப் பராமரித்தான்?


Q ➤ 784. ஆகாப் ஒபதியாவை தேசத்தின் எல்லா ..... .......... அனுப்பினான்? அண்டைக்கும்


Q ➤ 785. தேசத்தில் எது அகப்படுமா என்று பார்ப்பதற்கு ஆகாப் ஒபதியாவை அனுப்பினான்?


Q ➤ 786. ஒபதியா போகும்போது வழியில் அவனுக்கு எதிர்ப்பட்டவன் யார்?


Q ➤ 787. தான் வந்திருப்பதை யாருக்கு அறிவிக்க, எலியா ஒபதியாவிடம் கூறினான்?


Q ➤ 788. "நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்"- நான் யார்?


Q ➤ 789. "இன்றைக்கு என்னை ஆகாபுக்குக் காண்பிப்பேன்" கூறியவன் யார்?


Q ➤ 790. "இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 791. இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவன் யார் என்று எலியா கூறினான்?


Q ➤ 792. யாரைப் பின்பற்றினதினால் ஆகாப் இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணினான்?


Q ➤ 793. இஸ்ரவேல் அனைத்தையும் எங்கே வரும்படி எலியா கூறினான்?


Q ➤ 794. பாகாலின் எத்தனை தீர்க்கதரிசிகளைத் தன்னிடம் கூட்டும்படி எலியா கூறினான்?


Q ➤ 795. யேசபேலின் பந்தியில் சாப்பிடுகிறவர்கள் யார்?


Q ➤ 796. தோப்பு விக்கிரகத்தின் எத்தனை தீர்க்கதரிசிகளைத் தன்னிடம் கூட்டும்படி எலியா கூறினான்?


Q ➤ 797. கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீதியாயிருந்தவர்கள் எத்தனை பேர் என்று எலியா கூறினான்?


Q ➤ 798. எத்தனை காளைகளைக் கொண்டுவரும்படி எலியா கூறினான்?


Q ➤ 799. எவைகளை நெருப்புப்போடாமல் விறகுகளின்மேல் வைக்க எலியா கூறினான்?


Q ➤ 800. எதினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்று எலியா கூறினான்?


Q ➤ 801. பலிபீடத்தை ஆயத்தப்படுத்தி, முதலில் தங்கள் தேவனை நோக்கிக் கூப்பிட எலியா யாரிடம் கூறினான்?


Q ➤ 802. "பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும்" கூப்பிட்டவர்கள் யார்?


Q ➤ 803. தாங்கள் கட்டின பலிபீடத்துக்கு எதிரே குதித்து ஆடினவர்கள் யார்?


Q ➤ 804. மத்தியான வேளையில் பாகாலின் தீர்க்கதரிசிகளைப் பரியாசம் பண்ணியவன் யார்?


Q ➤ 805. இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் தங்களைக் கீறிக் கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 806. பாகாலின் தீர்க்கதரிசிகள் எவைகளால் தங்களைக் கீறிக் கொண்டிருந்தார்கள்?


Q ➤ 807. அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 808. தகர்க்கப்பட்ட கர்த்தரின் பலிபீடத்தைச் செப்பனிட்டவன் யார்?


Q ➤ 809. செப்பனிட்ட பலிபீடத்துக்கு எலியா என்ன பெயரிட்டான்?


Q ➤ 810. எலியா எத்தனை கற்களை எடுத்து பலிபீடம் கட்டினான்?


Q ➤ 813. எலியா பலிபீடத்தைச் சுற்றி எதை உண்டாக்கினான்?


Q ➤ 814. எலியா பலிபீடத்தைச் சுற்றி, எதை விதைக்கத்தக்க இடமான வாய்க்காலை உண்டுபண்ணினான்?


Q ➤ 815. சர்வாங்க தகனபலி மற்றும் விறகுகளின்மேல் எலியா எவ்வளவு தண்ணீர் ஊற்றினான்?


Q ➤ 816. பலிபீடத்தைச் சுற்றியுள்ள வாய்க்காலை எலியா எவைகளால் நிரப்பினான்?


Q ➤ 817. "என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும்"- கூறியவன் யார்?


Q ➤ 818. யாரிடத்திலிருந்து அக்கினி இறங்கி எல்லாவற்றையும் பட்சித்தது?


Q ➤ 819. கர்த்தரிடத்திலிருந்து இறங்கிய அக்கினி எவைகளைப் பட்சித்துப் போட்டது?


Q ➤ 820. வாய்க்காலிலிருந்த தண்ணீரை நக்கிப்போட்டது எது?


Q ➤ 821. கர்மேல் பர்வதத்தில் ஜனங்கள் முகங்குப்புற விழுந்து என்ன சொன்னார்கள்?


Q ➤ 822. எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை எங்கே வெட்டிப்போட்டான்?


Q ➤ 823. எலியா எதனுடைய இரைச்சல் கேட்கப்படுகிறது என்று கூறினான்?


Q ➤ 824.எலியா எதின் சிகரத்தில் ஏறி, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்தான்?


Q ➤ 825. சமுத்திரமுகமாய்ப் பார்க்கும்படி எலியா யாரிடம் கூறினான்?


Q ➤ 826. "நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 827. சமுத்திரத்திலிருந்து எது எழும்புகிறதாக எலியாவின் ஊழியக்காரன் கூறினான்?


Q ➤ 828. எந்த அளவிலுள்ள மேகம் சமுத்திரத்திலிருந்து எழும்பியது?


Q ➤ 829. கர்த்தருடைய கை யார்மேல் இருந்தது?


Q ➤ 830. எலியா தன் அரையைக் கட்டிக்கொண்டு எதற்கு முன்பாக ஓடினான்?