Tamil Bible Quiz from Job Chapter 1

Q ➤ 1.யோபுவின் ஊர் எது?


Q ➤ 2.உத்தமனும் சன்மார்க்கனுமாயிருந்தவர் யார்?


Q ➤ 3. யோபு தேவனுக்குப் பயந்து, எதற்கு விலகுகிறவராயிருந்தார்?


Q ➤ 4.யோபுக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தார்கள்?


Q ➤ 5.கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவராயிருந்தவர் யார்?


Q ➤ 6. தன் தன் நாளிலே விருந்து செய்தவர்கள் யார்?


Q ➤ 7.யோபுவின் குமாரர் விருந்து செய்யும்போது, போஜனம் பண்ணும்படி யாரை அழைப்பார்கள்?


Q ➤ 8.தன் குமாரர் விருந்துசெய்கிற நாள் முடிகிறபோது யோபு அவர்களின் இலக்கத்தின்படி எதைச் செலுத்துவார்?


Q ➤ 9. தன் குமாரர் ஒருவேளை என்ன செய்திருப்பார்கள் என்றுசொல்லி, யோபு தன் குமாரரைப் பரிசுத்தப்படுத்துவார்?


Q ➤ 10.தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது அவர்கள் நடுவிலே வந்து நின்றவன் யார்?


Q ➤ 11."நீ எங்கேயிருந்து வருகிறாய்?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 12.எங்கே உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறதாக சாத்தான் கூறினான்?


Q ➤ 13.யாரைப் போல பூமியில் ஒருவனும் இல்லையென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 14.யாருடையவைகளை வேலியடைக்கவில்லையோ?


Q ➤ 15. கர்த்தர் யோபுவின்.......... ஆசீர்வதித்ததாகச் சாத்தான் கூறினான்?


Q ➤ 16. யாருடைய சம்பத்து தேசத்தில் பெருகினதாக சாத்தான் கூறினான்?


Q ➤ 17. கர்த்தர் எதைத் தொட்டால், யோபு கர்த்தரைத் தூஷிப்பதாக சாத்தான் கூறினார்?


Q ➤ 18.யோபுவுக்கு உண்டானவையெல்லாம் யாருடைய கையிலிருக்கிறது என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 19. யார்மேல் மாத்திரம் கையை நீட்டாதிருக்க கர்த்தர் சாத்தானிடம் கூறினார்?


Q ➤ 20. யோபுவின் எருதுகளையும் கழுதைகளையும் சாய்த்துக்கொண்டு போனவர்கள் யார்?


Q ➤ 21.சபேயர் யாரைப் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்?


Q ➤ 22. யோபுவின் ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது எது?


Q ➤ 23. யோபுவின் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போனவர்கள் யார்?


Q ➤ 24. மூன்று பவுஞ்சாய் யோபுவின் ஒட்டகங்கள்மேல் விழுந்தவர்கள் யார்?


Q ➤ 25. கல்தேயர் யாரைப் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்?


Q ➤ 26. யோபுவின் பிள்ளைகள் புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது வனாந்தர வழியாய் வந்தது எது?


Q ➤ 27.யோபுவின் மூத்தகுமாரனின் வீட்டின் நாலு மூலையிலும் அடித்தது எது?


Q ➤ 28. யோபுவின் மூத்த குமாரனின் வீடு விழுந்ததினால் இறந்து போனவர்கள் யார்?


Q ➤ 29. தன் வேலைக்காரர் கூறியதைக் கேட்டபோது, தன் சால்வையைக் கிழித்து, தலையைச் சிரைத்து தரையிலே விழுந்து பணிந்தவர் யார்?


Q ➤ 30. நிர்வாணியாய் ........... வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன் என்று யோபு கூறினார்?


Q ➤ 31 "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்"- கூறியவர் யார்?


Q ➤ 32. தனக்கு நடந்த எல்லாவற்றிலும் பாவஞ்செய்யாமலும் தேவனைப்பற்றி குறைசொல்லாமலும் இருந்தவர் யார்?