Q ➤ 612. தாவீது யார் மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும் நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்தான்?
Q ➤ 613. தாவீது தன்னோடிருந்த ஜனங்களை எத்தனை பங்காகப் பிரித்தான்?
Q ➤ 614. தாவீது முதல் மூன்றில் ஒரு பங்கை யார் வசமாக அனுப்பினான்?
Q ➤ 615. தாவீது இரண்டாம் பகுதியை யார் வசமாக அனுப்பினான்?
Q ➤ 616. தாவீது மூன்றாம் பகுதியை யார் வசமாக அனுப்பினான்?
Q ➤ 617. “நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 618. நூறுநூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டவர்கள் யார்?
Q ➤ 619. யாரை மெதுவாய் நடப்பிக்க தாவீது ராஜா கூறினான்?
Q ➤ 620. பிள்ளையாண்டானை மெதுவாய் நடப்பிக்கும்படி ராஜா எவர்களிடம் கூறினான்?
Q ➤ 621. தாவீதின் ஜனங்களுக்கும் இஸ்ரவேலருக்கும் எங்கே யுத்தம் நடந்தது?
Q ➤ 622. யுத்தத்தில் முறியடிக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 623. யுத்தத்தில் எத்தனை பேர் மடிந்தார்கள்?
Q ➤ 624. பட்டயம் பட்சித்த ஜனங்களைப் பார்க்கிலும் எது பட்சித்த ஜனங்கள் அதிகமாயிருந்தார்கள்?
Q ➤ 625. அப்சலோம் யாருக்கு எதிர்ப்பட்டான்?
Q ➤ 626. கோவேறு கழுதையின்மேல் ஏறி வந்தவன் யார்?
Q ➤ 627. சன்னல்பின்னலான பெரிய கர்வாலிமரத்தின் கீழ் வந்தது எது?
Q ➤ 628. அப்சலோமின்........... கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டது?
Q ➤ 629. தன் தலை மரத்தில் மாட்டினதால் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினவன் யார்?
Q ➤ 630. 'அப்சலோமை கர்வாலி மரத்திலே தொங்கக் கண்டேன்'- யாருக்கு அறிவிக்கப்பட்டது?
Q ➤ 631, அப்சலோமைக் கொன்றிருந்தால் எதைக் கொடுத்திருப்பதாக யோவாப் தனக்கு அறிவித்தவனிடம் கூறினான்?
Q ➤ 632. எதைக் கொடுத்தாலும் அப்சலோமைக் கொல்லமாட்டேன் என்று அப்சலோமைக் கண்டவன் கூறினான்?
Q ➤ 633. அப்சலோமைக் காப்பாற்ற ராஜா கட்டளையிட்டிருந்ததாகக் கூறியவன் யார்?
Q ➤ 634. யோவாப் எவைகளை எடுத்துக் கொண்டு அப்சலோமிடம் போனான்?
Q ➤ 635. யோவாப் வரும்போது அப்சலோம் கர்வாலிமரத்தில் எப்படி தொங்கிக் கொண்டிருந்தான்?
Q ➤ 636. வல்லயங்களை அப்சலோமின் நெஞ்சிலே குத்தினவன் யார்?
Q ➤ 637. அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக்கொன்றவர்கள் யார்?
Q ➤ 638. யோவாபின் அயுததாரிகள் எத்தனைபேர் அப்சலோமை அடித்துக் கொன்றார்கள்?
Q ➤ 639. எக்காளம் ஊதி தாவீதோடிருந்த ஜனங்களை நிறுத்தியவன் யார்?
Q ➤ 640. அப்சலோமின் உடலை எங்கேப் போட்டார்கள்?
Q ➤ 641.அப்சலோமின் உடல்மேல் எதைக் குவித்தார்கள்?
Q ➤ 642. என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று கூறியவன் யார்?
Q ➤ 643. தனக்கென்று ஒரு தூணை நிறுத்தியவன் யார்?
Q ➤ 644. அப்சலோம் எங்கே ஒரு தூணை நிறுத்தினான்?
Q ➤ 645. அப்சலோம் நிறுத்தின தூணுக்கு என்ன பேரைத் தரித்திருந்தான்?
Q ➤ 646. அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படுவது எது?
Q ➤ 647. ராஜாவுக்குச் செய்தியை அறிவிக்க ஓடட்டுமா என்று யோவாபிடம் கேட்டவன் யார்?
Q ➤ 648. அகிமாஸ் யாருடைய குமாரன்?
Q ➤ 649. ராஜாவுக்கு செய்தியை அறிவிக்க யோவாப் யாரை அனுப்பினான்?
Q ➤ 650. சமனான பூமிவழியாய் ஓடி கூஷிக்கு முந்திக்கொண்டவன் யார்?
Q ➤ 651. தாவீது எங்கே உட்கார்ந்திருந்தான்?
Q ➤ 652. ஒரு மனுஷன் ஓடிவருகிறதை ராஜாவுக்கு அறிவித்தவன் யார்?
Q ➤ 653. "அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான்"-யார். யாரைக் குறித்து கூறியது?
Q ➤ 654. அப்சலோம் மரித்துப்போன செய்தியை தாவீதுக்கு அறிவித்தவன் யார்?
Q ➤ 655. அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்"- கூறியவன் யார்?