Q ➤ 70. கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும் உண்டானால் என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள் என்று கூறியவர் யார்?
Q ➤ 71. அன்பினாலே யாதொரு தேறுதலும் உண்டானால் என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள் என்று கூறியவர் யார்?
Q ➤ 72. ஆவியின் யாதொரு ஐக்கியமும் உண்டானால் என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள் என்று கூறியவர் யார்?
Q ➤ 73. யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால் என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள் என்று கூறியவர் யார்?
Q ➤ 74. ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 75. பிலிப்பியர் எப்படி ஒன்றையே சிந்தித்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ 76. இசைந்த ஆத்துமாக்களாய் பிலிப்பியர் ஒன்றையே சிந்தித்து எதை நிறைவாக்க வேண்டும்?
Q ➤ 77. ஒன்றையும் எவைகளினால் செய்யக்கூடாது?
Q ➤ 78. ஒருவரையொருவர் எப்படி எண்ணவேண்டும்?
Q ➤ 79. எதினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண வேண்டும்?
Q ➤ 80. அவனவன் எவைகளை நோக்காதிருப்பானாக?
Q ➤ 81. அவனவன் எவைகளை நோக்குவானாக?
Q ➤ 82. யாரில் இருந்த சிந்தை நம்மிடத்தில் இருக்கவேண்டும்?
Q ➤ 83. தேவனுடைய ரூபமாயிருந்தவர் யார்?
Q ➤ 84. கிறிஸ்து இயேசு எதை கொள்ளையாடின பொருளாக எண்ணவில்லை?
Q ➤ 85. தம்மைத்தாமே வெறுமையாக்கினவர் யார்?
Q ➤ 86. கிறிஸ்து இயேசு யாருடைய ரூபமெடுத்தார்?
Q ➤ 87. மனுஷர் சாயலானவர் யார்?
Q ➤ 88. மனுஷரூபமாய்க் காணப்பட்டவர் யார்?
Q ➤ 89. கிறிஸ்து இயேசு எதுபரியந்தமும் கீழ்ப்படிந்தவரானார்?
Q ➤ 90. தம்மைத்தாமே தாழ்த்தினவர் யார்?
Q ➤ 91. கிறிஸ்து இயேசுவை எல்லவற்றிற்கும் மேலாக உயர்த்தினவர் யார்?
Q ➤ 92. வானோர் பூதலத்தோருடைய முழங்கால் யாவும் யாருடைய நாமத்தில் முடங்கும்?
Q ➤ 93. பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் யாருடைய நாமத்தில் முடங்கும்?
Q ➤ 94. யாரை கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்?
Q ➤ 95. யாருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்?
Q ➤ 96. பிதாவாகிய தேவன் எப்படிப்பட்ட நாமத்தை இயேசுகிறிஸ்துவுக்குத் தந்தருளினார்?
Q ➤ 97. பவுல் தூரமாயிருக்கும்போதும் கீழ்ப்படியவேண்டியவர்கள் யார்?
Q ➤ 98. பிலிப்பியர் அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் எது நிறைவேறப் பிரயாசப்படவேண்டும்?
Q ➤ 99. விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குகிறவர் யார்?
Q ➤ 100. தேவன் எதின்படி விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குகிறார்?
Q ➤ 101. தான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி யாருக்கு உண்டாயிருக்கும்?
Q ➤ 102. பவுல் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி எப்போது உண்டாயிருக்கும்?
Q ➤ 103. பிலிப்பியர் எதைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்?
Q ➤ 104. பிலிப்பியர் உலகத்திலே எதைப்போல பிரகாசித்தார்கள்?
Q ➤ 105. கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே பிலிப்பியர் எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 106. தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாயிருக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 107. பிலிப்பியர் எல்லாவற்றையும் எப்படி செய்யவேண்டும்?
Q ➤ 108. பிலிப்பியரின் விசுவாசமாகிய எவைகளின்மேல் நான் வார்க்கப்பட்டுப்போனாலும் நான் மகிழ்வேன் என்று பவுல் கூறினார்?
