Tamil Bible Quiz from Job Chapter 34

Q ➤ 809. போஜனத்தை ருசிபார்க்கிறது எது?


Q ➤ 810. வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறது எது?


Q ➤ 811. எது இன்னதென்று அறிந்துகொள்வோமாக என்று எலிகூ கூறினான்?


Q ➤ 812. தேவன் எதைத் தள்ளிவிட்டார் என்று யோபு கூறினார்?


Q ➤ 813. நியாயம் தன்னிடத்தில் இருந்தும், தான் எப்படி எண்ணப்படுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 814. எது தன்னிடத்தில் இல்லாதிருந்தும் அம்பினால் உண்டான காயம் ஆறாதது என்று யோபு கூறினார்?


Q ➤ 815. யோபு எதைத் தண்ணீரைப்போல குடித்ததாக எலிகூ கூறினான்?


Q ➤ 816. அக்கிரமம் யாருக்குத் தூரமாயிருக்கிறது என்று எலிகூ கூறினான்?


Q ➤ 817. அநீதி யாருக்குத் தூரமாயிருக்கிறது என்று எலிகூ கூறினான்?


Q ➤ 818. தேவன் மனுஷனுக்கு எதற்குத்தக்கதைச் சரிக்கட்டுகிறார்?


Q ➤ 819. தேவன் ........மனுஷனுக்கு எதற்குத்தக்கதாகப்.........பலனளிக்கிறார்?


Q ➤ 820.தேவன் செய்யாமலும், சர்வவல்லவர் புரட்டாமலும்


Q ➤ 821.அநியாயம், நீதியை ஏகமாய் ஜீவித்துப்போவது எது?


Q ➤ 822. தூளுக்குத் திரும்புகிறவன் யார்?


Q ➤ 823..........பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ?


Q ➤ 824. ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள் என்று கூறியவன் யார்?


Q ➤ 825.காணாத கையினால் யார், அழிந்துபோவார்கள் என்று எலிகூ கூறினான்?


Q ➤ 826. மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது எது?


Q ➤ 827. யார், ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமும் மரண இருளும் இல்லை?


Q ➤ 828. மனுஷன் தம்மோடே வழக்காடும்படி அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டாதவர் யார்?


Q ➤ 829. ஆராய்ந்து முடியாத நியாயமாய் தேவன் யாரை நொறுக்குகிறார்?


Q ➤ 830. வல்லமையுள்ளவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துப்போடுகிறவர் யார்?


Q ➤ 831. தேவன் யாருடைய கூக்குரலைக் கேட்டு வல்லமையுள்ளவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்?


Q ➤ 832. யோபு அறிவில்லாமல் பேசினார் என்று கூறியவன் யார்?


Q ➤ 833. யாருடைய வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று எலிகூ கூறினான்?


Q ➤ 834. யார், தன் பட்சமாய்ப் பேசுவார்கள் என்று எலிகூ கூறினான்?


Q ➤ 835. ஞானமுள்ள மனுஷன் தனக்குச் செவிகொடுப்பான் என்று கூறியவன் யார்?


Q ➤ 836. யாருடைய மறுஉத்தரவுகளினிமித்தம் யோபு முற்றுமுடிய சோதிக்கப்படவேண்டுமென்று எலிகூ கூறினான்?


Q ➤ 837. யோபுதம்முடைய பாவத்தோடே.........கூட்டினார் என்று எலிகூ கூறினான்?


Q ➤ 838. யோபு யாருக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்ததாக எலிகூ கூறினான்?