Q ➤ 528. சோக்கோ எத்தேசத்தில் இருந்தது?
Q ➤ 529. இஸ்ரவேலரோடு யுத்தம்பண்ண சோக்கோவில் ஒன்றுகூடியவர்கள் யார்?
Q ➤ 530. சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருந்தது எது?
Q ➤ 531. பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எங்கே பாளயமிறங்கினார்கள்?
Q ➤ 532. சவுலும் இஸ்ரவேலரும் எங்கே பாளயமிறங்கி பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்துக்கு அணிவகுத்து நின்றார்கள்?
Q ➤ 533. பெலிஸ்தருக்கும் இஸ்ரவேலருக்கும் நடுவே இருந்தது எது?
Q ➤ 534. கோலியாத் எந்த ஊரைச் சேர்ந்தவன்?
Q ➤ 535. கோலியாத் என்பவன் யார்?
Q ➤ 536. கோலியாத்தின் உயரம் எவ்வளவு?
Q ➤ 537. கோலியாத் தன் தலையின்மேல் எதைப் போட்டிருப்பான்?
Q ➤ 538. கோலியாத் எதை தரித்துக் கொண்டிருப்பான்?
Q ➤ 539. கோலியாத் தரித்திருந்த வெண்கல போர்க்கவசத்தின் நிறை என்ன?
Q ➤ 540. கோலியாத் தன் கால்களில் எதை அணிந்திருந்தான்?
Q ➤ 541. கோலியாத் தன் தோள்களில் எதை அணிந்திருப்பான்?
Q ➤ 542. நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியாய் இருந்தது எது?
Q ➤ 543. கோலியாத்தின் ஈட்டியின் அலகு எதனாலானது?
Q ➤ 544. கோலியாத்தின் ஈட்டியின் அலகிலுள்ள இரும்பின் எடை எவ்வளவு?
Q ➤ 545. பரிசைப் பிடிக்கிறவன் யாருக்கு முன்னாக நடந்தான்?
Q ➤ 547. பெலிஸ்தனின் வார்த்தையைக் கேட்டு, கலங்கி மிகவும் பயந்தவர்கள் யார்?
Q ➤ 546. தன்னோடு யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தவன் யார்?
Q ➤ 548. தாவீதின் அப்பா யார்?
Q ➤ 549. ஈசாய்க்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?
Q ➤ 550. சவுலின் நாட்களில் வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டவன் யார்?
Q ➤ 551. ஈசாயின் குமாரரில் எத்தனைபேர் யுத்தத்துக்குப் போனார்கள்?
Q ➤ 552. ஈசாயின் குமாரரில் சவுலோடே யுத்தத்திற்குப் போனவர்கள் யார், யார்?
Q ➤ 553. தாவீதின் வேலை என்ன?
Q ➤ 554. கோலியாத் காலையிலும் மாலையிலும் எத்தனை நாள் வந்து நிற்பான்?
Q ➤ 555. தன் குமாரருக்கு அப்பங்களும் பயிறும் கொடுத்து அனுப்பியவன் யார்?
Q ➤ 556. ஈசாய் தன் குமாரருக்கு அப்பமும் பயிறும் யாரிடம் கொடுத்து அனுப்பினான்?
Q ➤ 557. ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுக்கும்படி ஈசாய் என்னக் கொடுத்து அனுப்பினான்?
Q ➤ 558. ஈசாய் தன் குமாரர் சுகமாயிருக்கிறார்களென்று.....வாங்கிவர தாவீதிடம் கூறினான்?
Q ➤ 559. யாரைக் கொல்லுகிறவனை ராஜா ஐசுவரியவானாக்குவார் என்று ஜனங்கள் கூறினார்கள்?
Q ➤ 560. சவுல் யாருக்கு தன் குமாரத்தியைக் கொடுப்பதாகச் சொன்னான்?
Q ➤ 561. பெலிஸ்த வீரனைக் கொல்லுகிறவனுடைய தகப்பன் வீட்டாருக்கு ராஜா இஸ்ரவேலில் ......கொடுப்பார்?
Q ➤ 562. "விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன்"- தாவீது யாரைக் கூறினான்?
Q ➤ 563. உன் துணிகரத்தையும் உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்று தாவீதிடம் கூறியவன் யார்?
Q ➤ 564. "நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா?"- கூறியவன் யார்?
Q ➤ 565. யார் நிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்கவேண்டியதில்லை என்று தாவீது கூறினான்?
Q ➤ 566. நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்று கூறியவன் யார்?
Q ➤ 567. தன் சிறுவயது முதல் யுத்த வீரனாய் இருந்தவன் யார்?
Q ➤ 568. சிங்கமும் கரடியும் ஆடுகளைப் பிடித்தபோது தாவீது என்ன செய்தான்?
Q ➤ 569 . சிங்கமும் கரடியும் தன்மேல் பாய்ந்தபோது தாவீது என்ன செய்தான்?
Q ➤ 570. யார், தன்னை பெலிஸ்தனின் கைக்குத் தப்புவிப்பார் என்று தாவீது கூறினான்?
Q ➤ 571. தாவீதுக்கு தன் வஸ்திரங்களையும் சீராவையும் கவசத்தையும் உடுத்துவித்தவன் யார்?
Q ➤ 572. தாவீது ஆற்றிலிருந்து எத்தனை கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்தான்?
Q ➤ 573. தாவீது எதை தன் கையிலேப் பிடித்துக்கொண்டு பெலிஸ்தனண்டையில் போனான்?
Q ➤ 574. தாவீதை அசட்டைபண்ணியவன் யார்?
Q ➤ 575. கோலியாத் எதினால் தாவீதை அசட்டைபண்ணினான்?
Q ➤ 576. "நான் நாயா"- கேட்டவன் யார்?
Q ➤ 577. கோலியாத் தன் தேவர்களைக்கொண்டு யாரைச் சபித்தான்?
Q ➤ 578. கோலியாத் யாருடைய மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்று கூறினான்?
Q ➤ 579. தாவீது யாருடைய நாமத்தில் பெலிஸ்தனிடம் சென்றான்?
Q ➤ 580. இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்பதை யார், அறிந்து கொள்ளுவார்கள் என்று தாவீது கூறினான்?
Q ➤ 581. கர்த்தர் எவைகளினால் ரட்சிக்கிறவர் அல்ல?
Q ➤ 582. தாவீது ஒரு கல்லை எடுத்து யாருடைய நெற்றியில் பட எறிந்தான்?
Q ➤ 583. பெலிஸ்தன் ஏன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்?
Q ➤ 584. தாவீது பெலிஸ்தனை எதினால் மடங்கடித்து, அவனைக் கொன்று போட்டான்?
Q ➤ 585. தாவீதின் கையில் எது இல்லாதிருந்தது?
Q ➤ 586. தாவீது எதினால் பெலிஸ்தனைக் கொன்று, அவன் தலையை வெட்டினான்?
Q ➤ 587. தாவீது பெலிஸ்தனின் தலையை எங்கேக் கொண்டு வந்தான்?
Q ➤ 588. தாவீது பெலிஸ்தனின் ஆயுதங்களை எங்கே வைத்தான்?
Q ➤ 589. "நான் இளைஞனாயிருந்தும் கர்த்தருடைய நாமத்திலே பெலிஸ்திய வீரனைக் கொன்றுபோட்டேன்?"- நான் யார்?