Tamil Bible Quiz 1st Samuel: 8

Q ➤ 242. சாமுவேல் முதிர்வயதானபோது யாரை இஸ்ரவேலில் நியாயாதிபதிகளாக வைத்தான்?


Q ➤ 243. சாமுவேலின் மூத்த குமாரன் பெயர் என்ன?


Q ➤ 244. சாமுவேலின் இளைய மகன் பெயர் என்ன?


Q ➤ 245. சாமுவேலின் குமாரர் எங்கே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்?


Q ➤ 246. சாமுவேலின் குமாரர் பொருளாசைக்குச் சாய்ந்து எதை வாங்கினார்கள்?


Q ➤ 247. நியாயத்தைப் புரட்டினவர்கள் யார்?


Q ➤ 248. சாமுவேலின் வழிகளில் நடக்காதவர்கள் யார்?


Q ➤ 249. இஸ்ரவேலின் மூப்பர் தங்களுக்கு யாரை ஏற்படுத்தும்படி சாமுவேலிடம் கூறினார்கள்?


Q ➤ 250. இஸ்ரவேலின் மூப்பர் எதற்காக ராஜாவை ஏற்படுத்தும்படி சாமுவேலிடம் கூறினார்கள்?


Q ➤ 251. மூப்பர்கள் ராஜாவை ஏற்படுத்தும்படி கூறிய வார்த்தை சாமுவேலுக்கு எப்படி காணப்பட்டது?


Q ➤ 252. "அவர்கள் உன்னைத் தள்ளவில்லை"- கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 253. கர்த்தர் தங்களை ஆளாதபடிக்கு அவரைத் தள்ளியவர்கள் யார்?


Q ➤ 254. எதை ஜனங்களுக்குத் திடசாட்சியாய்த் தெரிவிக்க கர்த்தர் சாமுவேலிடம் கூறினார்?


Q ➤ 255. ராஜா இஸ்ரவேலின் குமாரரை எதற்கு முன் ஓடும்படி வைத்துக் கொள்ளுவான் என்று சாமுவேல் கூறினான்?


Q ➤ 256. ராஜா தன்னுடைய ரதசாரதிகளாகவும் தன் குதிரை வீரராகவும் யாரை வைத்துக்கொள்ளுவான்?


Q ➤ 257. இஸ்ரவேலின் ராஜா யாரை ஆயிரம்பேருக்குத் தலைவராகவும் நூறு பேருக்குத் தலைவராகவும் வைத்துக்கொள்ளுவான்?


Q ➤ 258. ராஜா யாரை தைலம்பண்ணுகிறவர்களாகவும் சமையல் பண்ணுகிறவர்களாகவும் வைத்துக் கொள்ளுவான்?


Q ➤ 259. வயல்கள், திராட்சத்தோட்டங்கள் மற்றும் ஒலிவத் தோப்புகளிலிருந்து நல்லவைகளை எடுத்து யார், யாருக்குக் கொடுப்பான்?


Q ➤ 260. ராஜா இஸ்ரவேலரின் தானியத்திலிருந்து தசமபாகத்தை வாங்கி யாருக்குக் கொடுப்பான்?


Q ➤ 261. இஸ்ரவேலரின் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்பவன் யார்?


Q ➤ 262. ராஜா பத்தில் ஒருபங்கு ஆடுகளை .....எடுத்துக்கொள்ளுவான்?


Q ➤ 263. இஸ்ரவேலர் யாருக்கு வேலையாட்களாவார்கள் என்று சாமுவேல்கூறினான்?


Q ➤ 264. சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 265. "எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்" கூறியவர்கள் யார்?


Q ➤ 266. கர்த்தர் சாமுவேலிடம் இஸ்ரவேலை ஆள யாரை ஏற்படுத்தும்படி கூறினார்?