Q ➤ 215. பெத்ஷிமேசிலிருந்து கர்த்தருடைய பெட்டியை எடுத்துக்கொண்டு போனவர்கள் யார்?
Q ➤ 216. கர்த்தருடைய பெட்டியை யாருடைய வீட்டில் வைத்தார்கள்?
Q ➤ 217. கர்த்தருடைய பெட்டியைக் காப்பதற்காக யாரை பரிசுத்தப்படுத்தினார்கள்?
Q ➤ 218. எலெயாசாரின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 219. கர்த்தருடைய பெட்டி கீரியாத்யாரீமிலே எவ்வளவு நாள் இருந்தது?
Q ➤ 220. கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தவர்கள் யார்?
Q ➤ 221. முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்பும்படி இஸ்ரவேலரிடம் கூறியவன் யார்?
Q ➤ 222. எவைகளை இஸ்ரவேலரின் நடுவிலிருந்து நீக்க சாமுவேல் கூறினான்?
Q ➤ 223. இஸ்ரவேலரிடம் இருதயத்தை யாருக்கு நேராக்கும்படி சாமுவேல் கூறினான்?
Q ➤ 224. இஸ்ரவேல் புத்திரர் எவைகளை விலக்கிவிட்டு கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்?
Q ➤ 225. சாமுவேல் இஸ்ரவேல் புத்திரருக்காக மன்றாடும்படி அவர்களை எங்கே கூடிவரச் செய்தான்?
Q ➤ 226. இஸ்ரவேல் ஜனங்கள் மிஸ்பாவிலே எதை மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றினார்கள்?
Q ➤ 227. மிஸ்பாவில் இஸ்ரவேலரை நியாயம் விசாரித்தவன் யார்?
Q ➤ 228. மிஸ்பாவில் கூடின இஸ்ரவேலருக்கு எதிர்த்து வந்தவர்கள் யார்?
Q ➤ 229. சாமுவேல் மிஸ்பாவில் எதை சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினான்?
Q ➤ 230. சாமுவேல் பலியிட்ட ஆட்டுக்குட்டி எப்படிப்பட்டது?
Q ➤ 231. கர்த்தர் யாருக்கு மறுமொழி அருளினார்?
Q ➤ 232. கர்த்தர் பெலிஸ்தர்மேல் எவைகளை முழங்கும்படிச் செய்தார்?
Q ➤ 233. கர்த்தர் யாரை கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக விழுந்தார்கள்?
Q ➤ 234. இஸ்ரவேலர் எதுமட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தார்கள்?
Q ➤ 235. மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவே சாமுவேல் எதை நிறுத்தினான்?
Q ➤ 236. சாமுவேல் மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவே நிறுத்தின கல்லுக்கு என்ன பெயரிட்டான்?
Q ➤ 237. சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை யாருக்கு விரோதமாய் இருந்தது?
Q ➤ 238. சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் யாரை நியாயம் விசாரித்தான்?
Q ➤ 239. சாமுவேலின் வீடு எங்கே இருந்தது?
Q ➤ 240. சாமுவேல் எங்கே கர்த்தருக்கு பலிபீடம் கட்டினான்?
Q ➤ 241. எபெனேசர் என்று பொருள் கூறும் வார்த்தை எது?