Tamil Bible Quiz from 1st Kings: 15

Q ➤ 646. அபியாம் எருசலேமில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 647. அபியாமின் இருதயம் எதைப் போல உத்தமமாய் இருக்கவில்லை?


Q ➤ 648. தாவீது கர்த்தரின் கட்டளைகளை விட்டு விலகி செய்த ஒரே சங்கதி யாருடையது?


Q ➤ 649. அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் இடையே நடந்தது என்ன?


Q ➤ 650. அபியாமுக்குப்பின்பு யூதாவின் மேல் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 651. ஆசா யூதாவின்மேல் எவ்வளவு நாள் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 652. ஆசாவின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 653. ஆசா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 654. ஆசா யாரை தேசத்திலிருந்து அகற்றினான்?


Q ➤ 655. ஆசா யார் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களை விலக்கினான்?


Q ➤ 656. தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணினவள் யார்?


Q ➤ 657. ஆசா யாரை ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கினான்?


Q ➤ 658. தன் தாயின் விக்கிரகத்தை நிர்மூலமாக்கியவன் யார்?


Q ➤ 659. ஆசா எதை கீதரோன் ஆற்றண்டையில் சுட்டெரித்தான்?


Q ➤ 660. ஆசாவின் நாட்களில் தகர்க்கப்படாதிருந்தது எது?


Q ➤ 661. ஆசாவின் இருதயம் யாரோடே உத்தமமாய் இருந்தது?


Q ➤ 662. பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட எவைகளை ஆசா கர்த்தரின் ஆலயத்தில் கொண்டு வந்தான்?


Q ➤ 663. ஆசாவுக்கு விரோதமாக வந்த இஸ்ரவேலின் ராஜா யார்?


Q ➤ 664. பாஷா யூதாவுக்கு விரோதமாக எதைக் கட்டினான்?


Q ➤ 665. ஒருவரும் ஆசாவிடம் போக்குவரத்தாயிராதபடிக்கு ராமாவைக் கட்டியவன் யார்?


Q ➤ 666. கர்த்தருடைய ஆலயத்தில் மீதியான வெள்ளி, பொன் மற்றும் பொக்கிஷங்களை ஆசா யாருக்குக் கொடுத்தனுப்பினான்?


Q ➤ 667. பெனாதாத்தின் அப்பா யார்?


Q ➤ 668. பெனாதாத் எதன்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 669. பெனாதாத் பாஷாவோடே செய்த உடன்படிக்கையைத் தள்ளிப் போடும்படி அவனுக்குப் பொக்கிஷங்களை அனுப்பியவன் யார்?


Q ➤ 670. ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்தவன் யார்?


Q ➤ 671. பெனாதாத் யாரை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்?


Q ➤ 672. பெனாதாத் சேனாபதிகளை அனுப்பி, நப்தலியின் முழுத்தேசத்தோடுங்கூட எவைகளை முறிய அடித்தான்?


Q ➤ 673. பெத்மாக்காவின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 674. பெனாதாத் பட்டணங்களை முறிய அடிக்கிறதைக் கேட்டபோது, பாஷா எதை விட்டுவிட்டான்?


Q ➤ 675. பாஷா ராமாவைக் கட்டின கற்களையும் மரங்களையும் எடுத்துவர முறையிடுவித்தவன் யார்?


Q ➤ 676. ராமாவைக் கட்டின கற்கள் மற்றும் மரங்களினால் ஆசா எதைக் கட்டினான்?


Q ➤ 677. ஆசா முதிர்வயதான காலத்தில் அவன்.........வியாதி கண்டிருந்தது?


Q ➤ 678. ஆசாவுக்குப் பின்பு யூதாவில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 679. நாதாப் இஸ்ரவேலின்மேல் எத்தனை வருஷம் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 680. நாதாப் யாருடைய குமாரன்?


Q ➤ 681. நாதாபுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணியவன் யார்?


Q ➤ 682. பாஷா எந்த வம்சத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 683. பாஷாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 684. நாதாபைக் கொன்றுபோட்டவன் யார்?


Q ➤ 685. பாஷா நாதாபை எவ்விடத்திலே வெட்டிப்போட்டான்?


Q ➤ 686. நாதாபின் ஸ்தானத்தில், இஸ்ரவேலின்மேல் ராஜாவானவன் யார்?


Q ➤ 687. யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டவன் யார்?


Q ➤ 688. பாஷா இஸ்ரவேலின்மேல் எத்தனை வருஷம் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 689. பாஷா யாருடைய வழிகளிலும் அவனுடைய பாவத்திலும் நடந்தான்?