Tamil Bible Quiz from 1st Kings: 11

Q ➤ 478. அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேல் ஆசைவைத்தவன் யார்?


Q ➤ 479. இஸ்ரவேலர் யாரண்டைக்கும் அவர்கள் இஸ்ரவேலரண்டைக்கும் பிரவேசிக்கலாகாது என்று கர்த்தர் சொல்லியிருந்தார்?


Q ➤ 480. அந்நிய ஜாதியார் யாரைப் பின்பற்றும்படி இஸ்ரவேலரின் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள்?


Q ➤ 481. சாலொமோனுக்கு பிரபுக்கள் குலமான மனையாட்டிகள் எத்தனை பேர் இருந்தார்கள்?


Q ➤ 482. சாலொமோனுக்கு எத்தனை மறுமனையாட்டிகள் இருந்தார்கள்?


Q ➤ 483. சாலொமோனின் ஸ்திரீகள் எதை வழுவிப்போகப் பண்ணினார்கள்?


Q ➤ 484. சாலொமோனின் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 485. சாலொமோனின் இருதயம் யாருடைய இருதயத்தைப் போல உத்தமமாயிருக்கவில்லை?


Q ➤ 486. சீதோனியரின் தேவி யார்?


Q ➤ 487. அம்மோனியரின் அருவருப்பு எது?


Q ➤ 488. சாலொமோன் எவைகளைப் பின்பற்றினான்?


Q ➤ 489. சாலொமோன் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 490. மோவாபியரின் அருவருப்பு எது?


Q ➤ 491. அம்மோன் புத்திரரின் அருவருப்பு எது?


Q ➤ 492. சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையில் எவைகளுக்கு மேடையைக் கட்டினான்?


Q ➤ 493. கர்த்தர் எத்தனைமுறை சாலொமோனுக்குத் தரிசனமாகி அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தார்?


Q ➤ 494. தாம் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் சாலொமோனிடம் கோபமானவர் யார்?


Q ➤ 495. யாருடைய கையிலிருந்து ராஜ்யபாரத்தைப் பிடுங்குவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 496. சாலொமோனின் குமாரனுக்கு எத்தனை கோத்திரத்தைக் கொடுப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 497, கர்த்தர் சாலொமோனுக்கு விரோதமாக எழும்பப்பண்ணின முதல் விரோதி யார்?


Q ➤ 498. ஆதாத் எங்கே இருந்த ராஜகுலமானவன்?


Q ➤ 499. ஏதோமிலுள்ள ஆண்மக்களைச் சங்கரித்தவன் யார்?


Q ➤ 500. தன் தகப்பனுடைய ஊழியக்காரரோடே எகிப்திற்கு ஓடிப்போனவன் யார்?


Q ➤ 501. ஆதாதுக்கு யாருடைய கண்களில் மிகுந்த தயவு கிடைத்தது?


Q ➤ 502. பார்வோனின் மனைவியின் பெயர் என்ன?


Q ➤ 503. பார்வோன் யாரை ஆதாதுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்?


Q ➤ 504. ஆதாதின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 505. "நான் என் சுயதேசம் போக வேண்டும்"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 506. கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டாவது எழும்பப்பண்ணின எதிரி யார்?


Q ➤ 507. ரேசோனின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 508. தன் ஆண்டவனாகிய ஆதாதேசரை விட்டு ஓடிப்போனவன் யார்?


Q ➤ 509. தாவீது சேபாவில் உள்ளவர்களைக் கொன்றுபோடுகையில், ஒரு கூட்டத்திற்குத் தலைவனாகி தமஸ்குவுக்குப் போனவன் யார்?


Q ➤ 510. சாலொமோனின் நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, இஸ்ரவேலைப் பகைத்தவன் யார்?


Q ➤ 511. சாலொமோனுக்கு விரோதமாக மூன்றாவது கையெடுத்தவன் யார்?


Q ➤ 512. யெரொபெயாம் எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 513, யெரொபெயாம் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 514. யெரொபெயாமின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 515. "அவன் காரிய சமர்த்தனான வாலிபன்" - யார்?


Q ➤ 516. யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் சாலொமோன் யாருடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான்?


Q ➤ 517. சீலோனியனான அகியா யார்?


Q ➤ 518. அகியா எப்படிப்பட்ட சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்தான்?


Q ➤ 519. அகியா தன் சால்வையை எத்தனைத் துண்டாகக் கிழித்தான்?


Q ➤ 520. யெரொபெயாமிடம் அகியா சால்வையின் எத்தனைத் துண்டுகளை எடுக்கும்படிக் கூறினான்?


Q ➤ 521. கர்த்தர் யெரொபெயாமுக்கு எத்தனை கோத்திரங்களைக் கொடுப்பார் என்று அகியா கூறினான்?


Q ➤ 522. கர்த்தர் ராஜ்யபாரத்தை யார், கையிலிருந்து எடுத்து, யெரொபெயாமுக்கு 10 கோத்திரங்களைக் கொடுப்பார்?


Q ➤ 523. தாவீதுக்கு எங்கே எந்நாளும் ஒரு விளக்கு இருக்கும்?


Q ➤ 524. 'கர்த்தர் தமது நாமம் விளங்கும்படிக்கு, தெரிந்துகொண்ட நகரம்'- நான் யார்?


Q ➤ 525. யெரொபெயாமைக் கொல்ல வகைதேடியவன் யார்?


Q ➤ 526. யெரொபெயாம் சாலொமோனிடத்திலிருந்து யாரிடத்திற்கு ஓடிப் போனான்?


Q ➤ 527. சீஷாக் யாருடைய ராஜாவாயிருந்தான்?


Q ➤ 528. சாலொமோன் மரணமடையுமட்டும் யெரொபெயாம் எங்கே இருந்தான்?


Q ➤ 529. சாலொமோனின் மற்ற நடபடிகள் அவன் செய்தவை மற்றும் அவனுடைய புஸ்தகத்தில ஞானம் எதில் எழுதியிருக்கிறது?


Q ➤ 530. சாலொமோன் இஸ்ரவேலை எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 531. சாலொமோனை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 532. சாலொமோனுக்குப் பிறகு அவன் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?