Tamil Bible Quiz 1st Samuel: 19

Q ➤ 618.தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு தன் ஊழியக்காரரோடும் தன் குமாரனோடும் பேசினவன் யார்?


Q ➤ 619. சவுல் பேசியதை தாவீதுக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 620. மறைவான இடத்தில் ஒளித்திருக்க தாவீதிடம் கூறியவன் யார்?


Q ➤ 621. சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசியவன் யார்?


Q ➤ 622. ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்........செய்யாதிருப்பாராக என்று யோனத்தான் கூறினான்?


Q ➤ 623. தாவீது தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு பெலிஸ்தனைக் கொன்றதாகக் கூறியவன் யார்?


Q ➤ 624.தாவீது பெலிஸ்தனைக் கொன்றதினால் கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதைக் கட்டளையிட்டிருந்தார்?


Q ➤ 625. தாவீது கொலை செய்யப்படுவதில்லையென்று சவுல் எதைக்கொண்டு ஆணையிட்டான்?


Q ➤ 626. பெலிஸ்தருடன் உண்டான யுத்தத்தில் அவர்களை முறிந்தோடப் பண்ணியவன் யார்?


Q ➤ 627. தாவீதைக் காவல்பண்ணி, கொன்றுபோட சவுல் யாரை அனுப்பினான்?


Q ➤ 628. மீகாள் தாவீதை எதின் வழியாய் அனுப்பிவிட்டாள்?


Q ➤ 629. மீகாள் எதை எடுத்து கட்டிலின்மேல் வைத்தாள்?


Q ➤ 630. மீகாள் சுரூபத்தின் தலைமாட்டிலே எதைப் போட்டாள்?


Q ➤ 631. மீகாள் சுரூபத்தை எதினால் மூடினாள்?


Q ➤ 632. தாவீதைக் கொண்டுபோக வந்த சேவகரிடம் மீகாள் என்ன சொன்னாள்?


Q ➤ 633. தாவீதை கட்டிலோடே தன்னிடத்தில் கொண்டுவரும்படி சேவகரை அனுப்பினவன் யார்?


Q ➤ 634. சவுலின் சேவகர் இரண்டாம்விசை தாவீதின் வீட்டுக்கு வந்தபோது கட்டிலின்மேல் எவைகள் இருக்கிறதைக் கண்டார்கள்?


Q ➤ 635. தாவீது தப்பியோடி யாரிடத்தில் போனான்?


Q ➤ 636. தாவீதும் சாமுவேலும் எங்கே தங்கி இருந்தார்கள்?


Q ➤ 637. தாவீதைக்கொண்டுவரப்போன சவுலின் சேவகர்மேல் இறங்கினது எது?


Q ➤ 638. தேவனுடைய ஆவி இறங்கின சவுலின் சேவகர் செய்தது என்ன?


Q ➤ 639. சவுல் தாவீதைக் கொண்டுவர எத்தனைமுறை நாயோதிக்கு சேவகரை அனுப்பினான்?


Q ➤ 640. நாயோதிலே சேருமட்டும் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்தவன் யார்?


Q ➤ 641. தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் சொன்னவன் யார்?


Q ➤ 642. சவுல் எவ்வளவு நேரம் வஸ்திரம் இல்லாமல் விழுந்து கிடந்தான்?