Q ➤ 109. நீங்களும் மகிழ்ந்து என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள் என்று கூறியவர் யார்?
Q ➤ 110. பிலிப்பியரின் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படி நம்பியிருந்தவர் யார்?
Q ➤ 111. பவுல் பிலிப்பியரிடத்தில் யாரை அனுப்பலாமென்று இயேசுவுக்குள் நம்பியிருந்தார்?
Q ➤ 112. தீமோத்தேயு பிலிப்பியரின் காரியங்களை எப்படி விசாரிப்பார்?
Q ➤ 113. பிலிப்பியரின் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு தீமோத்தேயு யாரைப்போல மனதுள்ளவன்?
Q ➤ 114. மற்றவர்களெல்லாரும் யாருக்குரியவைகளைத் தேடார்கள்?
Q ➤ 115. கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாதவர்கள் எவைகளைத் தேடுகிறார்கள்?
Q ➤ 116. தகப்பனுக்கு ஊழியஞ்செய்பவன் யார்?
Q ➤ 117. பவுலுடனேகூட ஊழியஞ்செய்தவன் யார்?
Q ➤ 118. யாருடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள் என்று பவுல் கூறினார்?
Q ➤ 119. எவைகள் இன்னபடி நடக்குமென்று அறிந்தவுடன் தீமோத்தேயுவை அனுப்புவேன் என்று பவுல் கூறினார்?
Q ➤ 120. தானே சீக்கிரத்தில் பிலிப்பியரிடத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருந்தவர் யார்?
Q ➤ 121. பவுலின் சகோதரனும், உடன் வேலையாளும் யார்?
Q ➤ 122. பவுலின் உடன்சேவகன் யார்?
Q ➤ 123. எப்பாப்பிரோதீத்து யாருடைய ஸ்தானாபதி?
Q ➤ 124. பவுலின் குறைச்சலுக்கு உதவிசெய்தவன் யார்?
Q ➤ 125. பிலிப்பியர் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவன் யார்?
Q ➤ 126. எப்பாப்பிரோதீத்து வியாதிப்பட்டதை கேள்விப்பட்டவர்கள் யார்?
Q ➤ 127. பிலிப்பியர் தன் வியாதியைக் கேள்விப்பட்டதினால் மிகவும் வியாகுலப்பட்டவன் யார்?
Q ➤ 128. வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தவன் யார்?
Q ➤ 129. எப்பாப்பிரோதீத்துவுக்கு இரங்கினவர் யார்?
Q ➤ 130. பவுலுக்கும் இரங்கினவர் யார்?
Q ➤ 131. பவுலுக்கு எது உண்டாகாதபடிக்கு தேவன் அவனுக்கு இரங்கினார்?
Q ➤ 132. பிலிப்பியர் யாரை மறுபடியும் கண்டு சந்தோஷப்பட பவுல் அவனை அனுப்பினார்?
Q ➤ 133. தன் துக்கம் குறைய எப்பாப்பிரோதீத்துவை பிலிப்பியரிடம் அனுப்பியவர் யார்?
Q ➤ 134. பவுல் யாரை அதிசீக்கிரமாய்ப் பிலிப்பியரிடத்தில் அனுப்பினார்?
Q ➤ 135. பிலிப்பியர் யாரை கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ள வேண்டும்?
Q ➤ 136. எப்பாப்பிரோதீத்துவைப்போல உள்ளவர்களை பிலிப்பியர் எப்படி எண்ணவேண்டும்?
Q ➤ 137. ஊழியத்திலே தன் பிராணனையும் எண்ணாமலிருந்தவன் யார்?
Q ➤ 138. யார் பவுலுக்குச் செய்யவேண்டிய ஊழியத்தில், எப்பாப்பிரோதீத்து அவர்கள் குறைவை நிறைவாக்கினான்?
Q ➤ 139. எப்பாப்பிரோதீத்து எதினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்?