Tamil Bible Quiz 1st Samuel: 20

Q ➤ 643. மரணத்துக்கும் தனக்கும் எவ்வளவு தூரம் இருப்பதாக தாவீது கூறினான்?


Q ➤ 644. எதின்படி தாவீதுக்குச் செய்வேன் என்று யோனத்தான் கூறினான்?


Q ➤ 645. எத்தனை நாள் ஒளித்திருப்பதற்கு தாவீது யோனத்தானிடம் உத்தரவு கேட்டான்?


Q ➤ 646. தான் எங்கேப் போனதாக சவுலுக்குச் சொல்லும்படி தாவீது யோனத்தானிடம் கூறினான்?


Q ➤ 647. சவுலுக்கு எரிச்சலுண்டானால், அவராலே எது தீர்மானப்பட்டிருக்கிறது என்று தாவீது கூறினான்?


Q ➤ 648. கர்த்தருக்கு முன்பாக தாவீதோடே உடன்படிக்கை பண்ணியவன் யார்?


Q ➤ 649. "என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 650. கர்த்தர் தன் தகப்பனோடு இருந்ததுபோல் யாரோடும் இருப்பார் என்று யோனத்தான் கூறினான்?


Q ➤ 651. யோனத்தான் யாருடைய குடும்பத்தோடு உடன்படிக்கை பண்ணினான்?


Q ➤ 652. கர்த்தர் யார் கையில் கணக்குக் கேட்பாராக என்று யோனத்தான் கூறினான்?


Q ➤ 653. யோனத்தான் எதைச் சிநேகித்ததுபோல தாவீதைச் சிநேகித்தான்?


Q ➤ 654. மூன்றாம்நாள் எங்கே உட்கார்ந்திருக்கும்படி யோனத்தான் தாவீதிடம் கூறினான்?


Q ➤ 655. எத்தனை அம்புகளை எய்வேன் என்று யோனத்தான் கூறினான்?


Q ➤ 656. அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது என்று யோனத்தான் கூறுவதன் அர்த்தம் என்ன?


Q ➤ 657. கர்த்தர் தாவீதைப் போகச்சொல்லுகிறார் என்பதற்கு யோனத்தான் கூறும் வார்த்தை என்ன?


Q ➤ 658. தாவீதும் யோனத்தானும் பேசிக்கொண்டதற்கு நடுநிற்கும் சாட்சி யார்?


Q ➤ 659........ஆனபோது ராஜா போஜனம் பண்ண உட்கார்ந்தார்?


Q ➤ 660. சவுல் பந்தியிருக்கும்போது யாருடைய இடம் காலியாயிருந்தது?


Q ➤ 661. முதல்நாள் பந்தியில் சவுல் ஏன் தாவீதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை?


Q ➤ 662. தாவீதைக் குறித்து கூறியவுடன் யோனத்தான்மேல் கோபமூண்டவன் யார்?


Q ➤ 663. "இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே"- யார், யாரைப் பார்த்து கூறியது?


Q ➤ 664. யார், யாருக்கு வெட்கமாக யோனத்தான் ஈசாயின் மகனை தோழனாக்கினான் என்று சவுல் கூறினான்?


Q ➤ 665. சவுல் பந்தியின்போது யோனத்தான்மேல் எதை எறிந்தான்?


Q ➤ 666. தன் தகப்பன் தாவீதைக் குறித்து சொன்னது யோனத்தானுக்கு எப்படியிருந்தது?


Q ➤ 667. யோனத்தான் அம்புகளை எடுக்கச் சென்ற சிறுவனிடம் அம்பு எப்புறத்தில் இருப்பதாகக் கூறினான்?


Q ➤ 668. தாவீது எத்தனைமுறை தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கினான்?


Q ➤ 669. "நீர் சமாதானத்தோடே போம்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 670. கர்த்தர் எவர்களுக்கு நடுநிற்கும் சாட்சி என்று யோனத்தான் கூறினான்?