Q ➤ 369. யார், உங்களுக்கு முன்பாக சஞ்சரித்து வருகிறார் என்று சாமுவேல் இஸ்ரவேலரிடம் கூறினான்?
Q ➤ 370. "நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்"- கூறியவன் யார்?
Q ➤ 371. கர்த்தரின் சந்நிதியில் தன்னைக்குறித்து சாட்சி சொல்லும்படி இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறியவன் யார்?
Q ➤ 372. "நீர் எங்களுக்கு அநியாயஞ்செய்யவும் இல்லை; இடுக்கண் செய்யவும் இல்லை"-யார், யாரிடம் கூறியது?
Q ➤ 373. இஸ்ரவேலர் சாமுவேலிடம் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லையென்பதற்கு யார், யார் சாட்சிகள் என்று சாமுவேல் கூறினான்?
Q ➤ 374. மோசேயையும் ஆரோனையும் ஏற்படுத்தினவர் யார்?
Q ➤ 375. இஸ்ரவேலின் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவர் யார்?
Q ➤ 376. எவைகளைக் குறித்து கர்த்தருடைய சந்நிதியில் நியாயம் பேச வேண்டுமென்று சாமுவேல் கூறினான்?
Q ➤ 377. இஸ்ரவேலின் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது கர்த்தர் எவர்களை அனுப்பினார்?
Q ➤ 378. இஸ்ரவேலின் பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, இங்கே குடியிருக்கப்பண்ணியவர்கள் யார்?
Q ➤ 379. ஆத்சோரின் சேனாபதி யார்?
Q ➤ 381. கர்த்தர் எவர்களை அனுப்பி, இஸ்ரவேலரை அவர்களின் சத்துருக்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சித்தார்?
Q ➤ 382. இஸ்ரவேலுக்கு ராஜாவாயிருந்தவர் யார்?
Q ➤ 383. கர்த்தருடைய கை யாருக்கு விரோதமாயிருக்கும்?
Q ➤ 384. சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணியபோது கர்த்தர் என்ன கட்டளையிட்டார்?
Q ➤ 385.எது பெரியதென்று இஸ்ரவேலர் உணரும்படிக்கு கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்?
Q ➤ 386.இஸ்ரவேலர் யார், யாருக்கு மிகவும் பயந்தார்கள்?
Q ➤ 387. எப்படிப்பட்டவைகளான வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள் என்று சாமுவேல் ஜனங்களிடம் கூறினான்?
Q ➤ 388. கர்த்தர் தமது மகத்துவமான நாமத்தினிமித்தம் யாரைக் கைவிடமாட்டார்?
Q ➤ 389. "நானும் ஜனங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்"- கூறியவன் யார்?
Q ➤ 390. நன்மையும் செவ்வையுமான வழியை உங்களுக்குப் போதிப்பேன் என்று இஸ்ரவேலரிடம் கூறினவன் யார்?
Q ➤ 391.........செய்தால் நாசமடைவீர்கள் என்று சாமுவேல் ஜனங்களிடம் கூறினான்?