Tamil Bible Quiz Revelation Chapter 2

Q ➤ 56. யோவான் யாருக்கு முதலில் கடிதம் எழுதினார்?


Q ➤ 57. பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் யார்?


Q ➤ 58. பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிற சபை எது?


Q ➤ 59. அப்போஸ்தலரென்று சொல்லுகிற யாரை எபேசு சபை சோதித்து கண்டறிந்தது?


Q ➤ 60. மனுஷகுமாரனின் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்ட சபை எது?


Q ➤ 61. ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட சபை எது?


Q ➤ 62. எபேசு சபையின் பேரில் மனுஷகுமாரனுக்கு........உண்டு?


Q ➤ 63. ஆதியில் செய்த எவைகளை செய்யும்படி எபேசு சபையிடம் கூறப்பட்டது?


Q ➤ 64. எபேசு சபை மனந்திரும்பாதபட்சத்தில், அதனிடத்தினின்று மனுஷகுமாரன் எதை நீக்கிவிடுவார்?


Q ➤ 65. எபேசு சபை எந்த மதஸ்தாரின் கிரியைகளை வெறுத்தது?


Q ➤ 66. யார் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்?


Q ➤ 67. ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிப்பவன் யார்?


Q ➤ 68. தேவனுடைய பரதீசின் மத்தியிலிருப்பது எது?


Q ➤ 69. முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் எந்த சபைக்கு எழுதினார்?


Q ➤ 70. ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் தரித்திரத்தையுடைய சபை எது?


Q ➤ 71. தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமலிருக்கிறவர்கள் யாருடைய கூட்டமாயிருந்தார்கள்?


Q ➤ 72. "படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே" - யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 73. சோதிக்கப்படும்பொருட்டாக சிலரைக் காவலில் போடுபவன் யார்?


Q ➤ 74. சிமிர்னா சபையில் காவலில் போடப்படுகிறவர்கள் எத்தனைநாள் உபத்திரவப்படுவார்கள்?


Q ➤ 75. எதுமட்டும் உண்மையாயிருக்க சிமிர்னா சபைக்குக் கூறப்பட்டது?


Q ➤ 76. மரணபரியந்தம் உண்மையாயிருப்பதால் கிடைப்பது என்ன?


Q ➤ 77. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை கேட்கக்கடவன்?


Q ➤ 78. இரண்டாம் மரணத்தில் சேதப்படாதவன் யார்?


Q ➤ 79. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் எந்த சபைக்குச் சொன்னார்?


Q ➤ 80. சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் குடியிருந்த சபை எது?


Q ➤ 81. சாத்தான் குடிகொண்டிருந்த இடத்தில் உண்மையுள்ள சாட்சியாயிருந்தவன் யார்?


Q ➤ 82. அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களிலும் பெர்கமு சபை எதை மறுதலியாமலிருந்தது?


Q ➤ 83. யாருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் பெர்கமு சபையில் உள்ளனர்?


Q ➤ 84. இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக இடறலைப் போடும்படி பிலேயாம் யாருக்குப் போதனை செய்தான்?


Q ➤ 85. பெர்கமு சபையில் எந்த மதஸ்தரின் போதகத்தைகைக்கொள்ளுகிறவர்கள் இருந்தார்கள்?


Q ➤ 86. பெர்கமு சபை மனந்திரும்பாவிட்டால் எதினால் யுத்தம்பண்ணுவேன் என்று இயேசு கிறிஸ்து கூறினார்?


Q ➤ 87. ஜெயங்கொள்ளுகிறவனுக்கு எது புசிக்கக்கொடுக்கப்படும்?


Q ➤ 88. வெண்மையான குறிக்கல் யாருக்குக் கொடுக்கப்படும்?


Q ➤ 89. வெண்மையான குறிக்கல்லில் எழுதப்பட்டிருப்பது என்ன?


Q ➤ 90. எதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாதது எது?


Q ➤ 91. அக்கினி ஜூவாலை போன்ற கண்களை உடையவர் யார்?


Q ➤ 92. பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களையுடையவர் யார்?


Q ➤ 93. அக்கினிஜுவாலை போன்ற கண்களும் பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுடையவர் எந்த சபைக்குச் சொன்னார்?


Q ➤ 94. எந்த சபையின் கிரியைகள் முன்பைக்காட்டிலும் அதிகமாயிருந்தது?


Q ➤ 95. தன்னை தீர்க்கதரிசியென்று சொல்லுகிற ஸ்திரீயானவள் யார்?


Q ➤ 96. ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் போதித்தவள் யார்?


Q ➤ 97. யேசபேல் ஊழியக்காரருக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி அவளுக்கு இடங்கொடுத்த சபை எது?


Q ➤ 98. மனந்திரும்பும்படி தவணைபெற்றும், தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப விருப்பமில்லாதவள் யார்?


Q ➤ 99. யாரை கட்டில்கிடையாக்குவேன் என்று தேவகுமாரன் கூறினார்?


Q ➤ 100. யார் தங்கள் கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களை தேவகுமாரன் மிகுந்த உபத்திரவத்தில் தள்ளுவார்?


Q ➤ 101. உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவர் யார்?


Q ➤ 102. ஒவ்வொருவனுக்கும் அவனவன்....ன்படி பலனளிக்கப்படும்?


Q ➤ 103. யேசபேலின் போதனைகள் எப்படி அழைக்கப்பட்டது?


Q ➤ 104. யார் வருமளவும் தங்களுக்குள்ளதைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 105. ஜாதிகளின் மேல் யாருக்கு அதிகாரம் கொடுக்கப்படும்?


Q ➤ 106. இருப்புக்கோலால் ஜாதிகளை ஆளுபவன் யார்?


Q ➤ 107. விடிவெள்ளி நட்சத்திரம் யாருக்கு கொடுக்கப்படும்?