Q ➤ 359. இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்க, சங்கீதம் 19ஐ பாடியவர் யார்?
Q ➤ 360. வானங்கள் யாருடைய மகிமையை வெளிப்படுத்துகிறது?
Q ➤ 361. தேவனுடைய கரங்களின் கிரியையை அறிவிப்பது எது?
Q ➤ 362. பகலுக்குப் பகல் எவைகளைப் பொழிகிறது?
Q ➤ 363. இரவுக்கு இரவு எதைத் தெரிவிக்கிறது?
Q ➤ 364. எவைகளின் சத்தம் பூமியெங்கும் செல்லுகிறது?
Q ➤ 365. எவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது?
Q ➤ 366. கர்த்தர் வானங்களிலும் ஆகாயவிரிவிலும் எதற்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்?
Q ➤ 367. தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல இருக்கிறது எது?
Q ➤ 368. சூரியன் யாரைப்போல தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது?
Q ➤ 369. வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, மறுமுனைவரைக்கும் சுற்றியோடுவது எது?
Q ➤ 370. எதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை?
Q ➤ 371. குறைவற்றதாய் இருப்பது எது?
Q ➤ 372. கர்த்தருடைய வேதம் எதை உயிர்ப்பிக்கிறது?
Q ➤ 373. கர்த்தருடைய சாட்சி எப்படியிருக்கிறது?
Q ➤ 374. பேதையை ஞானியாக்குவது எது?
Q ➤ 375. இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதாயிருப்பது எது?
Q ➤ 376. தூய்மையும் கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருப்பது எது?
Q ➤ 377. சுத்தமும் என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருப்பது எது?
Q ➤ 378. செம்மையும், உண்மையும், அனைத்தும் நீதியுமாய் இருப்பது எது?
Q ➤ 379. பொன்னிலும் மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கது எது?
Q ➤ 380. தேன்கூட்டிலிருந்து ஒழுகுவது எது?
Q ➤ 381. தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளது எது?
Q ➤ 382. தான் எவைகளால் எச்சரிக்கப்படுகிறேன் என்று தாவீது கூறினார்?
Q ➤ 383. எவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு?
Q ➤ 384. எவைகளுக்குத் தன்னை நீங்கலாக்கும் என்று தாவீது வேண்டினார்?
Q ➤ 385. எவைகளுக்குத் தன்னை விலக்கிக்காரும் என்று தாவீது வேண்டினார்?
Q ➤ 386. துணிகரமான பாவங்கள் தன்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும் என்று வேண்டியவர் யார்?
Q ➤ 387. எவைகள் கர்த்தருடைய சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக என்று தாவீது வேண்டினார்?